என் மலர்
நீங்கள் தேடியது "வாடிக்கையாளர்"
- மொத்தம் 109 நிறுவனங்களில் இண்டிகோ கடைசி நிலையில் 103 வது இடத்தில் உள்ளது
- கத்தார் ஏர்வேஸ் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.
உலகளவில் விமானச் சேவையின் செயல்திறனைப் பகுப்பாய்வு செய்து, உலகின் சிறந்த மற்றும் மோசமான விமான நிறுவனங்களை வரிசைப்படுத்தி ஏர்ஹெல்ப் நிறுவனம் வருடந்தோறும் தரப்பட்டியலை வெளியிட்டு வருகிறது.
வாடிக்கையாளரின் மதிப்பீடும், சரியான நேரத்தில் வருகை மற்றும் புறப்படும் நேரம், பணியாளர்களின் சேவைத் தரம், உணவு வழங்குதல் மற்றும் பயணிகளின் வசதி ஆகிய காரணிகளை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் 54 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பயணிகளின் கருத்தை பெற்று 2024 ஆம் ஆண்டின் ஏர்ஹெல்ப் அறிக்கை வெளியாகியுள்ளது.
விமான நிறுவனங்கள் திடீர் இடையூறுகளை எவ்வாறு கையாளுகின்றன, இழப்பீடு கோரிக்கைகளை எவ்வாறு நிவர்த்தி செய்கின்றன, சர்வதேச வழித்தடங்களில் நிலையான சேவையை எவ்வாறு வழங்குகின்றன உள்ளிட்ட தரவுகளும் இந்த அறிக்கைக்காக சேகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 109 விமான நிறுவனங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் உலகின் மோசமான 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் இந்தியாவின் இண்டிகோ இடம்பெற்றுள்ளது. மொத்தம் 109 நிறுவனங்களில் இண்டிகோ கடைசி 103 வது இடத்தில் உள்ளது. சரியான நேரத்தில் வழங்கப்படும் சேவை, வாடிக்கையாளர் சர்வீஸ் மற்றும் அவர்களின் கோரிக்கைகளைக் கையாள்வது உள்ளிட்டவற்றில் இண்டிகோ பின்தங்கியுள்ளது.

இண்டிகோவை தவிர்த்து துருக்கியின் பெகாசஸ் ஏர்லைன்ஸ் 104 வது இடத்திலும், இஸ்ரேலின் எல் அல் ஏர்லைன்ஸ் 105 வது, பல்கேரியா ஏர் 106, நேவால் துனிசியா 107, போலந்து buzz 108, துனிசியாவின் துனிஸ் ஏர் 109 வது இடங்களில் உள்ளன. மாறாக சிறந்த 10 விமான நிறுவனங்களின் பட்டியலில் பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ்முதல் இடத்தில் உள்ளது. கத்தார் ஏர்வேஸ் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.

சேலம்:
சேலம் மேற்கு கோட்டம் அஞ்சல் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மண்டல அளவிலான அஞ்சல் வாடிக்கையாளர்கள் குறைதீர் கூட்டம் வருகிற 28-ந்தேதி கோவையில் உள்ள மேற்கு மண்டல அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. அஞ்சல் வாடிக்கையாளர்கள் தங்கள் புகார்களை உதவி இயக்குநர், அஞ்சல் துறை தலைவர், மேற்கு மண்டலம், தமிழ்நாடு, கோயம்புத்தூர்- 641002 என்ற முகவரிக்கு அனுப்பலாம். தங்கள் புகார்கள் 17-ந்தேதிக்குள் இந்த முகவரியை சென்றடைய வேண்டும்.
அஞ்சல் துறையின் மணி ஆர்டர், பதிவு தபால், விரைவு தபால், காப்பிட்டு செய்யப்பட்ட தபால் போன்ற சேவை தொடர்பான புகார் இருப்பின் அது தொடர்பான பதிவு எண், பதிவு செய்யப்பட்ட தேதி மற்றும் அலுவலகம் போன்ற முழு விவரங்கள் இருக்க வேண்டும்.
