search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா"

    • முன்னேற்றம் கண்டு டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
    • யஷஸ்வி ஜெய்ஸ்வால் எட்டாவது இடத்தில் உள்ளார்.

    ஐசிசி டி20 ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறந்து விளையாடிய இந்திய வீரர்கள் பலர் ஐசிசி ரேங்கிங்கில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான சமீபத்திய டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. மேலும், ஹர்திக் பாண்டியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்து விளங்கினார். இதே போன்று இளம் இந்திய அணி வீரர் திலக் வர்மா ஐசிசி டி20 ஆடவர் பேட்டிங்கில் டாப் 10 பட்டியலில் நுழைந்துள்ளார்.

    இரண்டு சதங்கள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் 280 ரன்களை குவித்து அசத்திய திலக் வர்மா கிட்டத்தட்ட 69 இடங்கள் முன்னேற்றம் கண்டு டாப் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.

    டாப் 10 டி20 பேட்டர்கள் பட்டியலில் திலக் வர்மா தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் சூர்யகுமார் யாதவ் நான்காவது இடத்தில் உள்ளார். இவர்கள் இருவர் தவிர டாப் 10 பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் எட்டாவது இடத்தில் உள்ளார். 

    • இதுவரை 26 கோல்கள் அடித்துள்ள இந்தியா 2 கோல் மட்டுமே வாங்கியுள்ளது.
    • கடைசி லீக்கில் வீழ்த்திய ஜப்பானை ஒருநாள் இடைவெளியில் மீண்டும் சந்திக்கிறது.

    ராஜ்கிர்:

    8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா (5 வெற்றி) முதலிடமும், சீனா (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், மலேசியா (2 வெற்றி, 3 தோல்வி) 3-வது இடமும், ஜப்பான் (ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) 4-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

    தென்கொரியா (ஒரு வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வி) 5-வது இடமும், தாய்லாந்து (ஒரு டிரா, 4 தோல்வி) கடைசி இடமும் பெற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தன.

    இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.45 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 11-வது இடத்தில் உள்ள ஜப்பானை எதிர்கொள்கிறது.

    சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி லீக்கில் தென்கொரியாவுக்கு (3-2) எதிரான ஆட்டத்தில் மட்டுமே போராடி வென்றது. ஜப்பான் (3-0) உள்பட மற்ற அணிகளை துவம்சம் செய்தது. இதுவரை 26 கோல்கள் அடித்துள்ள இந்தியா 2 கோல் மட்டுமே வாங்கியுள்ளது. கடைசி லீக்கில் வீழ்த்திய ஜப்பானை ஒருநாள் இடைவெளியில் மீண்டும் சந்திக்கிறது.

    மிசுகி மொரிடா தலைமையிலான ஜப்பான் அணி இந்த தொடரில் மலேசியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது. மற்ற ஆட்டங்களில் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. இருப்பினும் முக்கியமான இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேற ஜப்பான் எல்லா வகையிலும் போராடும்.

    அதேநேரத்தில் சொந்தமண்ணில் தங்களது ஆதிக்கத்தையும், வெற்றி உத்வேகத்தையும் தொடரச் செய்து இறுதிபோட்டிக்குள் அடியெடுத்து வைக்க இந்திய அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    போட்டி குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஹரேந்திர சிங் கூறுகையில், 'நமது அணி ஏற்கனவே சரியான பாதையில் பயணித்து வருகிறது. நம்முடைய வீராங்கனைகள் முழு திறமையை வெளிப்படுத்துவதற்கு கொஞ்சம் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் அணிக்கு நல்ல முடிவை அளிக்கும் திறன் படைத்தவர்கள்.

    வீராங்கனைகளுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால் எதிரணியின் கோல் எல்லைக்குள் பறக்கும் குதிரை போல் செயல்பட முயற்சிக்காமல், புத்தர் போல் அமைதியாகவும், கவனமாகவும் செயல்பட வேண்டும். நம் வீராங்கனைகள் இந்த போட்டி தொடரில் சில சூப்பரான கோல்கள் அடித்து இருக்கின்றனர். இருப்பினும் இன்னும் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டும். முன்கள வீராங்கனை தீபிகா (நடப்பு தொடரில் 10 கோல் அடித்துள்ளார்) விளையாடும் விதம் அருமை. அவரால் இன்னும் நிறைய கோல்கள் அடிக்க முடியும். அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் பிரகாசமான எதிர்காலம் உள்ளது.' என்றார்.

