என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய"

    • தேசிய நூலக வார விழா நிறைவடைந்தது
    • போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள்

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட மைய நூலகத்தில் ஒரு வாரமாக நடைபெற்று வந்த தேசிய நூலக வார விழா நிறைவுப் பெற்றது.

    இந்த நிறைவு நாள் விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் சண்முகநாதன் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலக கண்காணிப்பாளர் கிருஷ்ணலீலா, ரோட்டரி கிளப் தலைவர் அழகுதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில், அரியலூர் நகர் மன்ற தலைவர் சாந்தி, வாசகர் வட்டத் தலைவர் மங்கையர்க்கரசி, அரியலூர் அரசு கலைக் கல்லூரி தமிழாய்வுத் துறை தலைவர் தமிழ்மாறன், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை தமிழாசிரியர் தமிழனி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்கலையும் வழங்கினர்.

    அப்போது அவர்கள் பேசுகையில், கல்வி என்ற பெரும் கடலை தனக்குள் தேக்கி வைத்துள்ள நூலகங்கள் தன்னை தேடி வரும் வாசகர்களின் அறிவு பசியினை போக்கி அவர்களை பூரணமான மனிதர்களாக சமூகத்துக்கு தருகின்றன. எனவே நல்ல பயனுள்ள நூல்களை படித்து சமுதாயத்துக்கு தொண்டு ஆற்ற வேண்டும் என்றனர்.

    முன்னதாக முதல்நிலை நூலகர் ஸன்பாஷா வரவேற்றார். முடிவில் நூலக அலுவலக உதவியாளர் மலர்மன்னன் நன்றி தெரிவித்தார்.

    • தேசிய பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • தமிழக அரசால் 2022-ம் ஆண்டிற்கு வழங்கப்படும்

    பெரம்பலூர்

    தமிழக அரசால் 2022-ம் ஆண்டிற்கு வழங்கப்படும் தேசிய பெண் குழந்தைகள் விருதிற்கு தமிழகத்தை பிறப்பிடமாக கொண்ட 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு ஆற்றிய வீர தீர செயல் மற்றும் சாதனைகள் புரிந்த கீழ்க்காணும் தகுதிகளுடைய பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்துதல், ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் தகுதிகளையுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். உரிய விவரங்களுடன் வருகிற 30-ந்தேதி மாலை 5.30 மணிக்குள் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் வளாகம் என்ற முகவரியை அணுகி தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்திடுமாறு மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கேட்டுக் கொண்டுள்ளார்

    • தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) 21.12.2022 முதல் 3.1.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
    • பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டணமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் 'விளையாடு இந்தியா' திட்ட நிதி உதவியில் துவக்க நிலை கால்பந்து பயிற்சிக்கான 'விளையாடு இந்தியா மாவட்ட மையம்' கன் னியாகுமரி மாவட்டம் அறிஞர் அண்ணா விளை யாட்டரங்கத்தில் அமைக் கப்பட உள்ளது.

    இம்மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் சேர்க்கப் பட்டு அவர்களுக்கு தின சரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட, தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர்/வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது 5 ஆண்டுகளா கவும், தற்போது கன்னியா குமரி மாவட்டத்தில் வசிப் பவராகவும் இருக்க வேண் டும்.

    சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவி லான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங் களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ, சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும். தேர்ந் தெடுக்கப்படும். பயிற்சி யாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயிற்சிக் கட்டண மாக ரூ.18 ஆயிரம் வழங் கப்படும்.

    இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்கா லிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது. இதற்குரிய விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) 21.12.2022 முதல் 3.1.2023 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண் ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நாகர்கோ வில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும்.

    உடற்தகுதி, விளை யாட்டுத்திறன், பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகிய வற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

    இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    • திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
    • முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணிவகுப்பில் காவல்துறையுடன் இணைந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கும், சாரணர் - கவர்னர் விருதுத் தேர்வுக்கு கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் தலைமை ஆசிரியர் ராஜா வழங்கி னார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

    விழாவில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்க ளுக்கும், மாநில அளவிலான கலைத்திருவிழாவில் சேவை செய்த மாணவர்களுக்கும், முதன்முறையாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் அணிவகுப்பில் காவல்துறையுடன் இணைந்து கலந்து கொண்ட மாணவர்களுக்கும், சாரணர் - கவர்னர் விருதுத் தேர்வுக்கு கலந்து கொண்ட மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் தலைமை ஆசிரியர் ராஜா வழங்கி னார். உதவித் தலைமை ஆசிரியை சத்யவதி , சாரண ஆசிரியர் திருவருள்செல்வன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பாராட்டினர்.

