search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விதைச்சான்று"

    • நல்ல தரமான பயிறு வகைகளை விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்.
    • சுற்று வட்டார பயிறு வகை சாகுபடி விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.

    வெள்ளகோவில் : 

    முத்தூர் அருகே வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மங்களப்பட்டி மற்றும் நத்தக்கடையூர் அருகே உள்ள பழையகோட்டை ஊராட்சிக்குட்பட்ட குட்டப்பாளையம் கிராம பகுதிகளில் விவசாயிகள் பாசிப்பயறு, உளுந்து பயிறு, ஆதார நிலை 2 உள்ள பயறு வகைகளை சாகுபடி செய்து விதைப்பண்ணைகளாக அமைத்து உள்ளனர்.

    முத்தூர் பகுதிகளான மங்களப்பட்டி, வேலம்பாளையம், ஊடையம் மற்றும் நத்தக்காடையூர் பகுதிகளான குட்டப்பாளையம் ஆகிய கிராம பகுதிகளில் விவசாயிகளின் பயிறு வகை விதைப்பண்ணைகளுக்கு மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குனர் பி.அ.மாரிமுத்து நேரில் வந்து ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் விவசாயிகளிடம் கூறியதாவது:-

    பயிறு வகை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் விதைப்பண்ணைகள், வயல் தர நிலைகளில் தேர்ச்சி பெற்ற நல்ல தரமான பயிறு வகைகளை விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். நன்கு தேர்ச்சி பெற்ற பயிறுவகை விதை குவியல்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, அரசு அங்கீகாரம் வழங்கி விதை சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்படும். விதைசுத்திகரிப்பு நிலையங்களில் விதைச்சான்று அலுவலர்களால் பயிறு வகை மாதிரி சேகரிக்கப்பட்டு, நல்ல தரமான விதை குவியல்களுக்கு சான்று அட்டை பொருத்தப்பட்டு தரமான விதை குவியல்களாக வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது காங்கயம் வட்ட விதை சான்று அலுவலர் ஸ்ரீ காயத்ரி, உதவி நிலை அலுவலர் கிருபானந்தன் மற்றும் சுற்று வட்டார பயிறு வகை சாகுபடி விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×