என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சங்கடஹர சதுர்த்தி"
- விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டு நாள்.
- சோமவார சதுர்த்தி மிகவும் சிறப்பு.
விநாயகருக்கான சிறப்பு வழிபாட்டு நாள். அதுவும் சோமவார சதுர்த்தி மிகவும் சிறப்பு. கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கடஹர கணபதியும் ஒருவர். மாதம்தோறும் பௌர்ணமிக்குப் பிறகு வரும் நான்காவது நாளான சதுர்த்தி திதி, சங்கடஹர சதுர்த்தி எனப்படும். ஆவணி, மாசி மாதத்தில் வருவதே மஹாசங்கடஹர சதுர்த்தி எனப்படும்.
`சங்கட' என்றால் துன்பம் `ஹர' என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தி நாளில் வீட்டிலேயோ வீட்டின் அருகில் உள்ள பிள்ளையாருக்கோ அபிஷேகம் செய்வது சிறப்பான பலன்களைத் தரும் என்பர். குறிப்பாக, இந்த 21 மூலிகைகளால் விநாயகரை அர்ச்சிக்க குறிப்பிட்ட பலன் கிடைக்கும் என்பது ஆன்றோர் வாக்கு.
`அல்லல்போம், வல்வினைபோம், அன்னை வயிற்றில்
பிறந்ததொல்லை போம், போகாத் துயரம் போம்,
நல்ல குணமதிகமாம் அருணை
கோபுரத்துள் மேவும்
கணபதியைக் கைதொழுதக் கால்!'
- திருச்சி பாலக்கரை பகுதியிலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார்.
- செவ்வாய்க்கிழமைகளில் விநாயகரை வழிபட்டால் நாக தோஷம் விலகும்.
ஒரு சமயம் சிவபெருமானை பிரிந்து பார்வதிதேவி தனியாக தவம் செய்ய நேரிட்டது. அப்போது விநாயகர் தன்னைப் போலவே ஒரு வடிவத்தை தன்னருகே உருவாக்கி, அந்த திருவுருவத்தையே, அதாவது தன்னையே சங்கல்பம் செய்து கொண்டு, பிரிந்த தன் பெற்றோர் விரைவில் ஒன்று சேர பிரார்த்தித்தாராம்.
இதன் அடிப்படையில் மயிலாடுதுறை அருகில் உள்ள திருவேள்விக்குடி திருத்தலத்தில், சங்கல்ப (இரட்டை) விநாயகர் என்ற பெயரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். 'ஆதி இரட்டை விநாயகர்' என்று போற்றப்படுபவரும் இவரே.
அதுபோலவே திருச்சி பாலக்கரை பகுதியிலும் இரட்டைப் பிள்ளையார் அருள்புரிகிறார். பிள்ளையாருக்கு உரிய தேய்பிறை சதுர்த்தி திதி மட்டுமின்றி திருவோணம், திருவாதிரை, விசாக நட்சத்திரங்களும் திதிகளில் பஞ்சமியும் இவருக்குரியதாக கருதப்படுகிறது.
தேய்பிறை சதுர்த்தியில் இவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து அர்ச்சித்து வழிபட்டால், செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் தீமைகள் விலகும். மேலும் கார் அரிசியில் மோதகம் (கொழுக் கட்டை) செய்து நிவேதனம் செய்தால் சந்திரனால் ஏற்படும் தோஷம் விலகும்.
திருவோண நட்சத்திரத்தில் இந்த இரட்டைப் பிள்ளையாருக்கு மாம்பழங்கள் நிவேதனம் செய்து ஏழைத் தம்பதிகளுக்கு அளித்தால், கணவன்-மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். திருவாதிரையன்று வில்வத்தால் மாலை தொடுத்து இவரை வழிபட்டால் நோய் நொடிகள் குணமாகும். ஆரோக்கியமாக வாழலாம். பஞ்சமி திதியில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட்டால் கடன் பிரச்சினைகள் தீரும். செல்வ வளம் பெருகும்.
விசாக நட்சத்திரத்தன்று இரட்டை விநாயகருக்கு பூக்களால் தொடுத்த போர்வை போன்ற மலர் ஆடை அணிவித்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நிறை வேறும்.
பொதுவாக, செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டால் நாக தோஷம் விலகும். சனிக்கிழமைகளில் கனி வர்க்கத்தில் ஏதாவது ஒன்றைச் சமர்ப்பித்து வழிபட்டால் சனியின் தாக்கம் குறையும்.
இத்திருக்கோவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.
இதேபோல், தஞ்சை திருவையாறு ஐயானரப்பன் கோவிலில் அருள்பாலிக்கிறார் இரட்டைப்பிள்ளையார். இவர் சன்னதிமுன் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்கலாம்.
