என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 குழந்தைகள்"

    • சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலை யத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், தர்ஷித் (5) என்ற மகனும், ஷிவானி (1) என்ற மகளும் உள்ளனர்.
    • அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கூட்டத்திற்கு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அழைத்துச் சென்றார்.

    சேலம்:

    சேலம் உடையாபட்டி சின்ன ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகன் பூபாலன் (வயது 35). இவர் சேலம் மாவட்டம் காரிப்பட்டி போலீஸ் நிலை யத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு நித்யா (30) என்ற மனைவியும், தர்ஷித் (5) என்ற மகனும், ஷிவானி (1) என்ற மகளும் உள்ளனர்.

    தர்ஷித் அம்மாப்பேட்டை அருகே உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி படித்து வருகிறார். நேற்று மாலை 4 மணி அளவில் பள்ளியில் நடைபெற்ற பெற்றோர் கூட்டத்திற்கு தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் அழைத்துச் சென்றார்.

    மகனின் போட்டோவை எடுக்காமல் வந்து விட்ட தால், மீண்டும் வீட்டுக்கு சென்ற பூபாலன் போட்டோவை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வந்தார். அப்போது, பள்ளியில் விட்டுச் சென்ற மனைவி நித்யா, குழந்தைகள் தர்ஷித், ஷிவானி ஆகியோரை காணவில்லை. இதையடுத்து அவர் மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பூபாலன், இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • மதுரை அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.
    • இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மதுரை

    மதுரை பைக்காரா, மின்வாரிய பிரதான சாலை துரைப்பா ண்டி கா ம்பவு ண்டை சேர்ந்தவர் லாவண்யா (வயது23). இவ ரது கணவர் ஆறுமுகம். இவர்களுக்கு ஆதி(4), அர்ஜூன்(3) என்ற இரு மகன்கள் உள்ளனர்.

    ஆறுமுகம் இறந்த பிறகு லாவண்யா, 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடத்தொழிலாளி சண்முகபாண்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் குழந்தைகளுடன் பைக்காராவில் வசித்து வந்தனர். கடந்த 24-ந் தேதி லாவண்யா தனது இரு மகன்களுடன் மாயமாகிவிட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை. இதுகுறித்து கணவர் சண்முகபாண்டி கொடுத்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • புஞ்சை புளியம்பட்டி அருகே 2 குழந்தைகளுடன் மனைவி மாயமானார் இதையடுத்து கணவர் போலீசில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு:

    புளியம்பட்டி அடுத்துள்ள பனையம்பள்ளி, கே.வி.கே. நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (34). இவர் ஆயில் மில்லில் பணியாற்றி வருகின்றார்.

    இவரது மனைவி தனலட்சுமி (28). இவர்களுக்கு திவாகர் (11), தியாகு(8) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்வத்தன்று வழக்கம் போல ராஜேந்திரன் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த போது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேந்திரன் பல்வேறு இடங்களில் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்காததால் புளியம்பட்டி போலீசில் இது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல அந்தியூர் அடுத்துள்ள பர்கூர் மலைக்கிராமம் ஊசிமலையை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி கவிதா(35).

    இவர்களுக்கு 1 மகன், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்த கவிதா சம்வத்தன்று வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இது குறித்து கணவர் முருகன் பர்கூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்னர்.

    ×