    • இடுக்கி மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    • தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தற்போது தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது.

    பல இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் ஏராளமான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. மேலும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் ஊருக்குள் தண்ணீர் புகுந்திருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

    இடுக்கி மாவட்டத்தில் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதேபோல் இடுக்கி, கோழிக்கோடு, பத்தனம் திட்டா, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    சபரிமலை வனப்பகுதியில் கனமழை பெய்வதால் பம்பை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதே போல் மாநிலம் முழுவதும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அங்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

    மாநிலம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் ஆயிரகணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது.

    கனமழை காரணமாக கேரளாவில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். ரூ.8 கோடிக்கும் மேல் பயிர்கள் சேதம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.

    கனமழைக்கு இதுவரை 150-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து உள்ளன. அவற்றை சீரமைக்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    கேரளாவில் இன்றும் கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கு மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர் கோடு ஆகிய 5 மாவட்டங்களில் 6 முதல் 11 சென்டிமீட்டர் வரை இன்று மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பத்தனம்திட்டா, கோட்டையம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

    • கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.
    • பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

    நாகர்கோவில்:

    சுங்கான்கடை புனித சவேரியார் கத்தோலிக்க பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான 8-வது மேலாண்மை விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் மரியவில்லியம் தலைமை தாங்கினார். மாணவி சகாய ரினோஷா வரவேற்றார். விழாவின் அமைப்பு செயலாளர் பேராசிரியை பமிமா விழாவிற்கான அறிமுக உரையாற்றினார். கல்லூரி முதல்வர் மகேஸ்வரன் முன்னிலை வகித்து, பேசினார்.

    கல்லூரி பொருளாளர் பிரான்சிஸ் சேவியர் வாழ்த்தி பேசினார். பேராசிரியை ஜஸ்மின் சுகுனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார். சிறப்பு விருந்தினராக பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் ஓய்வுபெற்ற துணை மேலாளர் அமல்ராஜ் கலந்துகொண்டு பேசினார்.

    விழாவில் மாணவர்களுக்கான சிறந்த மேலாளர் போட்டி, படத்தொகுப்பு போட்டி, வினாடி-வினா, மவுன மொழி நாடகம் போன்ற பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு ரொக்கப்பரிசுடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முடிவில் இணை ஒருங்கிணைப்பா ளர் மாணவர் சேக் சித்தா அர்ஷக் நன்றி கூறினார்.

    விழாவில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை கல்லூரியின் வணிக மேலாண்மை துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செய்திருந்தனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தர உறுதி சான்று குழுவினர் 3-ம் கட்ட ஆய்வு செய்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் தேசிய தர உறுதி சான்று குழுவினர்
    3-ம் கட்ட ஆய்வு செய்தனர்.பின்னர் அங்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இது குறித்து தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது:-

    நாமக்கல் சுகாதார இணை இயக்குனர் ராஜ்மோகன் தலைமையில், மண்டல அலுவலர் ஜெயந்தி உள்ளிட்ட தேசிய தர உறுதி சான்று குழுவினர் கடந்த பிப்ரவரி மாதம் 13-ந்தேதி முதற்கட்ட ஆய்வு செய்தனர். தொடர்ந்து தேசிய தரச்சான்று மண்டல அலுவலர் டாக்டர் அசோக் தலைமையிலான குழுவினர் 2-ம் கட்ட ஆய்வு செய்ததுடன், டாக்டர்கள், நர்சுகள், மருத்துவமனை பணியாளர்களுக்கு பயிற்சியும் வழங்கினர்.

    நேற்று நடைபெற்ற 3-ம் கட்ட ஆய்வில் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி மேற்பார்வையாளர் டாக்டர் வெங்கடேசன், தர்மபுரி சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேஷ்கண்ணா, அரூர் அரசு ஆஸ்பத்திரி தரக்கட்டுபாடு ஒருங்கிணைப்பாளர் வாசுகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள் எத்தனை பேர் உள்ளனர்? சம்பளம் எவ்வளவு தரப்படுகிறது? மொத்தம் இருக்கும் படுக்கை வசதி எத்தனை? என்பது உள்ளிட்ட பல கேள்விகள் கேட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.

    ×