என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விதைச்சான்று இயக்குநர் ஆய்வு
- விதைச்சான்று இயக்குநர் ஆய்வு செய்தார்.
- விதை ஆய்வாளர் ஜெயந்திமாலா, விதை சான்று அலுவலர் வீரபாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்ட விதைச்சான்று இயக்குநர் வளர்மதி பரமக்குடி பகுதியில் உள்ள உரம் மற்றும் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தார். பஸ் நிலையம் அருகே உள்ள கே.எஸ்.ஆர். உரம் மற்றும் விதை விற்பனை நிலையத்தில் ஆய்வின் போது, ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?, விதையின் தரம் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் முறையாக உள்ளதா? என்பதை சரி பார்த்தார். அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உரம் மற்றும் விதைகளை விற்பனை செய்ய வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, உச்சிப்புளி வட்டாரத்தில் இயங்கி வரும் அரசு தென்னங்கன்று பண்ணையை பார்வையிட்டு விற்பனைக்கு தயாராக உள்ள தென்னங்கன்றுகளின் தரத்தை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது விதை ஆய்வு துணை இயக்குநர் துரைகண்ணம்மாள், விதைச்சான்று உதவி இயக்குனர்கள் சிவகாமி, துரைசாமி, திருப்புல்லாணி வட்டார உதவி இயக்குநர் அமர்ரால், விதை ஆய்வாளர் ஜெயந்திமாலா, விதை சான்று அலுவலர் வீரபாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.