என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில"

    • திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால் விவசாய துறை தடுமாறுகிறது.
    • வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அதிக சம்பளம் எதிர்பார்க்கின்றனர்.

    திருப்பூர் :

    விவசாய குடும்பத்தை சேர்ந்த பல இளைஞர்கள் விவசாய தொழிலில் ஈடுபட விரும்புவதில்லை. அதேபோல விவசாய தொழிலாளர்களின் வாரிசுகளும் விவசாய பணிக்கு செல்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. பெரும்பாலும் பனியன் நிறுவனங்களிலும், ஐ.டி., நிறுவனங்களிலும் பணியாற்றுகின்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர் பற்றாக்குறை உள்ளதால் விவசாய துறை தடுமாறுகிறது. உள்ளூர் தொழிலாளர்கள் கடினமான வேலைகளை செய்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர். வேலைக்கு வரும் தொழிலாளர்களும் அதிக சம்பளம் எதிர்பார்க்கின்றனர். கணிசமான விவசாயிகள் தங்கள் தோட்டங்களை குத்தகைக்கு விட்டு விட்டு வேறு தொழிலுக்கு செல்வது அதிகரித்துள்ளது.

    சிறிய பண்ணைகளில் குடும்ப உறுப்பினர்களே வேலைகளை பகிர்ந்து கொள்கின்றனர். பெரிய பண்ணைகளில் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதை சமாளிக்க வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    • அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுதன் சேகர்தக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மொடக்குறிச்சி:

    ஒடிசா மாநிலம் மொசிந்தா பகுதியை சேர்ந்தவர் சுதன் சேகர்தக்கு (33). இவர் மொடக்குறிச்சி அருகே உள்ள ஆலூத்து பாளையம் பகுதியில் தங்கி, அங்கு இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான மில்லில் கூலி வேலை செய்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை மொடக்குறிச்சியில் இருந்து பூந்துறை செல்லும் வழியில் ஆலுத்து பாளையம் பிரிவு அருகே சுதன் சேகர்தக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அதிவேகமாக வந்து மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் சுதன் சேகர்தக்குவை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    எனினும் சிகிச்சை பலனின்றி சுதன் சேகர்தக்கு இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சோனுபரீத் (20)என்பவரும் தங்கி அதை ஆலையில் வேலை பார்த்து வந்தார்.
    • தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    ஈரோடு, 

    சத்தீஸ்கர் மாநிலம் ஜனிஹீர் பகுதியை சேர்ந்தவர் டிஜோராம் (20). இவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த ஈங்கூர் நல்லி கவுண்டன் பாளையத்தில் உள்ள ஒரு ஆலையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    அவரது அறையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சோனுபரீத் (20)என்பவரும் தங்கி அதை ஆலையில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் கலந்த 10 நாட்களுக்கு முன்பு டிஜோராம் சத்தீஸ்கருக்கு சென்றார். அதன் பிறகு மீண்டும் தான் வேலை செய்யும் ஆலைக்கு வந்தார். சொந்த ஊர் சென்று திரும்பி வந்ததிலிருந்து நிஜோராம் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

    அதன் பிறகு வேலைக்கு செல்லாமல் அறையிலேயே இருந்து வந்துள்ளார். இது குறித்த அவரிடம் கேட்டபோது தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார்.

    இந்நிலையில் நேற்று அறையில் உடன் இருந்த சோனுபரீத் வேலைக்கு சென்று விட்டார். அறையில் டிஜோராம் மட்டும் இருந்துள்ளார். மாலையில் வேலையை முடித்து கொண்டு சோனுபரீத் அறைக்கு வந்தபோது டிஜோராம் அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து டிஜோராம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கையாக சேலம், நாமக்கல் பகுதிக ளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    நாமக்கல்:

    கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் வட மாநிலத்தை சேர்ந்த கொள்ளையர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து முன்னெச்ச ரிக்கை நடவ டிக்கையாக சேலம், நாமக்கல் பகுதிக ளில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    வாகன சோதனை

    நாமக்கல் எம்.மேட்டுப்பட்டி, நல்லிபா ளையம் சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் நாமக்கல் டி.எஸ்.பி தன்ராஜ் அறிவுறுத்தலின்படி போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்ட னர்.

