என் மலர்
நீங்கள் தேடியது "கண்மாய்கள்"
- திருமங்கலம் தாலுகாவில் கண்மாய்கள் நிரம்பின.
- தொடர் மழையால் திருமங்கலம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வந்தது. இதனால் கண்மாய்களுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில் மழை மற்றும் வைகையில் திறந்துவிடப்பட்ட தண்ணீ ரால் இந்ததாலுகாவில் அமைந்துள்ள பொன்னமங்கலம் பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.
பொன்னமங்கலம் கிராமத்திற்கு அருகேயுள்ள ஜோதிமாணிக்கம் கண்மாய் நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக கடந்த ஒருவாரகாலமாக பொன்னமங்கலம் கண்மாய்க்கு வந்து கொண்டிருந்தது.
இதனால் நேற்று முன்தினம் பொன்ன மங்கலம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. தொடர்ந்து கண்மாய் உபரிநீர் கண்மாயின் கிழக்குப்பகுதி வழியாக மறுகால் பாய்ந்து வெளியேறி அருகேயுள்ள ஜோசியர் ஆலங்குளம் கண்மாய்க்கு செல்லத் தொடங்கியுள்ளது.
இதே போல் பொன்ன மங்கலம் கிராமத்தின் அருகேயுள்ள மேலேந்தல் கண்மாயும் நிரம்பி வழிகிறது. இந்த கண்மாய்க்கு பொன்னமங்கலம் கண்மாயின் மேற்குபகு தியிலுள்ள மறுகால் மூலமாக வெளியேறும் நீர் வருவதால் மேலேந்தல் கண்மாயும் நேற்று நிரம்பியது. இந்த கண்மாயின் உபரிநீர் மறுகால் வழியாக உரப்பனூர் கண்மாக்கு செல்கிறது. இது தவிர பொன்னமங்கலத்தினை அடுத்துள்ள திருமங்கலம் தாலுகாவின் கடைசி எல்லை கிராமமான வாகைகுளம் கிராமத்தில் உள்ள வாகைகுளம் கண்மாயும் நிரம்பியுள்ளது. தொடர் மழையால் திருமங்கலம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- வைகை ஆற்று தண்ணீரை கண்மாய்களுக்கு திருப்பி விட வேண்டும் என பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
- கால்வாய் முகப்பு மேடாக இருப்பதால் கண்மாய்க்கு பல ஆண்டுகளாக வைகை தண்ணீர் வரவில்லை.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கீழமேல்குடி, கால்பிரவு கிருங்கா கோட்டை, நாட்டார் கால்வாய் மற்றும் இதர பாசன கால்வாய் விவசாயிகள் சார்பில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
கிருங்காக்கோட்டை கண்மாய்க்கு வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் வரும் கால்வாயின் முகப்பு அன்னியநேந்தல் அருகில் மிளகனூர் கால்வாய்க்கு அருகில் உள்ளது. மேற்படி கண்மாய்க்கு வைகை தண்ணீர் வரும் கால்வாய் முகப்பு மேடாக இருப்பதால் மேற்கண்ட கண்மாய்க்கு பல ஆண்டுகளாக வைகை தண்ணீர் வரவில்லை.
தற்சமயம் வைகை ஆற்றில் அதிகளவு தண்ணீர் வந்து அனைத்து கண்மாய்களும் நிரம்பிய நிலையில் அனைத்து கால்வாய் முகப்புகளும் அடைக்கப்பட்டு வைகை தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை மானாமதுரை, கீழமேல்குடி, கால்பிரவு கிருங்காகோட்டை, நாட்டார் கால்வாய் வழியாக நிரம்பாத கண்மாய்களுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டபோது, அவர்கள் கால்வாயின் வழித்தடங்களை நேரில் பார்வையிட்டு மேற்படி கால்வாய் முகப்பினை சரி செய்ய வந்த நிலையில் மிளகனூர் கிராமத்தினர் வாக்குவாதம் செய்து வேலை செய்யவிடாமல் தடுத்துவிட்டனர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மேற்படி கால்வாய் முகப்பினை சரி செய்து கால்வாய் வழியாக கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மானாமதுரை அருகே 20 ஆண்டுகளுக்கு பிறகு 4 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்கிறது.
- தண்ணீர் செல்லும் கால்வாய் முகப்பு மேடாகியதால் குறிப்பிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல இயலாதநிலை இருந்து வருகிறது.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை 20 ஆண்டுகளாக தண்ணீர் செல்லாத கண்மாய்களுக்கு வைகை ஆற்றில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தொடர் முயற்சியின் காரணமாக 4 கண்மாய்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
வைகை ஆற்றில் கடந்த 6 மாத காலமாக தண்ணீர் நிற்காமல் சென்று கொண்டிருப்பது வரலாற்று உண்மையாகும். கடந்த கால வரலாற்று நிகழ்வுகளில் இது போன்று வைகை ஆற்றில் தண்ணீர் சென்றது கிடையாது என்று பெரிய வர்கள் பெருமிதத்தோடு கூறுகிறார்கள்.
