என் மலர்
நீங்கள் தேடியது "மின்சார நிறுத்தம்"
- தாம்பரம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
- நாகப்பா நகர், நாகல்கேணி, மெப்ஸ், லட்சுமிபுரம் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் இதில் அடங்கும்.
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக நாளை (சனிக்கிழமை) மின்தடை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம் பகுதியில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.
மின்தடை ஏற்படும் இடங்கள்: தாம்பரம் பகுதியில் கடப்பேரி ராதா நகர், நேரு நகர், குமரன் குன்றம், சிட்லபாக்கம், குரோம்பேட்டை, நாகப்பா நகர், நாகல்கேணி, மெப்ஸ், லட்சுமிபுரம் காலனி மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் இதில் அடங்கும்.
- சென்னையில் நாளை மின் பராமரிப்பு பணி காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படும்.
- கலைமகள் நகர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
சென்னை:
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் நாளை (புதன்கிழமை) மின் பராமரிப்பு பணி காரணமாக பல்லாவரம் டிரங் ரோடு, பழைய சந்தை ரோடு, காவலர் குடியிருப்பு, மூங்கில் ஏரி பகுதி, உசைன்பாசா தெரு, சித்தலப்பாக்கம் நூத்தன்சேரி, வேங்கைவாசல், பாரதிநகர், காந்திநகர், பழனிநகர்.
கிழக்கு முகப்பேர் பகுதியில் உள்ள பாடி புதுநகர் 1-வது தெரு, 19-வது தெரு வரை, கலைவாணர் காலனி, ஜீவன் பீமா நகர், டி.வி.எஸ். அவென்யூ, திருவள்வள்ளுவர் நகர், மகிழ்ச்சி காலனி, கோல்டன் பிளாட்ஸ், தீயணைப்பு துறை குடியிருப்பு, எம்.ஜி. மெயின் ரோடு, ஒலிம்பிக் காலனி, ஆபீசர் காலனி மற்றும் டைட்டல் பார்க் பகுதியில் உள்ள தரமணி பகுதி, பெரியார் நகர், வேளச்சேரி பகுதி, 100 அடி ரோடு பகுதி, அண்ணாநகர், காந்திநகர், அடையார் பகுதி மற்றும் போரூர் பகுதியில் உள்ள பூந்தமல்லி டிரன்க் ரோடு, சேஷா நகர், கலைமகள் நகர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- இந்திரா நகர், சக்ரா நகர், சிவானந்த நகர், அப்பாவு நகர். அம்பத்தூர்- ஜெ.ஜெ.நகர் 10, 11, 12-வது பிளாக் முகப்பேறு கிழக்கு.
- ஜெயந்தி காலனி, போலீஸ் ஏசி குடியிருப்பு, 100 படுக்கை மருத்துவமனை, ராயல் என்க்ளேவ் ஆகிய இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னையில் நாளை (8-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம்- பம்மல் திரு நகர், ஞானமணி நகர், ராஜேஸ்வரி நகர், பசும்பொன் நகர், உதயமூர்த்தி தெரு, ராகவேந்திரா நகர் மெயின் ரோடு, போரூர்- டெம்பிள் வேவ் அமர்பிரகாஷ், குமரன் நகர், பி.கே.வி.மகா நகர், ஆர்.பி.தர்மலிங்கம் நகர் மாங்காடு- ஜனனி நகர், இந்திரா நகர், சக்ரா நகர், சிவானந்த நகர், அப்பாவு நகர். அம்பத்தூர்- ஜெ.ஜெ.நகர் 10, 11, 12-வது பிளாக் முகப்பேறு கிழக்கு.
கே.கே.நகர்- ஆழ்வார்திருநகர் ஆர்.கே.நகர் மெயின் ரோடு ஒரு பகுதி, பாரதியார் தெரு, சிண்டிகேட் காலனி, திருமலை நகர் கோடம்பாக்கம்- சங்கராபுரம் 2, 3, 4-வது தெரு, பாஷா தெரு, அமீர் ஜான் தெரு, ராதாகிருஷ்ணன் நகர், தண்டையார்பேட்டை - அத்திப்பட்டு புதுநகர், செப்பாக்கம், கே.ஆர்.பாளையம், தமிழ்குறஞ்சியூர், கரையான்மேடு.