    முன்னதாக பிற்பகல் 2.15 மணிக்கு நடைபெறும் முதலாவது அரைஇறுதியில் சீனா-மலேசியா அணிகள் சந்திக்கின்றன. போட்டிகளை டி.டி.ஸ்போர்ட்ஸ் மற்றும் சோனி ஸ்போர்ட்ஸ் டென் 1 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    • நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றி பெற்றது.
    • இதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.

    புவனேஸ்வர்:

    பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு சார்பில் பிருத்வி, ஆகாஷ் மற்றும் அக்னி உள்ளிட்ட ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

    சமீப காலமாக நீண்டதூர ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் செய்ற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய அடுத்த தலைமுறை உபகரணங்களை தயாரிப்பதில் தற்போது டி.ஆர்.டி.ஓ. கவனம் செலுத்தி வருகிறது.

    இதற்கிடையே, டி.ஆர்.டி.ஓ. தயாரித்த 1,500 கி.மீ. தூரம் இலக்கைச் சென்று தாக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஒடிசா கடற்கரை அருகே உள்ள சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

    இந்த ஏவுகணை ஐதராபாத்தில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் ஏவுகணை வளாக ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்டது. மூத்த டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முன் நடத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றிகரமான முடிவுகளை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த ஏவுகணை சோதனை வெற்றி அடைந்தது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து நீண்ட தூர ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தி இந்தியா ஒரு பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இந்த குறிப்பிடத்தக்க சாதனையின் மூலம், மேம்பட்ட ராணுவ தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

    • இந்தியாவை வல்லரசுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
    • இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் வரை அதிகரிக்கிறது.

    உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது, உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இருப்பதற்கு இந்தியாவுக்கு தகுதி உள்ளது என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ரஷியா தொடர்ந்து பல்வேறு வழிகளில் இந்தியாவுடனான உறவை வளர்த்து வருவதாக தெரிவித்தார்.

    "பில்லியன் கணக்கான மக்கள் தொகை, உலகின் அனைத்து பொருளாதாரங்களிலும் வேகமான வளர்ச்சி, பண்டைய கலாச்சாரம் மற்றும் வளர்ச்சிக்கான நல்ல வாய்ப்புகள் கொண்ட இந்தியாவை வல்லரசுகளின் பட்டியலில் சேர்க்க வேண்டும்."

    "நாங்கள் இந்தியாவுடன் பல வழிகளில் உறவை வளர்த்து வருகிறோம். இந்தியா தலைசிறந்த நாடு. தற்போது மக்கள் தொகை அடிப்படையில் 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு வசிக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 10 மில்லியன் வரை அதிகரிக்கிறது."

    "எங்களது உறவு மற்றும் கூட்டணி எந்த வேகத்தில் வளர்ச்சி பெறும் என்பது இன்றைய கள எதார்த்தத்தை சார்ந்த இலக்கை கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் எங்ளிடையே ஒத்துழைப்பு பல மடங்கு அதிகரித்து வருகிறது," என்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கூறினார்.

    • பாகிஸ்தான் செல்லுமா என்பது கேள்வி குறியாகவே இருந்து வந்தது.
    • அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் நடைபெறாமல் இருந்தது.

    பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. பாகிஸ்தான், இந்தியா உட்பட எட்டு அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன. இந்த தொடருக்காக இந்தியா அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது கேள்வி குறியாகவே இருந்து வந்தது.

    இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008 கடைசியாக பாகிஸ்தானில் விளையாடியது. 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி பாகிஸ்தான் சென்று விளையாடவில்லை. இரு அணிகளுக்கு இடையிலான நேரடி தொடர் அரசியல் மற்றும் பாதுகாப்பு ரீதியான காரணங்களால் நடைபெறாமல் இருந்தது.

