என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீரங்கம்"

    • பெருமாள் திருமேனியில் தைலம் பூசும் முறைக்கு தைலக்காப்பு என்று பெயர்.
    • தைலக்காப்பு உலர்வதற்கு 48 நாட்கள் ஆகும்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மூலவர் ரெங்கநாதர் திருமேனி சுதையினால் (சுண்ணாம்பு மற்றும் காறை) செய்யப்பட்டதாகும். மூலவர் ரெங்கநாதருக்கு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் எதுவும் செய்யப்படுவதில்லை. இந்த சுதை திருமேனியை ஆண்டுக்கு இருமுறை பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படும் தனித்தைலத்தை பூசி பாதுகாத்து வருகின்றனர். இந்த தைலம் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களோடு, நாட்டு சக்கரை உள்ளிட்ட வேறு சில பொருட்களும் சேர்த்து பாரம்பரிய முறையில் காய்ச்சி எடுத்து பெருமாள் திருமேனியில் பூசப்படுகிறது.

    பெருமாள் திருமேனியில் தைலம் பூசும் முறைக்கு தைலக்காப்பு என்று பெயர். தைலக்காப்பின் போது பெருமாளின் அனைத்து வஸ்திரங்களும், திருவாபரணங்களும் களையப்பட்டு திருமேனி முழுவதும் தைலம் பூசப்படும். தைலக்காப்பு உலர்வதற்கு 48 நாட்கள் ஆகும். அதுவரை பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்படும். தைலக்காப்பு உலர்ந்தபின் பெருமாளுக்கு வஸ்திரங்கள், நகைகள் அணிவிக்கப்பட்டு திரை அகற்றப்படும்.

    இந்த ஆண்டுக்கான இரண்டாவது தைலகாப்பு கடந்த செப்டம்பர் 15-ந் தேதி மூலவர் பெரிய பெருமாள் மீது பூசப்பட்டது. இதனை தொடர்ந்து பெருமாளின் திருமுகம் தவிர்த்து திருமேனியின் இதர பகுதிகள் மெல்லிய துணிகளால் தற்காலிக திரையிட்டு மறைக்கப்பட்டிருந்தன.

    இந்நிலையில் தைலக்காப்பு உலர்ந்துவிட்டதை அர்ச்சகர்கள் உறுதி செய்து கோவில் நிர்வாகத்திற்கு முறைப்படி தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று காலை பூஜைகளுக்குப்பின் பெருமாள் திருமேனி மீது வஸ்திரங்கள், திருவாபரணங்கள் அணிவிக்கபட்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் திருமேனியை மறைத்துக் கட்டப்பட்டுள்ள திரை அகற்றப்பட்டது. தற்போது மூலவர் ரெங்கநாதரையும் அவரது திருவடியையும் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர்.

    • ஊஞ்சல் உற்சவம் வருகிற 4-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
    • ஊஞ்சல் உற்சவ நாட்களில் மூலவர் சேவை கிடையாது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்ஸவம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஆண்டுக்கான ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வருகிற 4-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவத்தையொட்டி ரெங்கநாச்சியார் நேற்று மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணிவரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளினார்.

    பின்னர் இரவு 9 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்திலிருந்து புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். ஊஞ்சல் உற்சவ நாட்களில் மாலை 3 மணிமுதல் மாலை 5.30 மணிவரை மூலவர் சேவை கிடையாது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • காவிரித்தாய்க்கு மகா ஆரத்தி நடந்தது.
    • காவிரி தாய் உருவ சிலைக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    அகிலபாரதிய சன்னியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளை உள்ளிட்ட நதிநீர் பாதுகாப்பு விழிப்புணர்வு ஆன்மிக சேவை அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில் புனித நதியான காவிரி உற்பத்தியாகும் கர்நாடக மாநிலம் குடகுமாவட்டம் தலைக்காவிரியில் தொடங்கி காவிரியாறு வங்கக்கடலில் கலக்கும் பூம்புகார் வரை நதிநீரின் புனிதத்தை பாதுகாக்கவும், நதி நீர் மாசுபடாமல் பாதுகாக்கவும் வலியுறுத்தி சிறப்பு ரதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வகையில் 12-ம் ஆண்டு ரதயாத்திரை குடகுமலையில் அகிலபாரதிய சன்னியாசிகள் சங்க துணைத்தலைவர் சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமையில் கடந்த 21-ந் தேதி தொடங்கியது. இந்த ரதயாத்திரை கடந்த 24-ந் தேதி ஒகனேக்கல் பகுதியில் தமிழக எல்லைப்பகுதிக்கு வந்தது. அங்கிருந்து காவிரிக்கரையோர புனித தீர்த்தத் தலங்களில் ரதத்தில் வரும் காவிரித்தாய் சிலைக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, அந்தந்த பகுதிகளில் காவிரியாற்றுக்கு மகாஆரத்தி காட்டப்பட்டு வருகிறது.