9-ந்தேதி (செவ்வாய்க்கி ழமை) கீழ்க்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தாம்பரம்- சிட்லபாக்கம் பாம்பன்சாமிகள் சாலை முழுவதும், பாரத் அவென்யூ, எஸ்.பி.ஐ.காலனி ஒரு பகுதி, சுதா அவென்யூ, வீரவாஞ்சி தெரு, ஆதிநாத் அவென்யூ, பாலாஜி நகர், வேளச்சேரி மெயின் ரோடு பகுதி ஐ.ஏ.எப் ஆஞ்சநேயர் கோயில் தெரு, காலமேகம் தெரு, மோகன் தெரு, வியாசர் தெரு, காந்தி நகர், கற்பகவிநாயகர் தெரு, எழும்பூர்- கீழ்பாக்கம் கே.எம்.சி.மருத்துவமனை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், கெல்லீஸ் சந்து, மில்லர்ஸ் ரோடு, செகரியேட் காலனி, பால்பர் ரோடு, ஆம்ஸ் ரோடு, புரசைவாக்கம் மெயின் ரோடு, மேடவாக்கம் தொட்டி சாலை, அயனாவரம், டைலர்ஸ் ரோடு, அகஸ்தியா நகர், புதிய ஆவடி ரோடு, மண்டபம் ரோடு, போரூர்- வயர் லெஸ் ஸ்டேசன் ரோடு, ஜெயா பாரதி நகர், குருசாமி நகர், ராமசாமி நகர், திருமுடிவாக்கம் திருநீர்மலை மெயின் ரோடு, சரண்யா நகர், ஷர்மா நகர், மங்களாபுரி நகர் 1-வது மெயின் ரோடு, திருமுடிவாக்கம் சிட்கோ, வழுதலம்பேடு, கிருஷ்ணா நகர், பெருமாள் நகர், சம்பந்தம் நகர், தாய் சுந்தரம் நகர், மெட்ரோ கிராண்ட் சிட்டி ஐய்யப்பந்தாங்கல் மவுண்ட் பூந்தமல்லி ரோடு, சந்திரா நகர், ஜாஸ்மின் கோர்ட், டி.ஆர்.ஆர் நகர். அண்ணா நகர் - பி பிளாக் முதல் இசட் பிளாக் வரை, ஐஸ்வர்யா காலனி, பி.எஸ்.என்.எல் குடியிருப்பு, ஆர்.பி.ஐ. குடியிருப்பு, ஜெயந்தி காலனி, போலீஸ் ஏசி குடியிருப்பு, 100 படுக்கை மருத்துவமனை, ராயல் என்க்ளேவ் ஆகிய இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.
- தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்து வருகிறது.
- திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பல இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இரவு நேரத்தில் ஏற்படும் தொடர் மின் வெட்டால் புழுக்கத்தாலும், வியர்வையாலும் தூக்கமின்றி தவிக்கும் நிலை உள்ளது.
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருகிறது. திருவள்ளூர் நகரப்புறங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகவும், கிராமப் பகுதிகளில் 6 மணி நேரத்திற்கு மேலாகவும் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் பகல் நேரம் மட்டுமன்றி இரவிலும் தவிக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர்.
கடம்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அதிகத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமத்தில் நேற்று 6 மணி நேரம் தொடர் மின்வெட்டு ஏற்பட்டது. இரவு நேரத்திலும் மின்தடையால் மக்கள் தவித்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அதிகத்தூர் கிராம மக்கள் மணவாள நகர் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கிருந்த அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட கிராமமக்களிடம் அதிகாரிகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கிராமங்களுக்கு அருகே உள்ள தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் மாற்றி அனுப்பப்படுகிறது. இதனால் கிராமப் புறங்களில் மின்சாரம் தடைப்படுகிறது. இதுபற்றி மின்சார வாரிய அதிகாரியை தொடர்பு கொண்டால் சரியான முறையில் பதில் அளிக்கவில்லை. தொடர் மின் வெட்டால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கிராமப்புற பகுதியில் ஏற்படும் மின்வெட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- அம்பத்தூர் போலீஸ் நிலையம் எதிரே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது.
- சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் மின்வினியோகம் சீரானது.
அம்பத்தூர் போலீஸ் நிலையம் எதிரே மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நேற்று இரவு நடைபெற்றது. ஜே.சி.பி. எந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது தரையில் புதைக்கப்பட்டு இருந்த மின்வயர் துண்டானது.
இதனால் அப்பகுதியில் நள்ளிரவில் மின்தடை ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், அம்பத்தூர் கோட்ட செயற்பொறியாளர் மலைவேந்தன் மற்றும் உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் உள்ளிட்ட மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து இரவோடு இரவாக மின் வயரை சரிசெய்தனர். இதனால் சுமார் ஒரு மணிநேரத்துக்கு பின்னர் மின்வினியோகம் சீரானது.
- அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்க தகவல் தெரிவித்தனர். ஆனால் மின்தடை சரி செய்யப்பட வில்லை.
- 15 மணிநேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு உள்ளது.
புது வண்ணாரப்பேட்டை சுடலைமுத்து தெருவில் நேற்று இரவு 9.30 மணியளவில் திடீரென மின்தடை ஏற்பட்டது.
இதுபற்றி அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்க தகவல் தெரிவித்தனர். ஆனால் மின்தடை சரி செய்யப்பட வில்லை. இன்று மதியம் வரை சுமார் 15 மணிநேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கு வசிப்பவர்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.
- பாண்டியன் நகர், கூடுவாஞ்சேரி ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, பெரியார் ராமசாமி சாலை உள்பட சுற்றுப்புற பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
- மறைமலைநகர் மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
மறைமலைநகர்:
பருவமழை காலம் தொடங்குவதை முன்னிட்டு நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மறைமலைநகர் கோட்டத்திற்கு உட்பட்ட கேளம்பாக்கம், நெல்லிக்குப்பம், மாம்பாக்கம், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, தைலாவரம் ஆகிய துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் கேளம்பாக்கம் மார்கெட் பகுதி, சாத்தாங்குப்பம், இளவந்தாங்கல், வீராணம் சாலை, மாரியம்மன் கோவில் தெரு, நெல்லிக்குப்பம், அம்மாப்பேட்டை, கல்வாய், கண்டிகை, கீழ்கல்வாய், கொட்டமேடு, மேலையூர், சிறுங்குன்றம், கொண்டங்கி, மாம்பாக்கம் கூட்ரோடு, வேங்கடமங்கலம் ஒரு பகுதி, பொத்தேரி வட்டாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், ஊரப்பாக்கம் பகுதிகளுக்கு உட்பட்ட பிரியா நகர், அருள் நகர் ஒரு பகுதி, ஜி.எஸ்.டி. சாலை (மேற்கு பகுதி), மீனாட்சி நகர், என்.ஜி.ஒ. காலனி, பாண்டியன் நகர், கூடுவாஞ்சேரி ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, பெரியார் ராமசாமி சாலை உள்பட சுற்றுப்புற பகுதியில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.
இந்த தகவலை மறைமலைநகர் மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரெயிலில் வரும் பயணிகள் கப்பல் மூலம் தலைமன்னார் சென்று மீண்டும் ரெயிலில் கொழும்பு வந்தடைவார்கள்.
- குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் அளவுக்கு தனுஷ்கோடி வளர்ச்சி பெற்றது.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவாகும். இந்த தீவு பகுதி சுமார் 61.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. ராமேசுவரம் தீவில் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகியவை அடங்கும். இதில் தென்னகத்து காசி என்று போற்றப்படும் கோவில் நகரமான ராமேசுவரத்தை விட தனுஷ்கோடி மிகவும் புகழ் பெற்றதாக திகழ்ந்தது.
ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே வணிக தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. எனவே தான் தலைமன்னாரில் இருந்து பாம்பனுக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கி நடைபெற்றது. இதையடுத்து ராமேசுவரம் தீவை மண்டபம் நிலப்பகுதியுடன் இணைக்கும் வகையில் 1914-ம் ஆண்டு பாம்பன் ரெயில் பாலம் திறக்கப்பட்டது. அதன் பிறகு ராமேசுவரம் தீவின் ஆன்மீக தலமாகி போக்குவரத்து வசதிகளைப் பெற்றது.
