என் மலர்
நீங்கள் தேடியது "சொத்துவரி"
- சொத்துவரி மற்றும் தொழில்வரியினை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்தவில்லையெனில் அக்டோபர் 1-ந்தேதி முதல் அபராத வட்டித் தொகை விதிக்கப்படும்.
- சொத்துவரி மற்றும் தொழில்வரியை முறைப்படி தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி என்பது பிரதான வருவாயாக உள்ளது. இதனால், நடப்பு அரை நிதியாண்டுக்கான சொத்து வரியை செலுத்த சென்னை மாநகராட்சி கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. இதேபோல, சொத்துவரி மற்றும் தொழில்வரியை முறைப்படி தாமதமின்றி செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கப்பரிசும் வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சி தான் வசூலிக்கும் சொத்துவரி மூலம் மாநகராட்சிக்கான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், தூய்மை பணிகள், தெரு விளக்குகள் அமைத்தல், பூங்காக்கள் மற்றும் சாலை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், வரும் 30-ந்தேதிக்குள் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்களும், வணிகர்களும், சொத்துவரி மற்றும் தொழில்வரியை செலுத்திட வேண்டுமென சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி 28-ந்தேதி (மிலாடி நபி) மற்றும் 30-ந்தேதி (சனிக்கிழமை) ஆகிய அரசு விடுமுறை நாட்களில் ரிப்பன் கட்டிடத்திலுள்ள வருவாய்த்துறை தலைமையிடம், மண்டலங்களில் உள்ள வருவாய்த்துறையில் சொத்துவரி மற்றும் தொழில்வரி வசூல் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. சொத்துவரி மற்றும் தொழில்வரியினை வரும் 30-ந்தேதிக்குள் செலுத்தவில்லையெனில் அக்டோபர் 1-ந்தேதி முதல் அபராத வட்டித் தொகை விதிக்கப்படும். எனவே, சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் 30-ந்தேதிக்குள் சொத்து மற்றும் தொழில்வரியை இணையதளத்திலும், தலைமையகத்திலும் மற்றும் மண்டல அலுவலகங்களிலும் செலுத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- இடையர்பாளையம் தேவாங்கநகர், கற்பக விநாயகர் கோவில் வளாகத்தில் முகாம் நடக்கிறது.
கோவை,
கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2023-24ம் நிதியாண்டின் இரண்டாம் அரையா ண்டிற்கான சொத்து வரியினை 01.10.2023 முதல் 31.10.2023-க்குள் செலுத்தும் சொத்து உரிமை தாரர்களுக்கு, சொத்துவரி தொகையில் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
எனவே, பொதுமக்களின் வசதியினை கருத்தில் கொண்டு, கோவை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் கடை வாடகை தொகை முதலிய அனைத்து வரி மற்றும் வரியில்லா இனங்களை செலுத்த கீழ்க்கண்ட பகுதிகளில் 30.09.2023 மற்றும் 01.10.2023 ஆகிய நாட்களில் சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடக்கிறது.
மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்.56 மற்றும் 57 பகுதிகளுக்கு ஒண்டிபுதூர்-நெசவாளர் காலனி சுங்கம் மைதானத்திலும்,
மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 34ல் கவுண்ட ம்பாளையம் மணிமகால் பூம்புகார் நகர் பகுதியிலும், வார்டு 35ல் இடையர்பா ளையம் தேவாங்கநகர், கற்பக விநாயகர் கோவில் வளாகத்திலும் இம்முகாம் நடக்கிறது.
தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளான வார்டு 89ல் சுண்டக்கா முத்தூர் சுகாதார ஆய்வா ளர் அலுவலகத்திலும்,
வார்டு 97ல் கம்பீர விநாயகர் கோவில் வளாகத்திலும், குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-2 குடியிருப்போர் சங்க கட்டிடத்திலும் இம்முகாம் நடைபெறுகிறது.
வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண்.11ல் ஜனதா நகர் சூர்யா கார்டன்ஸ் பகுதியிலும், வார்டு எண்.19ல் மணியக்காரன்பாளையம் அம்மா உணவகத்திலும், வார்டு எண்.25ல் காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், இம்முகாம் நடக்கிறது.
மத்திய மண்டலத்தி ற்குட்பட்ட வார்டு 32ல் நாராயணசாமி வீதியிலும் வார்டு எண்.62ல் சாரமேடு மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும், வார்டு 63ல் பெருமாள் கோவில் வீதி பகுதியிலும், வார்டு எண்.80ல் கெம்பட்டி காலனி மாநகராட்சி ஆரம்ப பள்ளியிலும், முகாம் நடக்கிறது.
மேற்குறிப்பிட்ட சிறப்பு முகாம்களிலும், மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரிகளை செலுத்தலாம். இந்த வசதியினை முழுமையாக பயன்படுத்தி, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்தி மாநகராட்சியின் வளர்ச்சிப்பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
இவ்வாறு அறிக்ைகயில் கூறியுள்ளார்.
- நகராட்சியில் சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் தள்ளுபடி செய்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.
- ஒட்டன்சத்திரம் நகராட்சி பணியாளர்களிடமோ அல்லது நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக செலுத்தலாம்.
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு விதிகள் படி 2 ஆண்டு அரையாண்டுக்கான அக்டோபர் 2020 முதல் மார்ச் 2024 வரை சொத்து வரியை அக்டோபர் 31ஆம் தேதிக்குள் செலுத்தினால் நிகர சொத்து வரியில் 5 சதவீதம் தள்ளுபடி செய்து ஊக்கத்தொகை வழங்கப்படும்.
மேலும் 2023 மற்றும் 2024 முதல் அரையாண்டு ஏப்ரல் 2003 முதல் செப்டம்பர் 2021 வரை சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் ஒரு சதவீதம் வசூல் செய்யப்படும் வரிகளை தங்கள் இல்லம் தேடி வருகை தரும் நகராட்சி பணியாளர்களிடமோ அல்லது நகராட்சி அலுவலகத்தில் நேரடியாக செலுத்தலாம்
எனவும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் சொத்து வரிகளை செலுத்தி ஊக்கத்தொகை பெற்றுக் கொள்ளுமாறு ஆணையாளர் மீனா தெரிவித்துள்ளார்.