என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயி"
- உடுமலை கால்வாய் வாயிலாக 14,612 ஏக்கர், பாசன வசதி பெற்று வருகிறது.
- 38 கி.மீ., தொலைவுக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.
உடுமலை :
பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில் உடுமலை கால்வாய் வாயிலாக 14,612 ஏக்கர், பாசன வசதி பெற்று வருகிறது. ஆயக்கட்டு பகுதியில், மக்காச்சோளம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.திருமூர்த்தி அணை அருகே பிரதான கால்வாயில் இருந்து பிரிந்து 38 கி.மீ., தொலைவுக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.
தற்போது இரண்டாம் மண்டலம், மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் இக்கால்வாயில் சென்று வருகிறது. இந்நிலையில், வழியோரத்தில் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.
பருவமழை பெய்யாத பகுதிகளில் நிலைப்பயிராக உள்ள மக்காச்சோளத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. எனவே அனைத்து மடைகளுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் திருட்டை தடுக்க இரவு நேரங்களில் போலீஸ், பொதுப்பணித்துறையினர் உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவினர் ரோந்து சென்று தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது.
- உடுமலை கால்வாய் கரையில் 23 இடங்களில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது.
உடுமலை :
உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடைபெற்றது. உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உடுமலை தாசில்தார் கண்ணாமணி, ஆர்.டி.ஓ. நேர்முக உதவியாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கூறியதாவது:-
மவுனகுருசாமி:- உடுமலை கால்வாய் கரையில் 23 இடங்களில் குப்பைகள் அதிக அளவில் கொட்டப்படுகிறது. இதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று சேராத நிலை ஏற்படுகிறது. பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.
மதுசூதனன்:- தொடர்ந்து தேங்காய் மற்றும் அதனைச்சார்ந்த பொருட்கள் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.இதனைத் தடுக்க ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய வேண்டும்.கொப்பரையை அரசு கிலோ ரூ.140-க்கு கொள்முதல் செய்ய வேண்டும். பாமாயிலுக்கு மீண்டும் இறக்குமதி வரி விதிக்க வேண்டும். மேலும் உரக்கடைகளில் அதிக அளவில் ரசாயன உரங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. விலைப்பட்டியல், இருப்பு விவரம் உள்ளிட்ட எதுவும் முறையாக கடைபிடிப்பதில்லை. அதிகாரிகள் வெறும் கண்துடைப்புக்காக ஆய்வு செய்கின்றனர். குறைதீர் கூட்டங்களில் கொடுக்கப்படும் பல மனுக்களுக்கு தீர்வு கிடைப்பதில்லை.3 ஆண்டுகளாக மனு கொடுத்தும் பட்டா மாறுதல் கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது.
பரமசிவம்:- பல ஆண்டுகளாக நிலவும் ஜம்புக்கல் கரடு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். குளங்களில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதுடன் அதனை வியாபார நோக்கத்தில் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இதேப்போல் பல்வேறு விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
- மூலனூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன.
- உயிர் உரங்களான அசோஸ்பைரில்லாம், பாஸ்போ பாக்டீரியா, மற்றும் டிவிரிடி இருப்பில் உள்ளன.
மூலனூர் :
மூலனூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
மூலனூர் வட்டார ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதைகள் மற்றும் உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. மக்காச்சோளம்-405 கிகி. சோளம் -2.5 டன், உளுந்து 3 டன், கொள்ளு 108 கிகி, நிலக்கடலை- 2 டன், மற்றும் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லாம், பாஸ்போ பாக்டீரியா, மற்றும் டிவிரிடி இருப்பில் உள்ளன.மக்காச்சோளம் ரூ.100 மானிய விலையிலும், சோளம் ரூ.30 மானியவிலையிலும், உளுந்து ரூ.47 மானிய விலையிலும், கொள்ளு ரூ.67, நிலக்கடலை ரூ.47 மானியவிலையிலும் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தேவையான உரம் மற்றும் உரங்களை வாங்கி பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு வந்த விவசாயி பஸ் மோதி பலியானார்.
- திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
விழுப்புரம்:
உத்திரமேரூர் நாஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை (வயது 76) விவசாயி. இவர் நேற்று இரவு குடும்பத்துடன் வேனில் திண்டிவனத்தில் நடக்கும் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு வந்தார்.