பாம்பனில் இருந்து 18 மைல் தொலைவிலும், ராமேசுவரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும் வளைந்த வடிவில் ராமேசுவரம் தீவின் தெற்கு முனையில் தனுஷ்கோடி அமைந்துள்ளது. இயற்கை துறைமுகமான தனுஷ்கோடியில் கப்பல் துறைமுகம் திறக்கப்பட்டு சென்னை-கொழும்பு இடையே போட்மெயில் ரெயில் சேவையும் தொடங்கப்பட்டது.
சென்னையில் இருந்து தனுஷ்கோடிக்கு ரெயிலில் வரும் பயணிகள் கப்பல் மூலம் தலைமன்னார் சென்று மீண்டும் ரெயிலில் கொழும்பு வந்தடைவார்கள். புகழ்பெற்ற தனுஷ்கோடி திறந்த பிறகு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியது. கப்பல் போக்குவரத்து தொடங்கி, தனுஷ் கோடி துறைமுகம் சிறப்பாக செயல்பட்டதால், அதுவரை மின்சாரம் இல்லாத ராமேசுவரம் தீவுக்கு மின்சாரம் மிகவும் அவசியமானது. இதையடுத்து ராமேசுவரம் கோவிலுக்கும், தனுஷ்கோடி துறைமுகத்துக்கும் ராட்சத ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது.
அதன்பிறகு, 1922-ல், ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்ட இரும்புத் தூண்கள், மண்டபம் மற்றும் பாம்பன் இடையே கடலில் உள்ள ரெயில்வே பாலத்தின் அருகே நிறுவப்பட்டு, ராமேசுவரத்திற்கு மின்சாரம் வழங்கப்பட்டது. இருப்பினும், தனுஷ்கோடி கடலுக்கு அருகில் உள்ளதாலும், அப்பகுதியில் வீசும் காற்றின் வேகத்தைக் கருத்தில் கொண்டும் மின்சாரம் வழங்கப்படவில்லை.
இந்தியா-இலங்கை இடையே கப்பல் மற்றும் ரெயில் போக்குவரத்தால் குட்டி சிங்கப்பூர் என்று அழைக்கப்படும் அளவுக்கு தனுஷ்கோடி வளர்ச்சி பெற்றது. 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி வீசிய கடும் புயலால் தனுஷ்கோடி ஊருக்குள் கடல் புகுந்தது. கடல் அலையால் மூழ்கி அந்த பகுதியே முழுவதுமாக அழிந்தது.
இதையடுத்து தனுஷ்கோடியை மனிதர்கள் வாழவும், வசிக்கவும் தகுதியற்றதாக அரசு அறிவித்தது. இங்கு வசித்த மக்கள் மாற்று இடங்கள் வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். அவ்வாறு வெளியேறியவர்கள் நடராஜபுரம், சேராங்கோட்டை, ராமகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் குடியேறினர்.
அவர்கள்தான் தற்போது தனுஷ்கோடிக்கு சென்று தொழில் செய்து வருகிறார்கள். காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை அங்கிருக்கும் அவர்கள் சுற்றுலா பயணிகளை நம்பி உள்ளனர். மீன்கள் வியாபாரம், சமைத்து கொடுப்பது, முத்து, சிப்பிகளால் கலைநயமிக்க பொருட்கள் விற்பனை என்று காலத்தை நகர்த்தி வருகிறார்கள்.
இருப்பினும், பாரம்பரியமாக வாழ்ந்த இடத்தை மறக்க முடியாமல், புலம் பெயர்ந்து செல்ல முடியாமல், சாலை, குடிநீர், மின்சாரம், மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகள் ஏதுமின்றி இங்கு குடிசைகளில் தவிக்கும் மீனவர்கள் தங்கியுள்ளனர். இந்த கிராமத்தில் 650-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்தபோதிலும் மின்சாரம் இல்லாததால் மண்ணெண்ணெய் விளக்குகளுடன் இரவு பொழுதை கழிக்கிறார்கள்.