தண்ணீர் செல்லும் கால்வாய் முகப்பு மேடா கியதால் குறிப்பிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல இயலாத நிலை இருந்து வருகிறது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியிடம் சங்க பொறுப்பாளர் காசிராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் தண்டியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் வீரபாண்டி, செயலாளர் மோகன், மானாமதுரை ஒன்றிய தலைவர் பரமாத்மா, செயலாளர் முத்துராமலிங்கம், கீழமேல்குடி வெள்ளமுத்து, கீழமேல்குடி ஊராட்சி மன்றததலைவர் தர்மராமு மற்றும் கிராம பெரியவர்கள் வைகை ஆற்றில் வெள்ளமாக தண்ணீர் சென்று கொண்டிருக்கும் போது கீழ்மேல் குடி கண்மாய், மானாமதுரை கண்மாய், கால்பிரவு கண்மாய், கிருங்காகோட்டை கண்மாய் ஆகிய 4 கண்மாய்களுக்கும் தண்ணீர் செல்லாத அவல நிலையை எடுத்து கூறி இந்த கண்மாய்களுக்கு தண்ணீர் விட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் முயற்சியால் தற்போது அதற்கான வழிவகை ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் இருந்து ஒரு கால்வாய் செல்கிறது. தூர்ந்து போயுள்ள அந்த கால்வாயை சீரமைத்து அதன் வழியாக தற்போது தண்ணீர் சென்று கொண்டி ருக்கிறது.
இதற்காக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் காசிராஜன் நன்றி தெரிவித்தார்.
- விருதுநகரில் கண்மாய்கள் மராமத்து பணிக்கு ஜே.சி.பி. எந்திரங்களுக்கான உடமை ஆவணங்களை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்மாய்கள் மராமத்து, வரத்து கால்வாய்கள் தோண்டுதல், தனியார் நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல், பண்ணை குட்டைகள் அமைத்தல் போன்ற பணி களை செய்வதற்கு ரூ72 லட்சம் மதிப்பில் இண்டஸ் இன்ட் வங்கி-பிரதான் மாவட்ட திட்டத்தின் கீழ் 2 ஜே.சி.பி எந்திரங்களுக்கான உடமை ஆவணங்களை கலெக்டர் ஜெயசீலன் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வழங்கி விவசாயிகளின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
விருதுநகர் மாவட்டம் முன்னேற விழைகிற மாவட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. அதனடிப்படையில் இண்டஸ் இன்ட் வங்கி-பிரதான் மாவட்ட திட்டம் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 2022 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கண்மாய்கள் மராமத்து, வரத்துக்கால்வாய்கள் தோண்டுதல், தனியார் நிலங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றுதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இனிவரும் காலங்களில் மேற்குறிப்பிட்ட பணிகளை செய்வதற்கு ரூ.72லட்சம் மதிப்பில் இண்டஸ் இன்ட் வங்கி- பிரதான் மாவட்ட திட்டத்தின் கீழ் 2 ஜே.சி.பி. எந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள விவசாயிகள், விவசாயிகள் சங்கங்கள் பிரதான் நிறுவனத்திற்கு, 115/5A-மாருதி நகர், கச்சேரி ரோடு, விருதுநகர் - 626,001 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது 94451-23288 வாட்ஸ்-அப் எண்ணுக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதான் நிறுவன அணி தலைவர் சீனிவாசன், பொறியியல் ஒருங்கி ணைப்பாளர் கனகவள்ளி, வேளாண் ஒருங்கிணைப்பாளர் ஆதிநாராயணன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
- கண்மாய்கள், குளங்கள் வறண்டதால் அபிராமம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
- அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அதனை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடந்த ஆண்டு பருவ மழை யை நம்பி நெல், மிளகாய் பருத்தி. மற்றும் சிறுதானி யங்கள் உள்பட சுமார் 25 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்தனர் .
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் அபிராமம் பகுதியில் உள்ள கண்மாய், குளங்கள் வறண்டு காணப்படுவதால் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. மேலும் அபிராமம், கமுதி பகுதியை சுற்றியுள்ள நீர்வழித்தடங் களான மலட்டாறு, குண்டாறு.பரளையாறு கிருதுமால் நதி நீர்நிலை கால்வாய்களும் தண்ணீர் வராததால் வறண்டு காணப்படுவதால் அதனை சுற்றியுள்ள கண்மாய்களும் வறண்டு காணப்படுகிறது.
தற்போது உள்ள சூழ் நிலையே தொடருமானால் பருவமழை தொடங்குவதற்கு முன் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் எனவே தண்ணீர் பற்றாக்குறையை போக்க அதிகாரிகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.