அப்போது திருமண நிகழ்ச்சியின் போது திருமண மண்டபத்திற்கு எதிரே உள்ள கடைக்கு செல்ல சாலையை கடந்துள்ளார். அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ் வெள்ளை மீது எதிர்பாராத விதமாக வேகமாக மோதியது. இதில் வெள்ளை தூக்கி வீசப்பட்டு பலத்த படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து படுகாயம் அடைந்த வெள்ளையை மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு இன்று காலை வெள்ளை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த திண்டிவனம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
திருமண விழாவிற்கு வந்த இடத்தில் பஸ் மோதி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள கோல்காரன் திட்டு பகுதியை சேர்ந்தவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் மேச்சேரி மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
- அப்போது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள கோல்காரன் திட்டு பகுதியை சேர்ந்தவர் அய்யண்ணன் (வயது 66). விவசாயியான இவர், இன்று காலை இருசக்கர வாகனத்தில் மேச்சேரி மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ், எதிர்பாராத விதமாக அய்யண்ணன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அய்யண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று மாலை வீட்டில் தனியாக இருந்த சவுந்தர்ராஜன் கலைக்கொல்லி மருந்து எடுத்து குடித்து விட்டார்.
- இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை அருகே பூனாச்சி அடுத்துள்ள அட்டவணைப்புதூர் பெத்தக்காபாளையத்தை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (38). விவசாயி. இவருக்கு நிஷாந்தி (33) என்ற மனைவியும், 8 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் சவுந்தர்ராஜன் விவசாயத்திற்காக கடன் வாங்கியதாக கூறப்படு கிறது. கடனை திரும்ப கட்ட முடியாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு இருந்து வந்தார். இதனால் தனக்குதானே பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
சம்பவத்தன்று மாலை நிஷாந்தி அருகில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த சவுந்தர் ராஜன் விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய கலைக்கொல்லி மருந்து (விஷம்) எடுத்து குடித்து விட்டு தனது மனைவியின் தங்கை நந்தினிக்கு போன் செய்து தான் விஷம் அருந்தி விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் பதறி போன நந்தினி தனது அக்காவிற்கு போன் செய்து மாமா விஷம் குடித்து விட்டதாக கூறுகிறார். என்னவென்று போய் பாருங்கள் என தெரிவித்துள்ளார்.
உடனடியாக நிஷாந்தியும் அவரது மாமியாரும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சவுந்தர்ராஜன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்து இருந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சவுந்தர்ராஜன் இறந்தார்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
- மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் , அவினாசி வட்டாரம் நடுவச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகள்- வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்களுக்கான கிடங்கு பராமரித்தல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாம் மதுரை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்டது. திருப்பூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சொ. சீனிவாசன் முகாமை தொடங்கி வைத்தார். பயிற்சி ஒருங்கிணைப்பாளர் அழகுபாண்டியன், இயக்குனர் முனைவர் தர்மராஜ் மற்றும் கள அலுவலர் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பயிற்சி கையேடு மற்றும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
- நோய் தடுப்பு மற்றும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
- ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 260 முகாம்கள் நடத்தப்படவுள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் தமிழக அரசால் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் "சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தும் திட்டம் 2022-23 ம் நிதியாண்டில் நடைமுறை படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில் நோய்வாய்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், ஆண்மை நீக்கம் செயற்கை முறை கருவூட்டல், மலடு நீக்க சிகிச்சைகள் சினை சரிபார்ப்பு, சுண்டு வாத அறுவை சிகிச்சை போன்ற சிறு அறுவை சிகிச்சைகள் மற்றும் கருப்பை மருத்துவ உதவி போன்ற நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இத்திட்டமானது திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றியத்திற்கு தலா 20 முகாம்கள் வீதம் 260 முகாம்கள் நவம்பர் 2022 மாதம் முதல் பிப்ரவரி 2023 மாதம் வரை கால்நடை மருத்துவ வசதி இல்லாத குக்கிராமங்களிலும் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் நடத்தப்படவுள்ளது. இவ்வாய்ப்பினை கால்நடை வளர்ப்போர் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் வினீத் கேட்டுக்கொண்டுள்ளார்.
- கும்பப்பூ பருவத்தின் நெற்பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை
- குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் அறிவிப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டமானது விவசாயி களுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாத்தி டவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்ப ங்களை கடைபிடிப்பதையும் ஊக்குவிக்கிறது.
குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் கும்பப்பூ பருவத்தின் நெற்பயிர்களை புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியி டப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் கடன்பெறும் விவசாயிகள் வங்கிகளில் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய ப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமா கவோ, வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமா கவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.