திருமணமாகாத பெண்கள் சந்தனாபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். கணவன்-மனைவி ஒற்றுமை பலப்பட சங்கடஹர சதுர்த்தியில் அருகம்புல் மாலை அணிவித்து, மோதகங்கள் படைத்து வழிபட்டால், குடும்பத்தில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நிறைவேறும்.
மேலும், ஸ்ரீரங்கத்திற்கு அருகில் உள்ள உத்தமர் கோவில், திருச்சி உய்யகொண்டான் திருமலை சிவன் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், சேலம் மாவட்டம் ஆத்தூர் தலை வாசலை அடுத்த ஆறகலூரில் இருக்கும் கோவில், ஊட்டி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள விநாயகர் கோவில் போன்ற இடங்களிலும் இரட்டை விநாயகர் சந்நிதி உள்ளது. இரட்டை விநாயகரை ஒரே சன்னதியில் வழிபட்டால் இரு மடங்கு பலன்கள் கிடைக்கும் என்பார்கள்.
- செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு.
- சதுர்த்தி விரதம் அன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி பாராயணம் செய்வது சிறப்பு.
விநாயகரை தினமும் எந்த நேரத்திலும் வணங்கலாம் என்றாலும் அவரை குறிப்பிட்ட நாட்களில் வணங்குவதன்மூலம் அவரின் அன்பைப் பெறலாம். வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதமிருந்து அவரை வழிபட்டால் அனைத்துவிதமான பேறுகளையும் பெறலாம்.
விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல் பொரியால் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப்பெண்களுக்கு முடிந்த வரை தானங்கள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும். அவிட்டம் நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.
விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்திவிட்டு எந்த ஒரு இடத்துக்கும் சென்றால் அங்கு உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியும். சென்ற வேலையில் வெற்றி உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவகை எண்ணெய்களால் பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள் ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.
செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும். பூச நட்சத்திரத்தன்று விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம்மகிழ்ந்து உதவி புரிவார்கள். மூல நட்சத்திரத்தன்று விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை நடக்கும்.
திருவாதிரை நட்சத்திரத்தன்று விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவை படைத்து வணங்கி வந்தால் அபாண்டமாக பழிசுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், மீண்டும் இழந்த பதவியையும், மனநிம்மதியையும் பெறுவார்கள்.
செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த விரதத்தை பார்வதி தேவியில் இருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர். சிவபெருமானும் இந்த விரதம் இருந்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விரத தினத்தன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி போன்றவற்றை பாராயணம் செய்து பயன்பெறலாம்.
- சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.
சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருத்தணி முருகப் பெரு மான் தெப்ப உற்சவம். இருக்கண்குடி மாரியம்மன் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. அஹோபில மடம் ஸ்ரீமத் 22-வது பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் திருநட்சத்திர வைபவம். சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல். ஆலங்குடி குரு பகவான், தக்கோலம் தட்சிணாமூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் ஸ்ரீராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு குருவார திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆடி-25 (வியாழக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: நவமி காலை 9.04 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: கார்த்திகை காலை 7.44 மணி வரை பிறகு ரோகிணி
யோகம்: மரணயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சந்திராஷ்டமம்: சுவாதி
கீழ்நோக்குநாள்
இன்றைய ராசிபலன்
மேஷம்- பாராட்டு
ரிஷபம்- பரிவு
மிதுனம்- நம்பிக்கை
கடகம்- நன்மை
சிம்மம்- மாற்றம்
கன்னி- யோகம்
துலாம்- வரவு
விருச்சிகம்- நலம்
தனுசு- மேன்மை
மகரம்- சிந்தனை
கும்பம்- பெருமை
மீனம்- திறமை
- திருத்தணி முருகப் பெருமான் தெப்ப உற்சவம்.
- இருக்கன்குடி மாரியம்மன் பவனி.
இன்று கார்த்திகை விரதம். திருத்தணி முருகப் பெருமான் தெப்ப உற்சவம். இருக்கன்குடி மாரியம்மன் பவனி. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபி ஷேகம். சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் பொங்கல் பெருவிழா. புகழ் சோழநாயனார் குருபூஜை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி காலை சிறப்பு திருமஞ்சனம். திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆடி-24 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: அஷ்டமி காலை 9.33 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம்: பரணி காலை 7.32 மணி வரை பிறகு கார்த்திகை
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சந்திராஷ்டமம்: சித்திரை
கீழ்நோக்கு நாள்
இன்றைய ராசிபலன்
மேஷம்- மாற்றம்
ரிஷபம்- மறதி
மிதுனம்- சிறப்பு
கடகம்- போட்டி
சிம்மம்- பொறுமை
கன்னி- அமைதி
துலாம்- வெற்றி
விருச்சிகம்- செலவு
தனுசு- முன்னேற்றம்
மகரம்-இன்பம்
கும்பம்- தெளிவு
மீனம்- நற்செயல்திருத்தணி முருகப் பெருமான் தெப்பல் உற்சவம்.
- சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
- கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் சக்தி அழைப்பு உருள் தாண்டவக் காட்சி. திருப்போரூர் முருகப் பெருமான் அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு. வடபழனி, சிறுவாபுரி, கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆடி-23 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சப்தமி காலை 10.30 மணி வரை, பிறகு அஷ்டமி
நட்சத்திரம்: அசுவினி காலை 7.46 மணி வரை, பிறகு பரணி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சந்திராஷ்டமம்: அஸ்தம்
சமநோக்கு நாள்
நாளைய ராசிபலன்
மேஷம்- சாந்தம்
ரிஷபம்- விருத்தி
மிதுனம்- வெற்றி
கடகம்- லாபம்
சிம்மம்- உயர்வு
கன்னி- முயற்சி
துலாம்- யோகம்
விருச்சிகம்- பரிவு
தனுசு- ஆதாயம்
மகரம்- நட்பு
கும்பம்- நன்மை
மீனம்- ஜெயம்
- சிவன் கோவில்களில் நாளை சிறப்பு, சோமவார அபிஷேகம், அலங்காரம்
- திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. இருக்கன்குடி மாரியம்மன் பவனி.
சிவன் கோவில்களில் நாளை சிறப்பு, சோமவார அபிஷேகம், அலங்காரம்
சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்குத் திருமஞ்சன சேவை. இருக்கன்குடி மாரியம்மன் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.
திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரர், திருவான்மியூர் திரிபுரசுந்தரியம்பாள் சமேத மருந்தீசுவரர், பெசன்ட்நகர் அராளகேசியம்மாள் சமேத ரத்தினகிரீசுவரர் கோவில்களில் சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆடி-22 (திங்கட்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: சஷ்டி காலை 11.53 மணி வரை, பிறகு சப்தமி
நட்சத்திரம்: ரேவதி காலை 8.25 மணி வரை, பிறகு அசுவினி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
சந்திராஷ்டமம்: உத்திரம்
சமநோக்கு நாள்
இனறைய ராசிபலன்
மேஷம்- நிறைவு
ரிஷபம்- தாமதம்
மிதுனம்- உவகை
கடகம்- பக்தி
சிம்மம்- பேராசை
கன்னி- நிம்மதி
துலாம்- நலம்
விருச்சிகம்- நன்மை
தனுசு- பொறுப்பு
மகரம்- அன்பு
கும்பம்- பொறுமை
மீனம்- ஓய்வு
- ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை.
- தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு.
சூரியனார் கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் பவனி. சேலம் செவ்வாப்பேட்டை மாரியம்மன் நூதன மின் விளக்கு அலங்கார விருஷப வாகனத்தில் புறப்பாடு. இருக்கண்குடி மாரியம்மன் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமாருக்கு திருமஞ்சன சேவை. தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆடி-21 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: பஞ்சமி நண்பகல் 1.37 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 9.28 மணி வரை பிறகு ரேவதி
யோகம்: அமிர்தயோகம்
ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை
மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆதாயம்
ரிஷபம்-செலவு
மிதுனம்-வரவு
கடகம்-தடை
சிம்மம்-நன்மை
கன்னி-சுகம்
துலாம்- நலம்
விருச்சிகம்-உழைப்பு
தனுசு- பெருமை
மகரம்-கடமை
கும்பம்-கீர்த்தி
மீனம்-உதவி
- விநாயக பெருமானுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
- பூஜையில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் வட்டாரத்தில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு, பல்லடம் செல்வ விநாயகர் திருக்கோவில், அங்காளம்மன்கோவில், பொன்காளியம்மன் கோவில், பச்சாபாளையம் மாகாளியம்மன் கோவில், மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலை கோவில், வடுகபாளையம் சக்தி விநாயகர் கோவில், சந்தைபேட்டை கோட்டை விநாயகர் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் விநாயகப் பெருமானுக்கு மஞ்சள், சந்தனம், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சங்கடகர சதுர்த்தி பூஜையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப்பெருமானை வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
- உப்பிலியப்பன்கோவில் ஸ்ரீசீனிவாச பெருமாள் சிறப்பு ஸ்திவார திருமஞ்சன அலங்கார சேவை.
- கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
திருநள்ளாறு சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம். வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் குதிரை வாகனத்தில் புறப்பாடு. இருக்கண்குடி மாரியம்மன் திருவீதி உலா. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன்கோவில் ஸ்ரீசீனிவாச பெருமாள் சிறப்பு ஸ்திவார திருமஞ்சன அலங்கார சேவை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆடி-20 (சனிக்கிழமை)
பிறை :தேய்பிறை
திதி : சதுர்த்தி பிற்பகல் 3.37 மணி வரை பிறகு பஞ்சமி
நட்சத்திரம் : பூரட்டாதி காலை 10.44 மணி வரை பிறகு உத்திரட்டாதி
யோகம் : மரண, சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை; மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சந்திராஷ்டமம்: மகம்
கீழ்நோக்கு நாள்
இன்றைய ராசிபலன்
மேஷம்- யோகம்
ரிஷபம்- பெருமை
மிதுனம்- மேன்மை
கடகம்- சோதனை
சிம்மம்- குழப்பம்
கன்னி- அமைதி
துலாம்- கவனம்
விருச்சிகம்- நிம்மதி
தனுசு- பக்தி
மகரம்- வெற்றி
கும்பம்- ஆசை
மீனம்- உவகை
- சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
- ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
இன்று சங்கடஹர சதுர்த்தி. சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் வெள்ளி விமானத்தில் பவனி. இருக்கண்குடி மாரியம்மன் உற்சவம் ஆரம்பம். வடமதுரை ஸ்ரீசவுந்தரராஜப் பெருமாள் கருட வாகனத்தில் திருவீதி உலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. திருவலஞ்சுழி, திருநாரையூர், உப்பூர், பிள்ளையார்பட்டி, மதுரை தலங்களில் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம். ராமேசுவரம் பர்வதவர்த்தினியம்மன் அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, ஆடி-19 (வெள்ளிக்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: திருதியை மாலை 5.31 மணி வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: சதயம் நண்பகல் 12.14 மணி வரை. பிறகு பூரட்டாதி.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம்: மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை; மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சந்திராஷ்டமம்: ஆயில்யம்- மகம்
மேல்நோக்கு நாள்
இன்றைய ராசிபலன்
மேஷம் - நிறைவு
ரிஷபம் - ஆர்வம்
மிதுனம் - முயற்சி
கடகம் - பரிவு
சிம்மம் - ஓய்வு
கன்னி - ஜெயம்
துலாம் - நன்மை
விருச்சிகம் - செலவு
தனுசு - சிந்தனை
மகரம் - அமைதி
கும்பம் - வரவு
மீனம் - சாதனை
- `ஓம்' என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி
- இதயமே `ஓம்' என்ற வடிவத்தில் அமைத்திருக்கிறது.
விநாயகருக்கான ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் விநாயக சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இது தவிர மாதம் தோறும் தேய்பிறை சதுர்த்தி திதியில் சங்கடஹர சதுர்த்தி விரதம் வரும் கார்த்திகை மாதத் தேய்பிறை பிரதமை திதி வரையில் 21 நாட்கள் விநாயக சஷ்டி விரதம் அனுஷ்டிக்கலாம்.
`ஓம்' என்பதின் அர்த்தம்
`ஓம்'-என்பதற்கு நூறுக்கு அதிகமான அர்த்தங்கள் இருக்கின்றன. `ஓம்' என்ற சொல் மந்திரங்களின் ஆதார சுருதி பிற மந்திரங்களின் முன்னோடியாக வரும் பீஜமந்திரம் இந்த சொல்லில் இருந்து தான் மற்ற மந்திரங்கள் பிறந்தன. இது படைப்புக்கடவுள் பிரம்மனின் நாத வடிவம். ஓம் என்பது முழுமையை குறிக்கிறது.
இது பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் பொதுவானது.
`ஓம்' என்பது சுற்றிக் கொண்டேயிருக்கும் பூமி கடவுளின் சங்கீத சுருதியுடன் சேர்ந்த ஒலி. இந்த `ஓம்' என்ற சொல் மனதை ஒருமுகப்படுத்தும் வித்தையைச் செய்கிறது. `ஓம்' என்ற நாதத்தில் கணபதி முழுமையாக இருக்கிறார். `ஓம்' என்பது ஆத்மாவின் இருப்பிடமான இதயத்தில் இருந்து 108 நாடிகளை இயக்குகிறது. இதயமே `ஓம்' என்ற வடிவத்தில் அமைத்திருக்கிறது.
விநாயகரை துதிக்க மந்திரம்
ஓம் சுமுகாய நம
ஓம் ஏக தந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்னராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய சசாய நம
ஓம் பால சந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்ப கன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வஜாய நம
மேலே உள்ள மந்திரத்தைச் சொன்னாலே, கஷ்டங்கள் நீங்கி வாழ்வு மலர்ந்து மணம் வீசும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்