அஞ்சல் துறையின் சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற சேவை தொடர்பான புகார் இருப்பின் அது தொடர்பான முழு கணக்கு எண், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசி எண்கள், வைப்பாளர், காப்பீட்டாளரின் பெயர் மற்றும் முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர் போன்ற குறிப்புகள் இருக்க வேண்டும்.
முழு விவரங்கள் அடங்கிய புகாரை அனுப்பும் அஞ்சல உறையின் மீது டக் அதாலத் கேஸ் என்று குறிப்பிடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- 5 மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழிக்கின்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே கேத்தனூரில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது .இந்த கிளையில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வந்த சேகர் என்பவர் கடன் பெறுவதற்காக வரும் வாடிக்கையாளர்களிடம் நகை மோசடியில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து இது வரை 5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.ஆனால் இன்னும் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை.
நேற்று நகை மோசடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பாரத ஸ்டேட் வங்கியை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- விவசாயம் செய்ய வேண்டி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றோம். நகைகளை மீட்க வந்தபோது மோசடி செய்யப்பட்டதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானோம், கடந்த 5 மாதங்களாக வங்கி நிர்வாகத்தினர் அலைக்கழிக்கின்றனர். ரசீது இருந்தும், வங்கியில் உள்ள நகைகளை மீட்க முடியாத நிலையில் உள்ளோம். இதனால், கடன் மீதான வட்டியும் அதிகரிக்கிறது. வட்டிக்கு வட்டி போடுகின்றனர். என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தவிக்கிறோம். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் வங்கி நிர்வாகத்துடன் பேசி வங்கியில் அடமானம் வைக்கப்பட்டுள்ள நகைகளை எடுப்பது குறித்து நாளை தெரிவிப்பதாக கூறினர் .இதையடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.
- விருதுநகர் மாவட்ட முன்னோடி வங்கியின் தலைமையில் வாடிக்கையாளர்கள் கூட்டம் வருகிற 8-ந் தேதி நடக்கிறது.
- ஓரே இடத்தில் அனைத்து வங்கிகளும் உள்ளதால் தேவையான வங்கிகளை தேர்ந்தெடுத்து கடன் பெற வாய்ப்பு உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் வருகிற 8-ந் தேதி (புதன்கிழமை) அன்று மாவட்ட முன்னோடி வங்கியின் தலைமையில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார்துறை வங்கிகள் இணைந்து மாபெரும் வாடிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தநிகழ்ச்சியில் கடன் வழங்குதல், புதிய கடன் விண்ணப்பம் பெறுதல், பிரதமரின் காப்பீடு மற்றும் பென்ஷன் திட்டத்தில் புதிதாக இணைத்தல், நிதிசார் கல்வி மற்றும் வங்கி சார்ந்த சந்தேகங்களை வங்கி அதிகாரிகளிடம் நேரடியாக தீர்த்துக்கொள்ளும் வகையில் விருதுநகரில் உள்ள கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.30 மணி முதல் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
இதில் வேளாண்கடன், தொழில்கடன், கல்விக்கடன், வீடு மற்றும் வாகன கடன் போன்ற கடன் வேண்டுவோர் நேரடியாக பங்குபெற்று பயன்பெறலாம்.
ஓரே இடத்தில் அனைத்து வங்கிகளும் உள்ளதால் தேவையான வங்கிகளை தேர்ந்தெடுத்து கடன் பெற வாய்ப்பு உள்ளது. இதில் ஏற்படும் சந்தேகங்களை போக்கி எளிதில் கடன்பெறவும் பயனுள்ளதாக அமையும்.
எனவே புதிய தொழில் தொடங்கவும், தொழிலை அபிவிருத்தி செய்யவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கவும் நமது மாவட்டத்திலுள்ள அனைத்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் படித்த இளைஞர்கள் இந்த முகாமில் நேரடியாக பங்கேற்று இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.