அந்த பகுதியை சேர்ந்த நாட்டுப்படகுகளை பயன்படுத்தும் தனுஷ்கோடி கிராம மீனவர்கள் மின்சாரம் இல்லாததால், இருளில் வலையில் இருந்து மீன்களை எடுக்க முடியாமல், குளிர் சாதன பெட்டிகளில் வைத்து பாதுகாக்க முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் சில தொண்டு நிறுவனங்கள் சில வீடுகளுக்கு சோலார் மின்சாரம் வழங்கியுள்ளன. ஆனால் காற்றில் மின்கம்பிகள் சேதமடைந்து பயனற்றுப் போய்விட்டது.
பல்வேறு பேரூராட்சி தலைவர்களிடமும், முதல்வரிடம் மனு அளித்தும் இன்று வரை தனுஷ்கோடிக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் பலமுறை ஆராயப்பட்டன. அதாவது ராமேசுவரம் நடராஜபுரம் பகுதியில் இருந்துதான் தனுஷ்கோடிக்கு மின்சாரம் கொண்டு செல்லவேண்டும் இதற்கு இடைப்பட்ட தூரம் சுமார் 25 கி.மீ. ஆகும்.
ஆனால் தனுஷ்கோடி பகுதியில் அடிக்கடி ஏற்படும் கடல் அரிப்பு, சூறாவளிக்காற்று உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் மின்சாரம் கொண்டு செல்வது சாத்தியமற்றதாக உள்ளது. 1964 புயலால் ரெயில் தண்டவாளம் சேதமடைந்து தனுஷ்கோடி அழிந்தபோது 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். தற்போது அங்கு சிதிலமடைந்த கிறிஸ்தவ தேவாலயமும், ஒரு சில கட்டிடங்களுமே மிஞ்சியிருக்கிறது.
கடலின் நிலையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள், நவம்பர், டிசம்பர் மாதங்களில் கடல் அலைகள் ஊருக்குள்புகுவது, சாலைகள் மணலால் மூடப்படுவது போன்ற காரணங்களால் 76 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் வாடும் தங்கள் கிராமத்திற்கு மின்சாரம் வழங்கவும், ஆண்டுக்கு 3 கோடி பேர் வரை வருகை தரும் தனுஷ்கோடியை மீண்டும் புத்துயிர் பெற செய்யவும் மத்திய, மாநில அரசுகள் முன்வரவேண்டும் என்ற நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் தனுஷ்கோடி பகுதியில் வசிக்கும் மக்கள் உள்ளனர்.
இதற்கிடையே இலங்கை-தனுஷ்கோடி இடையேயான கடல் பகுதியை கண்காணிப்பதற்காக சமீபத்தில் கலங்கரை விளக்கம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பு இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.
- மின்தடை குறித்து முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவள்ளூர்:
கோடை வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அறிவிக்கப்படாத மின்தடை நிலவுகிறது. இரவு நேரத்தில் ஏற்படும் மின்தடையால் மக்கள் புழுக்கத்தால் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருவள்ளூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பு இல்லாமல் மின் நிறுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. தினந்தோறும் 10 மணிநேரத்திற்கும் மேல் மின்தடை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு மேல் மின்வினியோகம் சீரானது. ஆனால் இரவு 10 மணிக்கு மேல் மீண்டும் மின்தடை ஏற்பட்டது. இடையிடையே சுமார் 10 நிமிடம் மட்டும் மின்வினியோகம் வழங்கபட்ட நிலையில் அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது.

இதனால் வீடுகளில் தூங்க முடியாமல் பொதுமக்கள் விடிய, விடிய தவித்தனர். மின்தடை குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தொடர்பு கொண்ட போது அதிகாரிகள் யாரும் பதில் அளிக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். ஏற்கனவே மின்தடை ஏற்பட்டு வரும் நிலையில் திருவள்ளூர், தேரடி பகுதியில் இரவு நேரத்தில் மின் இணைப்பை துண்டித்து ஊழியர்கள் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் அங்கிருந்த ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினர்.