    இவ்வகையில் நேற்று மாலை ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்திற்கு வந்த காவிரி ரதயாத்திரைக்கு விஷ்வ இந்து பரிஷத், உள்ளூர் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ரதயாத்திரையில் வந்த விநாயகர், அகஸ்தியர், காவிரித்தாய் சிலைக்கு அம்மாமண்டபம் படித்துறை காவிரியில் துறவியர் மற்றும் சன்னியாசிகள் அபிஷேக, ஆராதனையுடன் கூட்டுவழிபாடு நடத்தினர்.

    தொடர்ந்து காவிரித்தாய்க்கு மகா ஆரத்தி நடந்தது. நிகழ்ச்சிகளில் சன்னியாசிகள் சங்க இணைச்செயலாளர் சிவராமானந்தா, ரதயாத்திரை ஒருங்கிணைப்பாளர் கோரக்கானந்தா, தமிழ்நாடு ரதயாத்திரை தலைவர்மேகானந்தா, விஷ்வ இந்து பரிஷத் தென்தமிழ்நாடு அமைப்பு செயலாளர் சேதுராமன், மன்னார்குடி செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர், பா.ஜனதா மாவட்ட ஆன்மிக பிரிவு தீப்பு, திருவேங்கடயாதவ் உள்பட பல்வேறு ஆன்மிக சேவை அமைப்புகளைச் சேர்ந்த துறவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த காவிரி ரதயாத்திரை கல்லணை, திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம் வழியாக வருகிற 10-ந் தேதி பூம்புகாரில் நிறைவடையும் என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

    முன்னதாக பெட்டவாய்த்தலை வந்த காவிரி யாத்திரைக்கு ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். காவிரி தாய் உருவ சிலைக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து காவல்காரபாளையம், திருப்பராய்த்துறை உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர்.

    • டிசம்பர் 23-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.
    • ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 23-ந் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.

    ஜனவரி 1-ந் தேதி மோகினி அலங்காரமும், 2-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல்(பரமபதவாசல்) திறப்பும் நடைபெறுகிறது. 8-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 9-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11-ந் தேதி தீர்த்தவாரியும், 12-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

    இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று(திங்கட்கிழமை) பகல் 12 மணி முதல் பகல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேளம், நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி மரியாதை செலுத்தும்.

    அப்போது முகூர்த்தக்காலில் புனிதநீர் ஊற்றி சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் முகூர்த்தக்காலை கோவில் பணியாளர்கள் நடுவார்கள். இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ஜனவரி 2-ந்தேதி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
    • ஜனவரி 11-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 23-ந் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது. ஜனவரி 1-ந் தேதி மோகினி அலங்காரமும், 2-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    8-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 9-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11-ந் தேதி தீர்த்தவாரியும், 12-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று 12.30 மணியளவில் நடைபெற்றது.

    அப்போது, கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேளம், நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி மரியாதை செலுத்தின. அதுசமயம் முகூர்த்தக்காலில் புனிதநீர் ஊற்றி சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் முகூர்த்தக்காலை கோவில் பணியாளர்கள் நட்டனர்.

    இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • புனிதநீர் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.
    • புனிதநீர் தங்கக்குடத்தில் எடுத்து வரப்படும்.

    ஐப்பசி மாதம் (துலா மாதம்) முழுவதும் காவிரி ஆற்றின் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தினமும் காலை புனிதநீர் தங்கக்குடத்தில் எடுக்கப்பட்டு யானை மீது வைத்து ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்படும்.

    அந்த புனிதநீர் நம்பெருமாள் திருவாராதனம் மற்றும் திருமஞ்சனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று துலா மாத நிறைவு, கார்த்திகை மாதப் பிறப்பு மற்றும் முடவன் முழுக்கு நாளையொட்டி காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளிக்குடங்களில் புனிதநீர் சேகரித்து யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது.

    • ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர்பெருமாள் கோவில் சகஸ்ர தீப மகோத்சவம் நடைபெற்றது
    • 21-ம் ஆண்டு சகஸ்ரதீப வழிபாடு நடந்தது.

    திருச்சி

    ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலில் சகஸ்ரதீபம் மற்றும் சிறப்பு கூட்டு வழிபாடு நடைபெற்றது.

    கார்த்திகை மாதம் என்றாலே விளக்குகள் ஏற்றி வழிபடுவது ஐதீகம். குறிப்பாக வைணவக் கோவில்களில் இம்மாதத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றி வழிபடும் சகஸ்ரதீப வழிபாடு நடைபெறும். இதனால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அந்த அடிப்படையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான காட்டழகிய சிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சன்னதியில் 21-ம் ஆண்டு சகஸ்ரதீப வழிபாடு நடந்தது. இந்த விளக்கேற்றும் நிகழ்வுகளை ஸ்ரீரங்கம் நகர நல சங்கத்தின் மக்கள் செய்தி தொடர்பாளர் மேஜர் டோனர் ரோட்டேரியன் டாக்டர் கே.சீனிவாசன் விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக கோவில் மண்டபங்கள், பிரகாரங்கள், நந்தவனம் உள்பட கோவில் வாசல் முதல் மூலஸ்தானம் வரை ஆயிரக்கணக்கான விளக்குகளை பக்தர்கள் ஏற்றி வைத்து வழிபட்டனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது.

    இதையொட்டி காட்டழகிய சிங்கர் பெருமாள் கோவில் ஆஸ்தான நாதஸ்வர வித்துவான் திருக்கண்ணபுரம் டாக்டர் டி.எஸ்.கே.சவுரிராஜன் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் திருமஞ்சனம் ஆன்மீக சொற்பொழிவு, நாதஸ்வர இசை நிகழ்ச்சி, சங்கீத ஆராதனை மற்றும் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை மாருதி ராமசாமி செய்திருந்தார்.

    • வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 22-ந்தேதி முதல் ஜனவரி 12-ந்தேதி வரை நடக்கிறது.
    • ஜனவரி 2-ந்தேதி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 23-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.

    ஜனவரி 1-ந்தேதி மோகினி அலங்காரமும், 2-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 8-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 9-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11-ந்தேதி தீர்த்தவாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

    இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும்நிகழ்ச்சி கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது.
    • சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருகிற 8-ந் தேதி கார்த்திகை தீப திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலின் கார்த்திகை கோபுரம் அருகே சொக்கப்பனை அமைக்கப்பட்டு கொளுத்தப்படும். நம்பெருமாள் கதிர் அலங்காரத்தில் எழுந்தருளி அதனை கண்டருளுவார்.

    இதன்படி கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சொக்கப்பனை பந்தல் அமைக்க முகூர்த்தக்கால் நடும் விழா கார்த்திகை கோபுரம் அருகே நேற்று மாலை நடைபெற்றது. இதில் சுமார் 20 அடி உயரம் உள்ள தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை மற்றும் பூமாலை உள்ளிட்ட மங்கலப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு, கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    இதையடுத்து முகூர்த்தக்காலை கோவில் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லெட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின. இந்நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த பந்தக் காலை சுற்றி சுமார் 5 அடி அகலத்திற்கும், 20 அடி உயரத்திற்கும் சொக்கப்பனை அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    • திருமலைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நீண்ட காலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்தது.
    • தற்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

    கி.பி. 1320-ம் ஆண்டு நடந்த மாற்று மதத்தவரின் படையெடுப்பின் காரணமாக சுமார் 40 ஆண்டு காலம் ஸ்ரீரங்கம் கோவில் நம்பெருமாள் திருமலை கோவிலில் வைத்து பாதுகாக்கப்பட்டார். இவ்வாறு அவர் வைக்கப்பட்டிருந்த மண்டபம் திருமலை கோவிலில் ரெங்கநாயகலு மண்டபம் என்னும் பெயரில் இன்றும் உள்ளது. நம்பெருமாள் திருமலையில் இருந்த ரெங்கநாயகலு மண்டபத்தில் தான் அந்த கோவிலின் முக்கிய நிகழ்வுகள் பல இன்றளவும் நடைபெறுகின்றன.

