search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டவுன்"

    • தமிழகம் முழுவதும் பயன்படுத்த 1000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்க வும் ரூ.500 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.
    • இதன் மூலம் தமிழகம் முழுவதும் 8 கோட்டங்க ளிலும் சேதம் அடைந்த பஸ்கள் புனரமைக்கப்படு கிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் பயன்படுத்த 1000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்க வும் ரூ.500 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 8 கோட்டங்க ளிலும் சேதம் அடைந்த பஸ்கள் புனரமைக்கப்படு கிறது.

    வெளிர் மஞ்சள் நிறம்

    அதன் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு தற்போது புதிதாக வர உள்ள இந்த பஸ்கள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட உள்ளன. விரைவில் இயக்கத்திற்கு வர உள்ள இந்த பஸ்களுக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப் பட்டு வருகிறது.

    இந்த பஸ்கள் சென்ைன, பெங்களூர், கரூரில் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி எட்டு கோட்டங்க ளிலும் 500 பஸ்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதில் சேலம் சரகத்தில் மட்டும் 100 பழைய டவுன் பஸ்கள் புனரமைக்கப்படு கிறது.

    நவீன முறையில் வடிவமைப்பு

    இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதி காரிகள் கூறுகையில், சேலம் கோட்டத்தில் 1047 பஸ்களும், தருமபுரி கோட்டத்தில் 853 பஸ்கள் என மொத்தம் 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இதில் 14 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள். தினசரி சாதாரண கட்டண டவுன் பஸ்களில் 6 லட்சம் மகளிர் பயணம் செய்கிறார்கள்.

    பழைய பஸ்கள் தற்போ துள்ள பயணிகள் ரச ணைக்கு ஏற்ப நவீன முறை யில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. புனரமைக்கப் பட்ட பஸ்களுக்கு கீழ் பகுதியில் வெளிர் கிரே கலரிலும், மேல் பகுதியில் நீல நிறத்திலும் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

    பைபர் சீட்

    தற்போது பயன்பாட்டில் உள்ள பஸ்களில் இருக்கை கள் இரும்பு ரெக்சினால் உள்ளது . புனரமைக்கப்பட்ட டவுன் பஸ்களில் பைபர் சீட் அைமக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, கும்பகோ ணம் , திருநெல்வேலி கோட்ட டவுன் பஸ்களில் பைபர் இருக்கைகள் உள்ளன.

    சேலத்தில் பைபர் சீட் அமைப்பது இதுவே முதல் முறை. இந்த பஸ்கள் விரை வில் மக்கள் பயன்பட்டுக்கு வரும் வகையில் அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • டவுன் நயினார்குளம் பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் இல்லை.
    • இருக்கைகள் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் நயினார்குளம் சாலையில் உள்ள சந்தி விநாயகர் கோவில் அருகே பஸ் நிறுத்தம் ஒன்று உள்ளது.

    இந்த பஸ் நிறுத்தத்தின் மூலமாக சந்திப்பு, புதிய பஸ் நிலையம், சமாதானபுரம், நீதிமன்றம் உள்ளிட்ட இடங்களுக்கு டவுனில் இருந்து செல்லும் ஏராளமானோர் பயன் அடைந்து வருகின்றனர்.

    மேலும் டவுன் ரதவீதிகளை சுற்றிலும் அமைந்துள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மாணவ-மாணவிகள் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து தான் புறப்பட்டு பாளை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லவேண்டும்.

    நயினார்குளம் மொத்த காய்கறி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வாங்கிச் சென்று மாநகர பகுதியில் வீடு, வீடாக விற்பனை செய்யும் வயதான பெண்களும் இந்த பஸ் நிறுத்தத்தையே பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இந்த பஸ் நிலையத்தில் தற்போது இருக்கைகள் இல்லை. இதனால் பயணம் செய்ய வரும் பயணிகள் அமர்வதற்கு வழியில்லாமல் பஸ் வரும் வரை நின்று கொண்டே இருக்கின்றனர்.

    இதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல மக்கள் நலசங்கத்தின் தலைவர் அயூப் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

    உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த நிலையில் இன்று வரை பஸ் நிறுத்தத்தில் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. இதனையடுத்து இன்று அவர் மீண்டும் மனு அளித்துள்ளார்.

    உள்ளாட்சி பிரதிநிதிகள் பொறுப்பேற்றுவிட்ட நிலையில் இனியாவது அங்கு இருக்கை அமைக்க வேண்டும் என்பது தான் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×