search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபால் போட்டி"

    • விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையிலான அணி தோல்வியடைந்தது
    • அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

    திருப்பூர்:

    உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் பல்லடம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் ஒரு பகுதியாக பல்லடம் அரசு மேல்நிலை ப்பள்ளி மாணவர் விடுதியை ஆய்வு செய்தார். அப்போது அங்கு மாணவர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களுடன் கலெக்டர் கிறிஸ்துராஜ் கலந்துரையாடினார். அப்போது மாணவர்கள் தங்களுடன் வாலிபால் விளையாட வருமாறு அழைத்தனர்.

    மாணவர்கள் வற்புறுத்தலின் பேரில் கலெக்டர் போட்டியில் பங்கேற்றார். கலெக்டர் தலைமையில் ஒரு அணியும், மற்றொரு அணியும் மோதின. போட்டி தொடங்குவதற்கு முன்பாக மாணவர்களிடம் பேசிய கலெக்டர், இப்போட்டியில் தோல்வியடைந்தால் 10 தண்டால் எடுக்க வேண்டும் என்று சவால் விடுத்தார். அதனை 2 அணி மாணவர்களும் ஏற்றுக்கொண்டனர்.

    இதையடுத்து போட்டி தொடங்கியது. விறு விறுப்பாக நடைபெற்ற போட்டியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையிலான அணி தோல்வியடைந்தது. இதையடுத்து கலெக்டர் தனது அணி மாணவர்களுடன் சேர்ந்து 10 தண்டால் எடுத்தார். இது அங்கிருந்த அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது.

    • திண்டுக்கல் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
    • இப்போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டன.

    திண்டுக்கல்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் மாவட்டம் சார்பில் மாவட்ட அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது. மாவட்ட அளவிலான ஆண்களுக்கான வாலிபால் போட்டிகளை மாவட்ட கலெக்டர் பூங்கொடி இன்று தொடங்கி வைத்தார்.

    இப்போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டன. நாளை பெண்க ளுக்கான வாலிபால் போட்டிகள் நடைபெற வுள்ளன.

    இதில் மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ரோஸ் பாத்திமா மேரி, நடுவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • 14 வயதுக்குட்பட்ட பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவிலும் கம்பம் சக்திவிநாயகர் பன்னாட்டு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.
    • வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் அச்சுதநாகசுந்தர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.

    கம்பம்:

    மதுரை சகோதயா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் சார்பாக தேனி மேரிமாதா பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது.

    இதில் 15 அணிகள் கலந்து கொண்டன. 14 வயதுக்குட்பட்ட பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவிலும் கம்பம் சக்திவிநாயகர் பன்னாட்டு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.

    வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் அச்சுதநாகசுந்தர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கொங்கல்நகரம் கிராமத்தைச்சேர்ந்த நகுல்நந்தன் விளையாடிசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
    • சொந்த கிராமத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    உடுமலை:

    மத்திய அரசு சார்பில், ஹரியானா மாநிலத்தில், தேசிய அளவில்இளைஞர்களுக்கான, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடந்தது.இதில் தமிழக வாலிபால் போட்டியில் தமிழக அணி இறுதிப்போட்டியில், ஹரியானா மாநில அணியை 3-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றது.

    இதில் தமிழக அணிக்காககுடிமங்கலம் ஒன்றியம், கொங்கல்நகரம் கிராமத்தைச்சேர்ந்த நகுல்நந்தன் விளையாடிசிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தமிழக அணிக்காக போட்டியில் பங்கேற்று திரும்பிய அவருக்கு சொந்த கிராமத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.கொங்கல்நகரம் ஊராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஊராட்சித்தலைவர் விஸ்வநாதன் மற்றும் பாசன சபை தலைவர் நாகராஜன் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று நகுல்நந்தனுக்கு பாராட்டு தெரிவித்தனர். கிராம பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து மகிழ்ந்தனர்.

    ×