    அப்போது கிருஷ்ணகிரி பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் புகைப்படத்தை கொண்டு விசாரணை நடத்தினர். மேலும் வாகன சோதனை சாவடிகளில் உள்ள சி.சி.டி.வி கேமிரா மூலமும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இது குறித்து நாமக்கல் டி.எஸ்.பி. தன்ராஜ் கூறுகையில், வடமாநில கொள்ளையர்களை கண்காணிக்க சோதனை சாவடியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரோந்து வாகனங்கள் மூலமும் தீவிர கண்கா ணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    சேலத்தில் கடத்தப்பட்ட வடமாநில வாலிபரை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பெங்களூரில் முகாமிட்டுள்ளார்கள்.
    சேலம்:

    சேலம் பட்டைக்கோவில் பகுதியில் வசித்து வருபவர் மூலாதாரம் (வயது 52) ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இவர் டவுன் சின்னக்கடை வீதியில் கடந்த 3  ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜெயராம் (22). நேற்று முன்தினம் காலை நேரம் கடையைத் திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

     அப்போது 4 பேர் அவருடன் பேசிக் கொண்டிருந்தனர். காலை 6:45 அளவில் திடீரென அந்த 4 பேரும் ஜெயராமன் சட்டையை பிடித்து இழுத்துக்கொண்டு தயாராக இருந்த காரில் ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியது.

     இது குறித்த தகவலின் பேரில் டவுன் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். உதவி கமிஷனர் அசோகன் தலைமையில்  தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபர் ஜெயராமை கடத்தி சென்ற மர்ம நபர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

    ஒரே கிராமத்தை சேர்ந்த இவர்கள் சேலத்தில் தடை செய்யப்பட்ட குட்கா வியாபாரம் செய்து வருகின்றனர். குட்கா விற்பனை செய்ததாக ஜெயராம் மீது அம்மாபேட்டை போலீசார் ஏற்கனவே வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

    அவருடன் சுரேஷ், ஷாவலராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களை சென்னை ஐகோர்ட் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது. 3 பேரும் தலா ரூ. 50 ஆயிரம் நிவாரண நிதியாக செலுத்த வேண்டும் எனவும் கூறியது அதன்படி பணத்தைச் செலுத்திய பிறகு ஜாமீனில் வெளிவந்த வந்தனர்.

    இதன் பிறகு ஆத்தூர், ஈரோடு, திருச்செங்கோடு பகுதியில் இந்த வியாபாரத்தை நடத்தி வந்துள்ளனர். இதில் ஷாவலராம் பெங்களூரில் இருந்த பிரான்ஸ் போன்ற போதைப் பொருட்களை கடத்தி வந்து வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருச்செங்கோடு போலீசார் ஷாவலராம் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

    ஜாமினில் வெளி வந்த இவர் கடந்த 20 நாட்களாக போலீஸ் ஸ்டேஷன் கையெழுத்துப் போட்டு வந்தார். ஆனால் நேற்று இவர் கையெழுத்து போட வில்லை. எனவே இவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 

    இவர்கள் இருவரும் ஒன்றாக குட்கா கடத்தல் தொழில் செய்து வந்திருக்கலாம் எனவும் இதில் பணம் கொடுக்கல் வாங்கலில் இந்த கடத்தல் நடத்தி இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    மேலும்  போலீசாரிடம் பிடிபட்ட  லாரி உரிமையாளரான சுரேஷ் அதற்கான நஷ்டஈடு கேட்டு ஜெயராம் ஆகியோருக்கு நெருக்கடி கொடுத்து இருக்கலாம் எனவும் இதில் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஜெயராமை கடத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதற்கிடையில் மர்மநபர்கள் ஜெயராம் பெங்களூருக்கு கடத்திச் சென்று இருப்பது தெரியவந்தது. போலீசார் நெருக்கடி காரணமாக ஜெயராமனை ஒப்படைத்து விடுவதாக கூறியதாக தெரிகிறது. 

    ஆனாலும் ஜெயராம் இன்னும் மீட்கப்படவில்லை. மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. போலீசார்  தொடர்ந்து பெங்களூரில் முகாமிட்டுள்ளார்கள்.
    ×