    ஐ.சி.சி. நடத்தும் தொடர்களில் மட்டுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாடுவதற்காக ஹைப்ரிட் முறை பின்பற்றப்பட இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பி.சி.சி.ஐ. சார்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து பி.சி.சி.ஐ. வட்டாரத்தை சேர்ந்த ஒருவர் கூறும் போது, "இது தான் எங்கள் முடிவு, அதில் எந்த மாற்றமும் இல்லை. நாங்கள் எங்களது அனைத்து போட்டிகளையும் துபாய்க்கு மாற்ற அவர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்," என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதனால் இந்தியா விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறும் என்றும் இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று தெரிகிறது. 

    • பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வெளிப்படும் என்று தெரிவித்துள்ளார்.
    • விராட் கோலி இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார்?

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி இந்திய அணியில் 2027 ஆம் ஆண்டு வரை நிச்சயம் விளையாடுவார் என்று ஜோதிடர் ஒருவர் கணிப்பு தெரிவித்துள்ளார். மேலும், விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் இம்மாத இறுதியில் துவங்க இருக்கும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் வெளிப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    தனியார் செய்தி நிறுவனம் நடத்திய கிரிக்கெட் மற்றும் ஜோதிடம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லபோ, "என்னிடம் சமீப காலங்களில் அதிகளவு முன்வைக்கப்படும் கேள்வி, விராட் கோலி இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார்? என்பது தான்."

    "இந்த கேள்வி அன்பும், ஆர்வத்தின் காரணமாகவே வெளிப்படுகிறது. மக்கள் விராட் கோலி இன்னும் எவ்வளவு காலம் விளையாடுவார், அவர் விளையாடுவதை இன்னும் எவ்வளவு காலம் கண்டுகளிக்க முடியும் என்பதை அறிந்து கொள்ள விரும்புகின்றனர்."

    "இதனால் விராட் கோலி ரசிகர்கள் அனைவருக்கும், நான் ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். உங்களுக்கு இதை மட்டும் உறுதியாக கூறுகிறேன். விராட் கோலி 2027 ஆம் ஆண்டு வரை நிச்சயம் விளையாடுவார். விராட் கோலியின் சிறப்பான ஆட்டம் இனிதான் வெளிப்பட போகிறது," என்று தெரிவித்தார்.

    • காற்று மாசு நிறைந்த நகரங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.
    • அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் அதிக காற்று மாசு கொண்ட பத்து நகரங்கள்.

    இந்தியாவில் அதிக காற்று மாசு நிறைந்த நகரமாக டெல்லி மாறியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்திய அளவில் அதிக காற்று மாசு நிறைந்த நகரங்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

    எனர்ஜி அன்ட் க்ளீன் ஏர் என்ற ஆராய்ச்சிக்கான சிந்தனைக் குழுவின் (CREA) மேற்கொண்ட ஆய்வின்படி, அக்டோபர் மாதத்தில் இந்தியாவில் அதிக காற்று மாசு கொண்ட பத்து நகரங்களும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) அமைந்துள்ளன.

    இந்த நகரங்களில் காசியாபாத் (கன மீட்டருக்கு 110 மைக்ரோகிராம்), முசாபர்நகர் (103), ஹாபூர் (98), நொய்டா (93), மீரட் (90), சார்க்கி தாத்ரி (86), கிரேட்டர் நொய்டா (86), குருகிராம் (83), மற்றும் பகதூர்கர் (83) ஆகியவை அடங்கும்.

    டெல்லியின் காற்று மாசு அக்டோபர் மாத சராசரி அளவு செப்டம்பர் மாத சராசரி அளவான 43 மைக்ரோகிராம் கன மீட்டரை விட 2.5 மடங்கு அதிகமாகும்.

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.
    • இலங்கை 3-வது இடத்திலும் நியூசிலாந்து 4-வது இடத்திலும் உள்ளது.

