என் மலர்
நீங்கள் தேடியது "குழந்தை சாவு"
- குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.
- சம்பவ இடத்திலேயே குழந்தை அனிகா உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி,
ஓசூர் சிப்காட் பகுதியை சேர்ந்தவர் ராதே.இவரது மனைவி அருணா. இவர்களது 3 வயது குழந்தை அனிகா . ராதே தனது மனைவி, குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அட்டக்குறிச்சி என்ற இடத்தருகே அவர்கள் சென்றபோது அவ்வழியாக சென்ற ஒரு லாரி சிக்னல் போடாமல் திடீரென திரும்பியுள்ளது.
இதில் நிலைதடுமாறி ராதே குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை அனிகா உயிரிழந்தது.
ராத்தேவும் அவரது மனைவி அனிதாவும் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- குழந்தையை 8 நாட்களாக தாயிடம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. .தவறான சிகிச்சை காரணமாகவே குழந்தை இறந்துள்ளது என்று புகார் கூறினர்.குழந்தையை 8 நாட்களாக தாயிடம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.
- தவறான சிகிச்சை காரணமாகவே குழந்தை இறந்துள்ளது என்று புகார் கூறினர்.
தருமபுரி,
தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எதிரில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. இங்கு பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.
குறை பிரசவத்தில் பிறந்த அந்த குழந்தையை 8 நாட்களாக தாயிடம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் அந்த சிசு இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் இதற்கிடையே மருத்துவ கட்டணமாக ரூ.5 லட்சத்தை கறாராக வசூலித்து விட்டனராம். இந்நிலையில் அந்த பெண்ணின் உறவினர்கள் நேற்று இரவு அந்த மருத்துவமனை முன்பு திரண்டனர்.தவறான சிகிச்சை காரணமாகவே குழந்தை இறந்துள்ளது என்று அவர்கள் புகார் கூறினர்.
ஆனால் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் வேண்டுமானால் பிரேதபரிசோதனை செய்துகொள்ளலாம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.இந்நிலையில் இது குறித்து தகவல் அறிந்த தருமபுரி நகர போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தி குழந்தையின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
- குழந்தை தவறி கீழே விழுந்ததால் டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ரொட்டோ வேட்டரில் சிக்கி குழந்தை அடிபட்டது.
- மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் எடுத்துச் சென்றனர்.
விழுப்புரம்:
செஞ்சி அருகே உள்ள வேலந்தாங்கல் மதுரா நார்சாம்பட்டு கிராமத்எதை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியராஜ். இவர் நேற்று தனது உறவினர் டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது தனது 3 வயது குழந்தையை ஐஸ்வர்யா டிராக்டரின் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு டிராக்டரை ஓட்டி நிலத்தை உழுது கொண்டு இருந்தார். அப்போது திடீரென குழந்தை தவறி கீழே விழுந்ததால் டிராக்டரில் இணைக்கப்பட்டிருந்த ரொட்டோ வேட்டரில் சிக்கி குழந்தை அடிபட்டது.
காயமடைந்த குழந்தையை சி கிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கும் பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கும் எடுத்துச் சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக இறந்துபோனது. இச்சம்பவம் குறித்து நல்லாண் பிள்ளை பெற்றால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் கொடுக்கும் போது மூச்சுதிணறல் ஏற்பட்டது.
- போகும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பாகலூர் அருகே முதுகனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு 2 வயதில் மனோஜ்குமார் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று குழந்தைக்கு பாட்டில் மூலம் பால் கொடுக்கும் போது மூச்சுதிணறல் ஏற்பட்டது. இதனால் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜபாண்டி- சுபாஷினி இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
- பால்குடித்து தூங்கிய குழந்தைக்கு திடீரென மூச்சுத்தினறல் எடுத்தது,
கடலூர்:
பண்ருட்டி அருகே வல்லம் கிராம த்தைச் சேர்ந்தவர் ராஜ பாண்டியன். இவரது மனைவி சுபாஷினி இவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று வழக்கம்போல் குழந்தைக்கு சுபாஷினி பால் கொடுத்துவிட்டு அருகில் தூங்க வைத்திருந்தார். அப்போது குழந்தைக்கு திடீர் என மூச்சு திணறல் ஏற்பட்டது.
உடனே அந்த குழந்ைதயை நெய்வேலி மத்திய பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை க்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தன இது குறித்து முத்தா ண்டிகுப்பம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் வெங்க டேசன் வழக்குபதிந்து விசாரணை நடத்தினார்.
- குழந்தைக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்தது.
- அந்த குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற் பட்டது.
அந்தியூர்:
அந்தியூர் அருகே உள்ள வெள்ளி திருப்பூர் வெள்ள கரட்டூர் பகுதியை சேர்ந்த வர் பாலசுப்பிரமணியம் (வயது 29). கட்டிட தொழி லாளி. இவரது மனைவி சித்ரா (25).
இவர்களுக்கு கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு லேசான காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் வீட்டிலேயே வைத்து மருத்துவம் பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் அந்த குழந்தைக்கு நேற்று மூச்சு விடுவதில் சிரமம் ஏற் பட்டது. இதையடுத்து உடன டியாக குழந்தையை சிகி ச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தை யை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் மற்றும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
- கடந்த 6நாட்களான முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது.
- குழந்தைக்கு பாலுட்டிய போது மூச்சுதனறி இறந்துள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள சிந்தகம்பள்ளி பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ்(வயது31) இவரது மனைவிக்கு கடந்த 6நாட்களான முன்னர் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் குழந்தைக்கு பாலுட்டி உள்ளார். அப்போது குழந்தைக்கு மூச்சுதனறி இற்துள்ளது. பின்னர் இது குறித்து ஜெய்பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்ககு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்
- மகன் மித்ரன்(3). நேற்று முன்தினம் இவரது வீட்டின் தோட்டத்தில் மித்ரன் விளையாடிக் கொண்டிருந்தான்.
- அப்போது பாம்பு கடித்தது.
கடலூர்:
சிதம்பரம் அடுத்த துணிசரமேடு பகுதியை சேர்ந்தவர் திருஞானம் (வயது 37) இவரது மகன் மித்ரன்(3). நேற்று முன்தினம் இவரது வீட்டின் தோட்டத்தில் மித்ரன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பாம்பு கடித்தது. உடனடியாக சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதனை செய்தபோது அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சாக்ரடீஸ் என்பவர் தர்ஷித்தை தூக்கி சென்றார்.
- கால்வாயை தாண்டும் போது எதிர்பாராத விதமாக சாக்கடைக்குள் இருவரும் தவறி விழுந்தனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள செல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கு 2 வயதில் தர்ஷித் என்கிற 2 வயது குழந்தை இருந்தன.
சம்பவத்தன்று தெருவில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கும் போது இவரது பக்கத்து வீட்டில் வசித்து வரும் சாக்ரடீஸ் என்பவர் தர்ஷித்தை தூக்கி சென்றார்.
அப்போது கால்வாயை தாண்டும் போது எதிர்பாராத விதமாக சாக்கடைக்குள் இருவரும் தவறி விழுந்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணு தர்ஷித்தை சிகிச்சைக்காக அரூர் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து அரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சம்பவத்தன்று வீட்டில் திலக் விளையாடிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
- கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.
தருமபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள ஓமேத பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவருக்கு 3 வயதில் திலக் என்கிற குழந்தை இருந்தன.
சம்பவத்தன்று வீட்டில் திலக் விளையாடிக் கொண்டிருக்கும் போது தண்ணீர் தொட்டியில் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
உடனே பெற்றோர்கள் குழந்தையை மீட்டு கிருஷ்ணகிரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது.
இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- குழந்தைகளை பாட்டியிடம் விட்டு விட்டு தாய், தந்தை இருவரும் கட்டிட வேலைக்காக பெங்களூருக்கு சென்று வேலை பார்த்து வந்தனர்.
- விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை ரஞ்சித் வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தது.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மனைவி சாலா. இவர்களுக்கு திருமணமாகி 10 வருடம் ஆகிறது.
இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ரஞ்சித் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
குழந்தைகளை பாட்டியிடம் விட்டு விட்டு தாய், தந்தை இருவரும் கட்டிட வேலைக்காக பெங்களூருக்கு சென்று வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை ரஞ்சித் வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தது.
இது குறித்து தகவலறிந்த பாலக்கோடு போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீர் ரித்திகா மீது கொட்டியது.
- இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
பு.புளியம்பட்டி:
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அடுத்து புங்கம்பள்ளி கைகாலன் குட்டை பகுதி யை சேர்ந்தவர் செல்ல ப்பாண்டி (வயது 27). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி சத்யா (24). இவர்களுடைய மகள் ரித்திகா (3).
இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி சத்யா வீட்டுக்கு வெளியே வெந்நீர் போட்டு கொண்டு இருந்தார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ரித்திகா அங்கு யாரும் இல்லாத போது பாத்திரத்தில் இருந்து வெந்நீர் எடுக்க முயன்றார்.
அப்போது ரித்திகா திடீரென பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீர் அவர் மீது கொட்டியது. இதனால் ரித்திகா அலறி துடித்தார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து ரித்திகாவை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சை பெற்று வந்த ரித்திகா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.