என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 316085
நீங்கள் தேடியது "சிறப்பு"
நாமக்கல் மாவட்டத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் 1 மாதம் நடக்கிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி-110-ன் கீழ் சட்டமன்றத்தில் தமிழ்நாட்டில் உள்ள 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சியினை மேம்படுத்த அரசு வழிகாட்டுதலின்படி, மார்ச் மாதம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டம் மூலமாக தமிழகத்திலுள்ள சுமார் 37 இலட்சம் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ‘சிறப்பு வளர்ச்சிக் கண்காணிப்பு இயக்கம்” நடத்தப்பட்டது.
இதில், நாமக்கல் மாவட்டத்தில் 16201 குழந்தைகள் வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவுத் தன்மை ஆகிய குறைபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சரின் அறிவிப்பினை முனைந்து செயல்படுத்த முதற்கட்டமாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித்திட்டப்பணிகள் துறை மற்றும் சுகாதாரத்துறையுடன் இணைந்து ஒரு மாத காலத்திற்கு குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற–வுள்ளது.
எனவே, பொதுமக்கள் அருகில் உள்ள குழந்தைகள் மையத்தை (அங்கன்வாடி மையத்தை) தொடர்பு கொண்டு முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம் குறித்த விபரத்தினை அறிந்துகொண்டு, வருங்கால சந்ததியினர்களை வளமானவர் களாக மாற்ற, ஊட்டச்சத்து குறைபாடில்லா தமிழகத்தை உருவாக்கிட பெற்றோர்களும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
இன்று முதல் 1 மாத காலத்திற்கு நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமிற்கு தங்கள் குழந்தைகளுடன் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படு–கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
பரமத்திவேலூர்:
வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் கோப்பணம்பாளையம் பரமேஸ்வர் ஆலயத்தில் உள்ள பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பாலமுருகன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
அதேபோல் நன்செய் இடையாறு காவிரி ஆற்றங்கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன், கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி, பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல்வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவி லில் எழுந்தருளியுள்ள ஆறுமுகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர், அருணகிரிமலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், வேலூர் சக்தி நகர் முருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகன், அய்யம்பாளையத்தில் உள்ள முருகன் கோவில், ஆனங்கூர் மாரியம்மன் கோவிலில் உள்ள முருகன், பாலப்பட்டி முருகன், மோகனூர் பாலசுப்ரமணிய சாமி கோவில் மற்றும் பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சேலம், நாமக்கல்லில் ஒரே நாளில் 5 சிவாலயங்களில் சிறப்பு தரிசனம் செய்த பக்தர்கள்.
ஆட்டையாம்பட்டி:
ஏற்காடு மலையில் பிறக்கும் புண்ணிய நதி திருமணிமுத்தாறு. இது சேர்வராயன் மலைத்தொடர் மஞ்சவாடி கணவாய் அருகே உற்பத்தியாகி சேலம் மாநகர், நாமக்கல் மாவட்டத்தின் ஊடாக செல்லும் ஓர் ஆறாகும். இந்த ஆறு சேலம் நகரம் வழியாக உத்தமசோழபுரம், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி வழியாக 75 மைல்கள் ஓடி பரமத்தி வேலூர் அருகே காவிரியில் கலக்கிறது.
இந்த நதிக்கு மணிமுத்தா நதி, வீர மணிமுத்தாறு என்ற பல்வேறு பெயர்கள் உண்டு. ஒருகாலத்தில் இந்த ஆற்றில் முத்துச் சிப்பிகள் இருந்தன; முத்து எடுக்கப்பட்டது என்பது மக்களின் நம்பிக்கை.
பிரசித்திப் பெற்ற செவ் வாய்ப்பேட்டை மாரியம்மன் மூக்கில் அணிந்திருக்கும் மூக்குத்தியின் முத்து திருமணிமுத்தாற்றில் இருந்து எடுக்கப்பட்டது என்பார்கள். அதன் நதிக்கரை எங்கும் ஏராளமான நந்தவனங்களும் அன்னதான சத்திரங்களும் இருந்தன. இன்றும் அணைமேடு அருகில் ஒரு நந்தவனம் இருக்கிறது. சேலம் ஸ்தல புராணத்தில் ‘சேலம் மணிமுத்தா நதியின் ஒரு திவலை நீர் உண்டால் உடல் பாதகங்கள் அகலும் பரம ஞானம் உண்டாகும்’ என்ற பாடல் இதன் பெருமையை உணர்த்துகிறது.