    துபாய்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது. இந்த தோல்வியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

    இந்தியா 3 போட்டியிலும் தோற்றதால், ஆஸ்திரேலியா முதல் இடத்துக்கு முன்னேறியது. 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வி, ஒரு டிரா என 58.33 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

    இலங்கை 3-வது இடத்திலும், இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (54.55 சதவீதம்) என 4-வது இடத்தில் உள்ளது. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 5, 6, 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி விளையாட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற வேண்டும். 5 போட்டிகளில் 4-ல் வெற்றியும், 1-ஐ சமன் செய்தால் மட்டுமே இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேற முடியும்.

    • நாடுகளிடையே உண்மையான நல்லெண்ணமும் விருப்பமும் உள்ளது.
    • அந்த உணர்வைப் பயன்படுத்திக் கொள்வது முக்கியம்.

    மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாடுகள் பயணத்தின் அங்கமாக முதலில் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு அங்குள்ள இந்திய வம்சாவளியினர் இடையே மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றினார்.

    அப்போது, வளர்ச்சிப் பாதையில் செல்லும் இந்தியா, உலகத்துடன் வளர விரும்புகிறது என்றும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாடுகளிடையே உண்மையான நல்லெண்ணமும் விருப்பமும் உள்ளது என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து பேசும் போது, "இந்தியா வளரும். இந்தியா வளர்ந்து வருகிறது, ஆனால் இந்தியா உலகத்துடன் வளர விரும்புகிறது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம். பிரச்சனைகள் இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக, உலகம் முழுவதும் நல்லெண்ணமும், இந்தியாவுடன் இணைந்து பணியாற்றும் விருப்பமும் உள்ளதாக நாங்கள் நினைக்கிறோம். இந்தியா வெற்றிபெற உலகம் முழுவதும் ஒரு உணர்வைக் காண்கிறோம், அந்த உணர்வைப் பயன்படுத்திக் கொள்வது முக்கியம்," என்று தெரிவித்தார்.

    இதைத் தொடர்ந்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில்,"வணக்கம் ஆஸ்திரேலியா! இன்றுதான் பிரிஸ்பேன் வந்தேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான நட்புறவை முன்னெடுத்துச் செல்ல அடுத்த சில நாட்களில் ஆக்கப்பூர்வமான ஈடுபாடுகளை எதிர்நோக்கி இருங்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-0 என கைப்பற்றியது.
    • இதனால் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளது.

    துபாய்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.

    இந்தியா 3 போட்டியிலும் தோற்றதால், ஆஸ்திரேலியா முதல் இடத்துக்கு முன்னேறியது.

    இதில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வி, ஒரு டிரா என 58.33 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

    இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது. இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (54.55 சதவீதம்) என 4-வது இடத்தில் உள்ளது.

    தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திலும், இங்கிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.

    பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.

    • எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்ளும் நடவடிக்கைகள் துவங்கின.
    • எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன.

    புதுடெல்லி:

    2020-ம் ஆண்டு மே மாதம் சீனாவின் ராணுவம், கிழக்கு லடாக் பகுதிக்குள் நுழைய முயன்றது. இந்த முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரு நாட்டு வீரர்களும் மோதிக் கொண்டனர். இதனால் எல்லையில் இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளாக நடந்த பல சுற்று பேச்சுக்குப் பின், சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது. எல்லையில் இருந்து படைகளை விலக்கி கொள்ளும் நடவடிக்கைகள் துவங்கின.

    எல்லையில் இருந்து படைகளை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் ஆய்வு செய்து, அதை உறுதி செய்யும். எல்லையில் அமைக்கப்பட்ட தற்காலிக மற்றும் நிரந்தர கட்டமைப்புகள் உள்ளிட்டவையும் அகற்றப்படும்.

    • திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது
    • மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்தது

    கனடாவில் நடத்த கார் விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொரன்டோ நகரில் கடந்த வியாழக்கிழமை அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார், திடீரென   ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி பின்னர் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

    மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்த நிலையில் காரில் இருந்த 4 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒரு பெண்ணை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததற்கு டொரன்டோவில் உள்ள இந்திய தூதரகம்  இரங்கல் தெரிவித்துள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாகவும் கூறி உள்ளது.

    ×