என் மலர்
நீங்கள் தேடியது "விழுந்த"
- இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
- சிகிச்சை பலனின்றி தாசையன் பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் குதிரால்விளையை சேர்ந்தவர் தாசையன் (வயது 55), கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். தாசையன் மார்த்தாண்டத்தை அடுத்த விரிகோடு பகுதியில் மதில் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சிமெண்ட் கட்டையை தலையில் சுமந்து சென்ற போது எதிர்பாராதவிதமாக 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த தாசையனை மீட்டு குழித் துறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி தாசையன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பட்டகரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). கூலி தொழிலாளியான இவர், நேற்று ஏற்காட்டிற்கு சென்றார்.
- ஏற்காடு மலைப் பாதையின் உள்ள 60 அடி பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பில் இருசக்கர வாகனத்துடன் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், 100 அடி பள்ளத்தில் விழுந்தார்.
ஏற்காடு:
சேலம் சிவதாபுரம் ஆண்டிப்பட்டி பட்டகரை பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). கூலி தொழிலாளியான இவர், நேற்று ஏற்காட்டிற்கு சென்றார். அங்கு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, நேற்று இரவு சுமார் 2 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் சேலம் திரும்பி கொண்டிருந்தார்.
ஏற்காடு மலைப் பாதையின் உள்ள 60 அடி பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென நிலை தடுமாறி சாலையோரம் இருந்த தடுப்பில் இருசக்கர வாகனத்துடன் மோதினார். இதில் தூக்கி வீசப்பட்ட அவர், 100 அடி பள்ளத்தில் விழுந்தார்.
இந்த நிலையில் இன்று காலை, நடைபயிற்சிக்கு வந்த சிலர், ரமேஷை பார்த்து, செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ரமேஷை பள்ளத்தில் இருந்து மீட்டனர்.
பள்ளத்தில் விழுந்ததில் அவருக்கு இடுப்பு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பின்னர் மேல்சிகிச்சை க்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்
- இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு அடுத்த கவுண்டச்சிபாளையம் கொங்கனபாளி யை சேர்ந்தவர் ராமசாமி (54). காவலாளி. இவர் கடந்த மாதம் 13-ந் தேதி முத்தம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு போதையில் அப்பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்கால் ஓரத்தில் படுத்திருந்தார்.
அப்போது அவர் தவறி வாய்க்காலில் விழுந்தார். இதில் தலை மற்றும் இடுப்பில் காயம் அடைந்த ராமசாமியை 108 ஆம்புலன்சு மூலமாக மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சை க்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடுகளுக்காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி ஒன்றும் அந்த பகுதியில் உள்ளது.
- பசுமாட்டை பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் பகுதியில் சுனாமி குடியி ருப்பு உள்ளது. இந்த பகுதி யில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் இந்த வீடுகளில் யாரும் குடியிருக்கவில்லை. இதனால் இந்த வீடுகள் அனைத்தும் பூட்டிய நிலையில் பாழடைந்து கிடக்கிறது. இந்த வீடுகளுக்காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி ஒன்றும் அந்த பகுதியில் உள்ளது.
கழிவு நீர் தொட்டியின் மூடி உடைந்த நிலையில் கிடக்கிறது. இந்த நிலையில் அந்தப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று இந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
இதனை பார்த்த அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் உடனே கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி வித்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட்தம்பி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கழிவுநீர் தொட்டியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பசுமாட்டை பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.
- பெருந்துறை அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் தலையில் பலத்த அடிபட்டு பலியானார்.
- இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
பெருந்துறை:
சித்தோடு ராயபாளையம்புதூர் கோர்ட் காலனி பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 52). இவர் நேற்று மாலை பெருந்துறை வந்துவிட்டு சித்தோடு செல்வதற்காக தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
பவானி ரோடு எருகாட்டுவலசு அருகே சென்று கொண்டிருந்த போது மொபட்டில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். உடனே அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூச்சு பேச்சின்றி கிடந்தார்.
உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.