திருமணிமுத்தாறு ஆற்றங்கரையில் சுகவனேஸ்வரர் (சேலம்), கரபுரநாதர் (உத்தமசோழபுரம்), வீரட்டீஸ்வரர் (பில்லூர்), பீமேஸ்வரர் (மாவுரெட்டி), திருவேணீஸ்வரர் (நஞ்சை இடையாறு) ஆகிய 5 திருத்தலங்களும் பஞ்ச பாண்டவர்களால் வணங்கப்பட்டவை. இந்த 5 கோயில்களையும் ஒரே நாளில் வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி முக்தி பெறுவார்கள் என்பது ஐதீகம். பஞ்ச காலத்தில் பீமேஸ்வரரை வழிபட்டால் நல்ல மழை பொழியும் என்பதும் நம்பிக்கை.
மன்னராட்சி காலத்தில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் திருமணிமுத்தாற்றின் கரையோரம் இருக்கும் 5 சிவன் கோவில்களையும் மன்னர்கள் ஒரே நாளில் தரிசித்த வரலாறும் உண்டு. அந்த வழக்கத்தில் சேலம் மாவட்ட மக்கள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் இந்த 5 சிவாலயங்களையும் ஒரே நேரத்தில் தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதன்படி அமாவாசையை முன்னிட்டு நேற்று சேலம் பக்தர்கள் ஒரே நாளில் திருமணிமுத்தாறு கரையோரப் பகுதியில் உள்ள 5 சிவாலயங்களில் சாமி தரிசனம் செய்தனர். முதல் கோயிலாக சேலம் சுகவனேஸ்வரர் ஆலயம், இரண்டாவதாக உத்தமசோழபுரம் கரபுரநாதர் சுவாமி கோயில், மூன்றாவதாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பில்லூர் வீரட்டேஸ்வரர் ஆலயம், நான்காவதாக மாவுரெட்டி பீமேஸ்வரர் ஆலயம், ஐந்தாவதாக நன்செய் இடையார் திருவேலீ ஈஸ்வரர் ஆலயம் ஆகிய 5 சிவாலயங்களில் ஒரே நாளில் 60 -க்கும் மேற்பட்ட பக்தர்கள் அபிஷேக ஆராதனை பூஜையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அமாவாசை சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
ஆட்டையாம்பட்டி:
சேலம் அருகே கொண்டலாம்பட்டி அடுத்துள்ள உத்தம சோழபுரம் கரபுரநாதர் கோவிலில் அமாவாசை தினத்தை ஒட்டி சந்திரசேகரர் சவுந்தரவல்லி சாமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
முன்னதாக கரபுரநாதர் சாமிக்கும் பெரியநாயகி அம்மையாருக்கும் அபிஷேக ஆராதனை பூஜையும் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
இன்று சோம வாரம் திங்கட்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
சேலத்தை அடுத்த அயோத்தியாபட்டிணம் அருகே மஜ்ரா ஜலகண்டாபுரத்தில் பத்ரகாளியம்மன் கோவில் அக்னி குண்டம் திருவிழா நடைபெற்றது.
குமாரபாளையம் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
குமாரபாளையம்:
வைகாசி அமாவாசை நாளையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.
இதே போல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
குமாரபாளையத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
குமாரபாளையம்:
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலமாக ஆய்வு செய்ததில், நாமக்கல் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 201 குழந்தைகள் வயதிற்கேற்ற எடையின்மை, உயரமின்மை மற்றும் மெலிவு தன்மை ஆகிய குறைபாடுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த மே 24ந் தேதி முதல் ஒரு மாதத்திற்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, இது போன்ற குழந்தைகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்க தமிழக அரசு உத்திரவிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் கண்ணகி நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
குமாரபாளையத்தில் வைகாசி மாத வெள்ளிக்கிழமையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
வைகாசி வெள்ளிக்கிழமையையொட்டி குமாரபாளையம் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது.
இதேபோல் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில், சவுண்டம்மன் கோவில்கள், அங்காளம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில்கள், திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை கோவில், அக்ரஹாரம் காசி விஸ்வேஸ்வரர் கோவில், பட்டத்தரசியம்மன் கோவில், கள்ளிப்பாளையம் மாரியம்மன், காளியம்மன் கோவில், பண்ணாரி மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X