search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொண்டி"

    • சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.
    • பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    தொண்டி:

    உலக நன்மைக்காக கைலாயத்தில் சிவபெருமான் கடும் தவம் இருந்தார். தேவலோகத்தில் தலைவனாக இருப்பவருக்கும், தேவர்களுக்கும் இந்த தவத்தால் நன்மை கிட்டாமல் போகலாம் என்று எண்ணிய இந்திரன் முதலானோர் சிவனின் தவத்தை கலைக்க வேண்டும் என்று பலரையும் நாடினர். ஆனால் சிவனின் கோபத்திற்கு பயந்து யாரும் முன்வரவில்லை.

    இந்நிலையில் மன்மதனின் உதவியை நாடிய தேவர்கள், அவரது மனதை மாற்றி சிவனுக்குள் புகுந்து காம எண்ணத்தை தூண்டினால் தவம் கலைந்து விடும் என கூறினர். அதற்கு சம்மதித்த மன்மதனும் சிவனுக்கு அருகில் சென்று காம பானத்தை தொடுத்தான். தவத்தில் இருந்த சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.

    இதனை அறிந்த மன்மதனின் மனைவியான ரதி தேவி சிவபெருமானிடம், தேவேந்திரனின் தூண்டுதலாலேயே மன்மதன் தங்களது தவத்தில் இடையூறு செய்தார். அவர் மீது எந்த தவறும் இல்லை. இந்த செயலால் நான் கணவனை இழந்து வாழ வேண்டுமா? என்று அழுது புலம்பி முறையிட்டாள். ரதிதேவியின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், அவரிடம் உன் கண்ணுக்கு மட்டுமே மன்மதன் தெரிவார் என்று கூறி மன்மதனின் உயிரை மீட்டு சாப நிவர்த்தி செய்தார்.

    இந்த புராண சம்ப வத்தை நினைவு கூறும் வகையில் சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டியில் உள்ள வெள்ளாளர் தெரு சொசைட்டியினரால் மாசி, பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் காமன் பண்டிகையை யொட்டி காமன் மேடையில் காப்புக்கட்டுதல் நடந்தது. தினமும் மண்டகப்படி தாரர்களால் பூஜைகள் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து மன்மதனை எரிக்கும் நிகழ்வாக காமன் மேடையில் எரியூட்டப்பட்டு தகனம் நடந்தது. முன்னதாக பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர். மேலும் குழந்தை இல்லாத தம்பதியர் வேண்டுதல் நிறைவேறிய பின் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து காமன் மேடையைச் சுற்றி வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

    காம தகன ஏற்பாடுகளை தலைவர் பிச்சுமணி, பொருளாளர் சுந்தரமூர்த்தி, உறுப்பினர்கள் விடுதலை முரசு, பட்டாபிராமன், ராஜகோபால், ராமநாதன், ராம மூர்த்தி, நாகராஜ், ராஜாராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • தொண்டியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
    • பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா வரவேற்றார்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணை தலைவர் பால சுப்பிரமணியன் கொடியேற்றினர்.நகர் தலைவர் காத்த ராஜா இனிப்பு வழங்கினார். தனியார் மின் பணியாளர்கள் சங்கம் சார்பில் கவுரவ தலைவர் ஜவஹர் அலிகான் தேசிய கொடியை ஏற்றினார். பாவோடி ஆட்டோ சங்கம், அக்ரஹாரம் குடியிருப்போர் சங்கம் சார்பில் தேசியகொடி ஏற்றப்பட்டது. கிங் பீட்டர் இனிப்பு வழங்கினார்.

    திருவாடானை பஞ்சாயத்து யூனியன் மேற்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி தேசியகொடி ஏற்றினார். பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் ஜெயந்தன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ரம்யா வரவேற்றார். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

    • தொண்டி, திருவாடானை பகுதிகளில் பிரதோச வழிபாடு நடந்தது.
    • தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை அன்ன பூரணேஸ்வரி சமேத ஸ்ரீ நம்பு ஈஸ்வரர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு நந்திக்கு பால், பழம் பன்னீர், சந்தனம், இளநீர் விபூதி, அரிசி மாவு, தேன் பஞ்சாமிர்தம் மற்றும் அபிசேக பொடிகளால் நந்திக்கு சிறப்பு அபிஷேம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து உற்சவ மூர்த்தி வீதி உலா வந்தது. இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்டனர். அபிஷேக பால் மற்றும் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்கப்பட்டது. வாசு, கருப்பசாமி ஆகியோர் பூஜை ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதே போல் திருவாடானை ஆதி ரெத்தினேஸ்வரர், தளிர் மருங்கூர் உலகேஸ்வரர், ஓரியூர் சேயுமானவர், எஸ்.பி.பட்டிணம் ஏகாம்பரேஸ்வரர் தீர்த்தாண்டதானம் சர்வ தீர்த்தேஸ்வரர், தொண்டி சிதம்பரேஸ்வரர் ஆகிய சிவாலயங்களிலும் நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

    தொண்டி - மதுரை சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியிலிருந்து மதுரை வரை தேசிய நெடுஞ்சாலை சுமார் 3 வருடத்திற்கு முன்பு போடப்பட்ட சாலை ஆகும். இந்த தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு ஒரு வருடத்திலேயே பழையனகோட்டை அருகே சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுவிட்டது. இதுவரை சரி செய்யப்படவில்லை. 

    இந்த பள்ளத்தால் இரவில் வரும் 2 மற்றும் 4 சக்கர வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளான சம்பவமும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒன்னரை ஆண்டுக்கு முன்பு இதே பள்ளத்தில திருவெற்றியூரைச் சேர்ந்தவர் விழுந்து விபத்திற்குள்ளான நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அதன்பிறகும் தேசிய நெடுஞ்சாலை துறை அலுவலர்களின் மெத்தனப்போக்கால் இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

    மேலும் சாலையின் இருபுறங்களிலும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு அதை சரி செய்வதற்காக அடிக்கடி தோண்டிய பள்ளங்கள் சாலைகளின் ஓரங்களில் சரி செய்யப்படாமல் இச்சாலை தரமற்ற நிலையில் உள்ளது. இதேபோல் சுமார் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை பழுதாகி உள்ளது. 

    அந்த பள்ளத்தில் கடந்த மாதம் ஆட்டோ மீது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டி வந்த டி. கிளியூரைச் சேர்ந்த கோவிந்தன் மகன் சித்திரவேலு சம்பவ இடத்திலேயே பலியானார். இப்படி தொடர்ந்து விபத்துக்களை ஏற்படுத்தும் பள்ளங்களை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

    ×