மின்தடை குறித்து முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி
- பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்வி நியோகம் கொடுக்கப்படும்.
சென்னை:
தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பல் கூறியிருப்பதாவது:-
சென்னையில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
எனவே நாளை வியாசர்பாடி, மாதவரம்: லெதர் எஸ்டேட், கே.கே.ஆர். டவுன்) கம்பன் நகர், முல்லி தெரு, தாமரை தெரு, ரோஜா தெரு, கணேஷ் நகர், ஸ்ரீ ஸ்ரீநீவாச பொருமாள் கோவில் தெரு பழனியப்பா நகர், மேத்தா நகர், பத்மாவதி நகர், மாத்தூர், 1-வது மெயின் ரோடு எம்.எம்.டி.எ. 1 பகுதி, எடைமா நகர், ஆவின் குடியி ருப்புகள், மெட்ரோ வாட்டர் பம்பு ஹவுஸ், சி.எம்.பி.டி.டி., தாத்தாங்கு ளம் ரோடு, தாரபந்த் அப்பார்ட்மென்ட், தேவராஜ் நகர் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
சித்தாலபாக்கம்: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சி.பி.ஒ.எ. காலனி, வீனஸ் காலனி, எம்.ஜீ.ஆர். தெரு.
எம்பாசி: (பெரும்பாக்கம்) எம்பாசி அப்பார்மெண்ட் பகுதி.
கிருஷ்ணா நகர்: (பள்ளிக்கரணை) ராஜலட்சுமி நகர், துலக்காணத்தம்மன் கோயில் தெரு, வள்ளாள பாரி நகர், ரங்கநாதபுரம்.
கோவிலம்பாக்கம்: மேடவாக்கம் மெயின் ரோடு, வெள்ளக்கல், நன்மங்களம் ஒரு பகுதி.
மாடம்பாக்கம்: வேங்கை வாசல் மெயின் ரோடு, நகர், புனித ஜான்ஸ் தெரு, தாமஸ் தெரு.
அடையார்: வேளச்சேரி பைபாஸ் ரோடு, மெட்ரோ வாட்டர், முதல் விஜயா நகர் பஸ் நிலையம் வரை, வெங்கடேஷ்வரா நகர், தேவி கருமாரியம்மன் நகர்.
தி.நகர்: தணிக்காசலம் ரோடு, தியாகராய ரோடு, பனகல்பார்க், சுப்பிரமணிய விஜயராகவாச்சாரி தெரு, கிரியப்பா சாலை பகுதி, உஸ்மான்சாலை பகுதி, ராமசந்திரன் சாலை, தெற்கு போக் சாலை, சிங்காரவேலன் தெரு, இந்தி பிரசார சபா தெரு ஒரு பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்வி நியோகம் கொடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
- அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்று உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த இருளிப்பட்டு துணை மின் நிலையத்தில் நாளை (11-ந்தேதி) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையடுத்து துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அழிஞ்சிவாக்கம் ஸ்ரீநகர், எம்.ஜி.ஆர். நகர். ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை,கணேஷ் நகர், சாய் கிருப நகர், சங்கீதா ஓட்டல், சித்தி விநாயகர், பண்ணை ஸ்ரீநகர் விஷ்ணு பவன், மாதவராவ் பெட்ரோல் பங்க், இருளிப்பட்டு எம்.கே. கார்டன், அத்திப்பட்டு விருந்தாவனம் நகர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என்று உதவி பொறியாளர் தெரிவித்துள்ளார்.
- கடந்த சில நாட்களாக ஜிப்மர் ஊழியர்கள் குடியிருப்பில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
- போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி கோரிமேட்டில் ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் ஜிப்மர் இயக்குனர், டீன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்களுக்கான குடியிருப்புகளும் உள்ளன.
கடந்த சில நாட்களாக ஜிப்மர் ஊழியர்கள் குடியிருப்பில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் ஊழியர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
அதுபோல் நேற்று நள்ளிரவும் மின்தடை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் அங்குள்ள ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோரிமேடு போலீசார் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜிப்மர் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனையேற்று ஜிப்மர் ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். நள்ளிரவில் நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.