கும்பப்பூ பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இத்திட்டத்தில் பதிவு செய்ய கடைசி நாள் டிசம்பர் மாதம் 15-ந் தேதி ஆகும். பயிர் காப்பீட்டுத் தொகையில் விவசாயிகள் 1.5 சதவீதம் மட்டும் அதாவது நெற்பயி ருக்கு ஏக்கருக்கு ரூ.515 மட்டும் காப்பீட்டு கட்டண மாக செலுத்தினால் போது மானது.
விவசாயிகள் இத்திட்ட த்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து கட்டண தொகையை செலுத்திய பின் அதற்கான ரசீதையும் பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
கும்பப்பூ நெற்பயி ருக்கான இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.34 ஆயிரத்து 351 ஆகும். மேலும் நடப்பாண்டு அறிவிக்கைப்படி வெள்ளம், புயல் போன்ற இயற்கை சேதங்கள் ஏற்பட்டு விட்டால் அதன் பின்னர் பயிர் காப்பீடு செய்ய இய லாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.
- னியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
திருப்பூர் :
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தி உள்ளது.
அதன்படி வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளை விவசாயிகள் மானியவிலையில் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வேளாண்மை இயந்திரமயமாக்கும் திட்டம், வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தின் மூலம் 2022-23 ம் ஆண்டில் திருப்பூர் மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் கருவிகள் வழங்குவது, வாடகைக்கு விடும் மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அதிகபட்சமாக டிராக்டருக்கு ரூ.4.25 லட்சம் , விசையால் களை எடுக்கும் கருவிகள் 35 ஆயிரம் , ரோட்டவெட்டரான சூழற்கலப்பைகள் 45 ஆயிரம் ரூபாய், விசைத் தெளிப்பான் கருவிகள் ரூ.3,100 ரூபாய் அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக சிறு, குறு, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதர விவசாயிகளுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள அதிகபட்ச மானியம் அல்லது மொத்த விலையில் 40 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படும். தனிப்பட்ட வேளாண் எந்திரங்களை மானியத்தில் விவசாயிகள் பெற்றிடும் வகையில் 5 டிராக்டர்கள் 8 பவர்டில்லர்கள், 1 விசையால் களையெடுக்கும் கருவிகள், 3 ரோட்டவேட்டர், தட்டு வெட்டும் கருவி 4, தென்னை மட்டை துகளாக்கும் கருவி 2, இரண்டு விசைத் தெளிப்பான்கள் ஆகியவற்றிற்கு 29 லட்சத்து 53 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அந்தந்த பகுதி விவசாயிகள் மானிய விலையில் வேளாண் கருவிகளை பெற்றிட அந்தந்த பகுதிக்கான உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களில் உரிய விண்ணப்பத்தினை அளித்து மூதுரிமை அடிப்படையில் விவசாயிகள் பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, திருப்பூர் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறுப்பு ) ஆர்.சுப்பிரமணியனின் செல்போன் எண் 9942703222, தாராபுரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் , 7904087490, உடுமலை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் முத்துராமலிங்கம் , 9865497731 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வேளாண்மைப்பொறியியல் துறை மூலமாக திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு உழவு பணிகள், அறுவடைப்பணிகள், நிலம் சமன்படுத்தும் பணிகள் மேற்கொள்ள குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் கருவிகள் வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
விவசாய நிலத்தில் உழவு பணிக்கு தேவைப்படும் டிராக்டர் (உழவுக்கருவியுடன்) 1 மணி நேரத்திற்கு ரூ.500 வாடகையிலும், மண் தள்ளும் இயந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.1,230 ம், சக்கரவகை மண் அள்ளும் இயந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.890 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனத்துடன் இயங்கக்கூடிய தேங்காய் பறிக்கும் எந்திரம் 1 மணி நேரத்திற்கு ரூ.450 என்ற வாடகையிலும் வழங்க வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேற்கண்ட வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வாடகைக்கு தேவைப்படும் விவசாயிகள் இ- வாடகை செயலி மூலம் முன்பதிவு செய்து முன்பணம் செலுத்தி பயன்பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேளாண்மைப்பொறியியல் துறையின் மூலம் நில நீர் ஆய்வுக்கருவியின் உதவியால் நிலத்தடி நீர்மட்டத்தை அறிந்து கொள்ளதிருப்பூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை விவசாய பெருமக்கள்பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவசாயம்நிலங்களுக்கு ரூ.500 வீதம் மற்றும் விவசாயம் அல்லாத பணிகளுக்குரூ.1000 கட்டணமாக உழவன் செயலி (UZHAVAN APP) மூலம்அரசுக்கு செலுத்தப்பட வேண்டும்.இது தொடர்பாக செயற்பொறியாளர் (வே.பொ) வேளாண்மைப் பொறியியல் துறை, திருப்பூர் அலுவலகத்தின் உதவிப்புவியியலாளர் அஞ்சனா மேத்யூவை 7994162692 தொடர்பு கொண்டுபயன்பெறுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
- 61890 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் உற்பத்தியாகிறது.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தை பொறுத்தவரை 61890 ஹெக்டேர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்பட்டு சந்தைகளுக்கும், கொப்பரையாகவும் பருப்பாக மாற்றப்பட்டு வியாபாரிகள் மற்றும் ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள் மூலம் எண்ணெய் உற்பத்திக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரு ஹெக்டேரில் ஆண்டுக்கு 8336 தேங்காய் உற்பத்தியாகிறது. இது மற்ற மாவட்டங்களை காட்டிலும் சற்று குறைவான உற்பத்தியாக உள்ளது.
