என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூட்டு உடைப்பு"

    • இந்திரா வீட்டைப் பூட்டிவிட்ட வேலைக்குச் சென்றுவிட்டார்.
    • இது குறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கோவில்புரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடி மனைவி இந்திரா (50) கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இந்திரா வீட்டைப் பூட்டிவிட்ட வேலைக்குச் சென்றுவிட்டார். வேலை முடிந்து வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோவிலிருந்த 33/4 பவுன் தங்க நகைகள், 1/4 கிலோ வெள்ளிப் பொருட்கள் ஆகியவை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து அவலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாடுகள் 2-வது முறையாக பூட்டை உடைத்து விடுவிக்கப்பட்டன.
    • நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போக்குவரத்து நிறைந்த ரோடுகளில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். கால்நடைகள் வளர்ப்பதை முறைப்படுத்த முன்வராத அதிகாரிகளால் இப்பிரச்சினைகள் தொடர்கிறது.

    தடையற்ற போக்கு வரத்திற்காக உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் விதிகள் ஏற்படுத்தப்ப ட்டுள்ளன. அதன்படி ரோட்டில் கால்நடைகள் திரியவிடாமல் அதற்கான பட்டிகள் மற்றும் கொட்டகை களில் அடைத்து வைத்து பராமரிக்க வேண்டும். கேட்பாரற்று திரியும் மாடுகள் மெயின் ரோட்டின் போக்குவரத்திற்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

    பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப நிலத்தின் மதிப்பு கூடியதால் கால் நடைகளுக்கு என்று ஒதுக்க ப்பட்டிருந்த இடங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறி விட்டன. அரசு சார்பில் இலவச கறவை மாடுகள், ஆடுகள் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானவர்கள் இவற்றை இடப்பற்றாக்குறை மற்றும் தீவன செலவுகளை கணக்கிட்டு வெளியே மேய விடுகின்றனர்.

    பால் கறக்கும் நேரத்தில் மட்டும் பிடித்து வருகின்றனர்.அதன்பின் ரோட்டில் விட்டு விடுகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை, மாலை, இரவில் ரோட்டில் நடமாடும் மாடுகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

    மாடுகள் ரோட்டினை கடக்கும் போது வாகன ஓட்டிகள் அடிக்கும் 'ஹாரன்' சத்தத்தில் மிரண்டு ஓடுகின்றன. இதனால் டூ வீலர் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள்விபத்துக்குள்ளாகின்றனர்.

    ஒரு சில மாடுகள் அப்படியே நின்று போக்குவரத்திற்கு இடை யூறினை ஏற்படுத்துகிறது. தேசிய நெடுஞ்சாலையில் சில மாடுகள் நிரந்தர தங்கும் இடமாக மாற்றியுள்ளது. இவை திடீரென குறுக்கே கடந்து உயிர்பலியை ஏற்ப டுத்துவதுடன் அவற்றிற்கும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

    இதுகுறித்து கீழக்கரை நகராட்சி 20-வது வார்டு கவுன்சிலர் சேக் உசேன் கூறியதாவது:-

    சட்டவிதிகளை பின்பற்றாமல் கால்நடைகளை ரோடுகளில் விடும் சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து கீழக்கரை நகராட்சி தூய்மை பணியா ளர்கள் சாலையில் திரிந்த மாடுகளை பிடித்து அடைத்தனர். கேட்டின் பூட்டை உடை த்து அடைக்கப்பட்ட மாடுகளை 2 முறை விடுவித்துள்ளனர்.

    இது குறித்து நகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மவுனம் சாதிப்பதால் அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க கோரி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொன்மலையில் டாஸ்மாக் பூட்டு உடைக்கப்பட்டது
    • லாக்கரை திறக்க முடியாததால் ரூ.2¾ லட்சம் தப்பியது

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள ராசாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 56). இவர் திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக் கடையில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார். இதன் விற்பனையாளர்கள் வழக்கம்போல் இரவு 10 மணிக்கு வியாபாரத்தை முடித்துக் கொண்டனர்.பின்னர் சூப்பர்வைசர் செல்வராஜ் விற்பனைத் தொகை ரூ.2 லட்சத்தி 77 ஆயிரத்து 80 பணத்தை எண்ணி கடை லாக்கரில் வைத்து பூட்டினார்.

    அதன் பின்னர் கடை ஷட்டரை பூட்டிக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். மறுநாள் காலை 7 மணி அளவில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு டாஸ்மாக் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தனர்.இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பொன்மலை போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் வைத்திருந்த பணம் அப்படியே இருப்பது கண்டு ஆச்சரியப்பட்டனர்.

    டாஸ்மாக் ஷட்டர் பூட்டை உடைத்த கொள்ளையர்களால் லாக்கர் பூட்டை உடைக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் பொன்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையில் முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.


    • முதல் தளத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
    • ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதிய பஸ்நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான ஒரு வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. நேற்று இரவு அங்குள்ள வியாபாரிகள் வழக்கம்போல் கடைகளை அடைத்து வீடுகளுக்கு சென்றனர்.

    இந்நிலையில் இன்று காலை வணிக வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள ஒரு ஸ்டூடியோவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. தொடர்ந்து அருகே உள்ள மேலும் 7 கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் வடபாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு போலீசார் உடனடியாக விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கடைகளில் இருந்த பணம் மற்றும் விலை உயர்ந்த காமிராக்கள் என ரூ.6 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

    நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டது.

    இந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை கைப்பற்றி அதில் பதிவான உருவங்களை கொண்டு, கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×