search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டத்தில்"

    • போலீஸ் நிலையத்தில் இருந்து மெர்லின்ட்ராஜ் தனது நண்பருடன் திருடிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
    • வாகன திருட்டு, சங்கிலி பறிப்பு, கொலை ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 24 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.

    திருவட்டார்:

    திருவட்டார் அருகே முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் மெர்லின்ட்ராஜ் (வயது 37). ராணுவத்தில் பணியாற்றிய இவர், பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த காரணத்தால் டிஸ்மிஸ் செய்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருட்டு, நகைபறிப்பு போன்ற வற்றில் ஈடுபட்டுள்ளார். கொள்ளை, அடிதடி உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுப்பட்டதாக இவர் மீது தக்கலை, திருவட்டார், மார்த்தாண்டம், கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதி போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையில் ஒரு சம்பவத்தின் போது இவர் தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிள் பழுதானதால், அதனை சாலையில் விட்டுச் சென்றார். அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் கைப்பற்றி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி இருந்தனர். அதனை போலீஸ் நிலையத்தில் இருந்து மெர்லின்ட்ராஜ் தனது நண்பருடன் திருடிச் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.

    தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி மார்த்தாண்டம் திக்குறிச்சி பகுதியில் பதுங்கி இருந்த மெர்லின்ட்ராஜை கைது செய்தனர். வாகன திருட்டு, சங்கிலி பறிப்பு, கொலை ஆகிய குற்ற செயல்களில் ஈடுபட்டதாக 24 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது. இதனால் அவனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பரிந்துரைத்தார். இதனை ஏற்று மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து மெர்லின்ட்ராஜ் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து கைது செய்து நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    • டி.எஸ்.பி. மகேஷ்குமார் எச்சரிக்கை
    • உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மட்டும் இல்லாமல் உலகெங்கிலும் இருந்து தினமும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இங்கு ஏராளமான தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் மதுபான கூடங்களும் உள்ளன. இந்த நிலையில் இங்குள்ள ஒரு சில தனியார் மதுபான கூடங்களில் அரசு நிர்ணயித்துள்ள நேரத்தை கணக்கிடாமல் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை செய்து வருவதாகவும் இதனால் பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

    இதனை தடுக்கும் விதமாக கன்னியாகுமரி பகுதியில் உள்ள தனியார் மதுபான கூடங்களின் உரிமையாளர்களை கன்னியாகுமரி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள கன்னியாகுமரி சரக டி.எஸ்.பி. மகேஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:- அரசு நிர்ணயித்துள்ள நேரத்தில் மட்டுமே தனியார் மதுபான கூடங்கள் செயல்பட வேண்டும், எக்காரணம் கொண்டும் பார்சல் கொடுக்க கூடாது. மேலும் சட்டத்திற்கு புறம்பாக மது விற்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும். தமிழக அரசு காவல்துறையில் பணி புரியும் அனைவருக்கும் நிறைவான ஊதியத்தை கொடுக்கிறது. இதனால் ஒரு பைசா கூட யாரும் லஞ்சம் கொடுக்க தேவை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் . இவர் திருட்டு வழக்கில் சூரம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • தொடர்ந்து திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மரப்பாலம் ஆலமரத்து வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் திருட்டு வழக்கில் சூரம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    தொடர்ந்து திருட்டு, அடிதடியில் ஈடுபட்டு வருவதால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீசார் கலெக்டரிடம் பரிந்துரை செய்தனர். இதனை ஏற்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.

    இதனையடுத்து மணிகண்டன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

    ×