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட தேங்காய் உலர்களங்கள் உள்ளன. மேலும் 50க்கும் மேற்பட்ட எண்ணெய் ஆலைகள் மூலம் எண்ணெய் பிழியப் பட்டு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்கள் பலவற்றுக்கும் டேங்கர் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் ரூ.49 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது. வெள்ளக்கோவில், லாலாபோட்டை, வாணியம்பாடி, முத்தம்பட்டி, திருச்சி, கரூர், வாகரை, தேவத்தூர் பகுதி விவசாயிகள் 140 பேர், 64 ஆயிரம் கிலோ எடை கொண்ட 1264 தேங்காய் பருப்பு மூட்டைகளை, வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
விற்பனைக்கூட கண்காணிப்பாளர் முன்னிலையில் முத்தூர், வெள்ள கோவில், காங்கேயம், ஊத்துக்குளி பகுதி எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் 19 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் தரமான முதல் தர பருப்பு கடந்த மாதத்தை காட்டிலும் ரூ.6 அதிகரித்து அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.86.40 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ரூ.4 அதிகரித்து ஒரு கிலோ ரூ.60.80 ரூபாய்க்கும் ஏலம் நடைபெற்றது. மொத்தம் ரூ.49 லட்சது 11 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.
தற்போது முகூர்த்த தினங்கள் வரவுள்ள நிலையில் தேங்காய் விலையும் தேங்காய் பருப்பு விலையும் கடகடவென சரிந்து வந்த நிலையில், இந்த வாரம் சற்றே விவசாயிகள் நிம்மதி அடையும் வகையில் விலை உயர்ந்துள்ளது. மேலும் எண்ணெய் விலைகளும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
- உரக்கடைகளை நாடி உரம் வாங்கி பயன்படுத்த முயற்சிக்கின்றனர்.
- உரக்கடைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருப்பூர் :
குன்னத்தூரில் யூரியா உரம் வாங்க சென்ற விவசாயிகளிடம் மற்றொரு உரத்தை வாங்க வற்புறுத்திய உரக்கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி, குன்னத்தூர் வட்டாரங்களில் சோளப்பயிர் தற்போது முளைத்து வளரத் தொடங்கியுள்ளது. தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி யூரியா உரம் சீராக கொடுத்தால் பயிர் நல்ல வளர்ச்சி அடையும் என்று விவசாயிகள் எண்ணி, யூரியா உரம் வாங்க அருகில் இருக்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு சென்றால் அங்கு இருப்பு இல்லை.
இந்நிலையில், தனியார் உரக்கடைகளை நாடி உரம் வாங்கி பயன்படுத்த முயற்சிக்கின்றனர். குன்னத்தூரில் உள்ள உரக்கடைக்கு, விவசாயிகள் யூரியா உரம் வாங்க சென்றால், அங்கு பணியாளர் யூரியா உரம் தனியாக தர முடியாது. மற்றொரு உரமும் சேர்ந்து வாங்கினால்தான் தர முடியும். இல்லையென்றால் இரண்டுக்கும் சேர்ந்து ரூ.1100 கொடுத்தால்தான் யூரியா 1 மூட்டை தருவேன் என்று கறாராக சொல்லி அனுப்பிவிட்டார். இது போன்று விவசாயிகள் பலரும் ஏமாற்றப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக முறையிட்டபோது, யாரிடம் வேண்டுமானால் புகார் அளித்து கொள்ளுங்கள் என பேசினார். யூரியா உரம் கேட்டுச்செல்லும் விவசாயிகளிடம் தேவையற்ற பொருட்களை வாங்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிற உரக்கடைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் தேவையான உரங்கள் இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்துக்கும், வேளாண்மைத்துறை அலுவலர்களுக்கும் புகார் அனுப்ப உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.