search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 வாலிபர்கள்"

    • சேலம் அயோத்தியாபட்டணத்தை அடுத்த குப்பனூர் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது.
    • இக்கல்லூரியில் படிக்கும் 2 மாணவிகள் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    சேலம்:

    சேலம் அயோத்தியாபட்டணத்தை அடுத்த குப்பனூர் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.

    2 மாணவிகள்

    இந்த நிலையில் இக்கல்லூரியில் படிக்கும் 2 மாணவிகள் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் மாணவிகளை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மாணவிகளை தங்கள் கையைப் பிடித்து சாலையை கடத்தி விடுமாறும் வற்புறுத்தி உள்ளனர். அதற்கு மாணவிகள் மறுத்ததாக தெரிகிறது.

    சரமாரி தாக்குதல்

    இதனை தொடர்ந்து அந்த 2 வாலிபர்களும் மாணவிகளை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை தடுத்து மாணவிகளை மீட்டனர். மேலும் இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கைது

    இதில் மாணவிகளை தாக்கியது குப்பனூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (22), கார்த்திகேயன் (25) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாணவிகளை வழிமறித்து வாலிபர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சேலையால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டு இருந்தார்.
    • வயிற்று வலி அதிகமாக இருந்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பா ளையம் கிருஷ்ணம்பா ளையம் காலனியை சேர்ந்த வர் சரண் (20). இவர் சோப் கம்பெனியில் பணியாற்றி வந்தார்.

    சரணின் அக்காவிற்கு திருமண வரன் பார்ப்ப தற்காக குடும்பத்தினர் அனைவரும் திருப்பூர் மாவட்டத்திற்கு சென்றனர். வீட்டில் சரண் மட்டும் தனியாக இருந்தார்.

    இந்நிலையில் சம்பவ த்தன்று இரவு சரணின் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து நீண்ட நேரம் கதவை தட்டியபோது திறக்க வில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த குடும்ப த்தினர் ஜன்னல் வழியே பா ர்த்த போது சரண் வீட்டின் மேற்கூரை ஆங்கிள் கம்பியில் சேலையால் தூக்கிட்டு இறந்த நிலையில் தொங்கி கொண்டு இருந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சரணி னின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னா்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சரணினின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    இதேப்போல் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுத்தம்பாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (28). இவர் தோட்டத்திற்கு மருந்து அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    ராஜேந்திரன் மதுப்ப ழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததால் அடிக்கடி வயிற்கு வலியால் அவதி ப்பட்டு வந்தார். கடந்த 6 மாதமாக தனியார் மருத்துவ மனையில் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்த ன்று இரவு ராஜேந்திரன் வயிற்று வலி அதிகமாக இருந்ததால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அவரது குடும்பத்தினர் ராஜேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    அங்கு டாக்டர்கள் பரிசோ தித்து விட்டு ராஜேந்திரன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து பவானி சாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜே ந்தி ரனுக்கு லோகேஸ்வரி என்ற மனைவியும், 2½ வயதில் மகன் உள்ளனர்.

    • ஈரோடு கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன்கோவில் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ஈரோடு, ஜூன். 15-

    ஈரோடு கருங்கல்பாளையம், பெரியமாரியம்மன்கோவில் அருகில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 2 பேர் போலீசை பார்த்ததும் தப்பியோட முயன்றனர்.

    அவர்களை மடக்கி பிடித்து விசாரித்ததில் அவர்கள் கருங்கல்பாளையம், மாரியம்மன்கோயில் வீதியை சேர்ந்த வினோத்(32), ராஜாஜிபுரம் மணி(30) என தெரியவந்தது.

    அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடமிருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    ×