    மேலும் திருமலைக்கும், ஸ்ரீரங்கத்துக்கும் நீண்ட காலமாக மங்கல பொருட்கள் பரிவர்த்தனை இருந்தது. காலப்போக்கில் அவை நின்று போயின. தற்போது அவை ஒவ்வொன்றாக புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஆண்டுதோறும் கைசிக ஏகாதசி நாளில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் இருந்து புது வஸ்திர மரியாதைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி இந்த ஆண்டு ரெங்கநாதர் மூலவர், நம்பெருமாள் உற்சவர், ஸ்ரீரெங்கநாச்சியார் மற்றும் ராமானுஜருக்கு வஸ்திரங்கள், குடைகள், மரியாதைகளை திருமலை திருப்பதி தேவஸ்தான கண்காணிப்பாளர் உமாமகேஸ்வரரெட்டி, சொர்ணலதாரெட்டி ஆகியோர் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எடுத்து வந்தனர்.

    இதைத்ெதாடர்ந்து நேற்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் உள்ள ஸ்ரீரங்க விலாச மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த திருப்பதி வஸ்திர மரியாதை காலை 7 மணிக்கு புறப்பட்டு வீதி உலா வந்தது. பின்னர் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் இருந்து வஸ்திர மரியாதையை கருட மண்டபத்தில் ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அர்ச்சகர் சுந்தர்பட்டர், உள்துறை கண்காணிப்பாளர் மோகன், உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் பச்சை கற்பூரப்பொடியை நம்பெருமாள் மீது தூவினர்.
    • கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா நேற்று முதல் இன்று(திங்கட்கிழமை) அதிகாலை வரை நடைபெற்றது. இதையொட்டி நேற்று முதல் புறப்பாடாக, உற்சவ நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சந்தன மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார். அங்கு காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நம்பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் சந்தன மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    2-வது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு அர்ச்சுன மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், அரையர் சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்பித்தனர்.

    இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2 மணிவரை நம்பெருமாள் முன் கைசிக புராணம் எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையோடு பெருமாள் முன் பட்டர் படித்தார். பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 2-ம் பிரகாரத்தில் மேலப்படி வழியாக காலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை கண்டருளி காலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். அவ்வாறு நம்பெருமாள் படியேறியபோது பக்தர்கள் பச்சை கற்பூரப்பொடியை நம்பெருமாள் மீது தூவினர். இந்த கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.

    கைசிக ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவில் இரந்து விடிய, விடிய பக்தர்கள் நம்பெருமாளை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • நம்பெருமாளுக்கு திருவந்திகாப்பு எனப்படும் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி முதலாம் புறப்பாடாக உற்சவர் நம்பெருமாள் காலை 8 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு காலை 8.30 மணிக்கு சந்தனு மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார்.

    அங்கு நம்பெருமாள் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மாலை 4.30 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    இதைத்தொடர்ந்து சொக்கப்பனை கண்டருள மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்படும் முன் கோவில் தங்க கொடிமரம் அருகே உத்தமநம்பி சுவாமிகள் இடைவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி மாலை 6 மணிக்கு நடைபெற்றது. இடைவிளக்கு எடுத்த உத்தமநம்பி சுவாமிகளுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை, மரியாதை செய்யப்பட்டது.

    இதையடுத்து 2-ம் புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு கதிர் அலங்காரத்தில் கார்த்திகை கோபுரத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு கோபுரத்திற்கு முன்பு 20 அடி உயரத்திற்கு பனை ஓலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனை பந்தலை நம்பெருமாள் வலம் வந்து சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு எதிரே காத்திருந்தார். இதையடுத்து இரவு 8.30 மணிக்கு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    சொக்கப்பனை தீபத்தை கண்டருளிய பின்னர் நந்தவனம் தோப்பு வழியாக தாயார் சன்னதிக்கு நம்பெருமாள் சென்றார். அங்கு நம்பெருமாளுக்கு திருவந்திகாப்பு எனப்படும் திருஷ்டி கழிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சந்தனு மண்டபத்திற்கு இரவு 9.15 மணிக்கு சென்றார். அங்கு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் முன் ஸ்ரீமுகப்பட்டயம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகள் குறித்து படிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து திருக்கைத்தல சேவைக்கு பிறகு நம்பெருமாள் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ×