என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Inputs"

    • தமிழக அரசு வேளாண்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.
    • விவசாயிகள் அரசின் திட்டங்களை பயன்படுத்தி பயனடைய வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வ ரன்கோயிலில் வேளாண் பொறியியல் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடிய வேளாண் பவர் டிரில்லர் எனும் கைடிராக்டர் வழங்கும் விழா நடந்தது.

    வேளாண் இயந்திரமய மாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் ஆர்.ராஜாராம் தலைமை வகித்தார்.

    திமுக ஒன்றிய செயலாளர் பிரபாக ரன்,பேரூர் கழக செயலாளர் அன்புசெ ழியன்,மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், திமுக பொறுப்பாளர்கள் தேவேந்திரன்,முருகன்,முத்துக்குமரன்,பழனிவேல் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி சட்டபேரவை உறுப்பி னர் எம்.பன்னீர்செல்வம் பங்கேற்று 30 பயனாளிகளுக்கு பவர் டிரில்லரை வழங்கி, பேசும்போது தமிழக அரசு வேளாண்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது.

    வேளாண்மைக்கு தனி பட்ஜெட் அறிவித்து செயல்படுத்தி வருகிறது விவசாயிகள் அரசின் திட்டங்களை பயன்படுத்திக் பயனடைய வேண்டும் என்றார்.

    • வேளாண் இடு பொருட்களை விற்பனை செய்யும்ஆன்லைன் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
    • உழவர்களின் வருமானமும் உயர வழிவகை செய்யும்.

    ஈரோடு:

    வேளாண்மையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. ஆனால் தற்பொழுது வேளாண்மை பல சவால்களை சந்தித்து வருகிறது.

    குறிப்பாக உழவர்களுக்கு தகுந்த நேரத்தில் பண்ணைக்கு வேண்டிய வேளாண் இடு பொருட்களை உழவர்க ளின் வீடுகளுக்கே விநியோகம் செய்வது மிக பெரிய சவாலாக உள்ளது. உழ வர்கள் சிலநேரம் தரமான இடுபொருட்களை பெற அதிக நேரம் மற்றும் செலவு செய்யவேண்டி உள்ளது.

    இதனை சரி செய்ய தமிழ்நாடு அரசின் ஒரு தொடர் முயற்சியாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை க்கழகம் உற்பத்தி செய்யும் விதைகள் மற்றும் இடுபொருட்கள் உழ வர்களின் வீடுகளுக்கே நேரடியாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் வகையில் வேளாண்பல் கலைக்கழகம் TNAU AgriCart என்ற வேளாண் இடு பொருட்களை விற்பனை செய்யும்ஆன்லைன் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

    மேலும் உழவர்கள் ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்தும் வசதியும் இதில் உள்ளது.வேளாண் பருவங்கள் தொடங்கும் முன் வேண்டிய பயிர் ரகங்களின் விதைகள் மற்றும் வேளாண்இடு பொருட்கள் குறிப்பாக உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள், பயிர் பூஸ்டர்கள் போன்றவைகள்ஆன்லைன் மூலம் வாங்கி பருவத்தே பயிர் செய்து உழவர்கள் பயனடையலாம்.

    அமேசான் மற்றும் பிளி ப்கார்ட் ஆன்லைன் இணைய தளத்தில் பொது மக்கள் எவ்வாறு அனைத்து பொரு ட்களையும் ஆன்லைன் மூலம் வாங்கு கிறார்களோ அதேபோல் இந்த தளத்தில் உழவர்கள் ஆன்லைன் மூலம் இடுபொருட்கள் மற்றும் விதைகளை வாங்க முடியும்.

    வேளாண்மைப் பல்கலைக் கழகம் தற்பொழுது வேளா ண்மைத் துறையுடன் இணைந்து உழவர்களி டையே நல்ல தொடர்பை ஏற்படுத்தி வருகிறது.

    இதனால் உழவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உடனடியாக வயலில் கடைபிடிக்க வழிவகை செய்து வேளாண் உற்பத்தி யை பெருக்கி உழவர்களின் வருமானமும் உயர வழிவகை செய்யும்.

    இந்த இணையதளத்தை அனைத்து உழவர்களும் பயன்படுத்தி தமிழ்நாட்டின் வேளாண் பொருளாதாரத்தை மேலும் உயர்த்திட வேண்டும்

    இந்த தகவலை வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    சேலத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், கடனுதவியை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
    சேலம்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த விழாவில் தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில்  “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை” தொடங்கி வைத்தார். 

    சேலம் மாவட்டத்தில் 86 கிராம பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது. இந்த ஊராட்சிகளில் முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி காணொலி மூலமாக ஓளிபரப்பப்பட்டது.

    அயோத்தியாபட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டார்.விழாவில் வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை - மலைப் பயிர்கள் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.9,770  மதிப்பிலான மானியத்துடன் கூடிய இடுபொருட்களும், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 3 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும்  கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வம், வேளாண் இணை இயக்குநர் கணேசன், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழு  தலைவர்  புவனேஸ்வரி செந்தில்குமார் மற்றும் விவசாயிகள்  கலந்துகொண்டனர்.
    ×