என் மலர்
நீங்கள் தேடியது "Discussion"
- மேலூர் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
- தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்வர் அறிவுரை வழங்கினார்.
மேலூர்
மேலூர் தொகுதி தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களிடம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடவும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு உதவிட வேண்டும்/
தி.மு.க. ஆட்சியின் சாதனையை எடுத்துக் கூறியும் இன்றில் இருந்து இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.
இதில் மேலூர் நகர செயலாளரும், நகர்மன்ற தலைவமான முகமது யாசின், மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர்களான குமரன், கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணன், ராஜராஜன், ராஜேந்திர பிரபு, பழனி, கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், துரை புகழேந்தி, பூதமங்கலம் அப்பாஸ், பொருளாளர் ரவி, முருகானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
- வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
- திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா), மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூலம் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம் வட்டார குழு அமைப்பாளரும், வேளாண்மை உதவி இயக்குனருமான சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.
வட்டார விவசாய ஆலோசனை குழு தலைவர் மனோகரன் முன்னிலை வகித்தார்.
முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், கால்நடை மருத்துவர் மகேந்திரன், உதவி தோட்டக்கலை அலுவலர் புலவேந்திரன் மற்றும் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர்.
இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டங்கள் குறித்தும், அட்மா திட்டங்கள் குறித்தும், கால்நடைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைகள் மூலம் திட்டங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், உள்மாநிலம், வெளிமாநிலம், உள் மாவட்ட விவசாயிகள் பயிற்சிகள், கண்டுனர் சுற்றுலா, செயல் விளக்கங்கள், பண்ணை பள்ளி, திறன் மேம்பாட்டு பயிற்சி, தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி போன்ற இனங்களை கொண்டு விவசாயக்குழு உறுப்பினர்களோடு கலந்து ஆலோசிக்கப்பட்டது.
முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
- சங்ககிரி மோரூர் பிட் 1 கிராமம், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவனத்தில் சங்ககிரி போலீசார் சார்பில், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
- 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி மோரூர் பிட் 1 கிராமம், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவனத்தில் சங்ககிரி போலீசார் சார்பில், வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு சங்ககிரி டி.எஸ்.பி ஆரோக்யராஜ் தலைமை வகித்தார். அவர் பேசுகையில், சங்ககிரியில் பணியாற்றும் பீகார், ஒரிசா உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம். தேவையான பாதுகாப்பு உதவிகள் செய்யப்பட்டு உள்ளது. அதனால் எந்த விதமான அச்சுறுத்தலும் இல்லாமல் பணி செய்யலாம் என்றார்.
இதில், சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவி, எஸ்.ஐ சுதாகரன், என்.ஜி.ஏ ஸ்டீல் நிறுவன சேர்மன் அன்பழகன், நிர்வாக இயக்குனர் ராஜராஜன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
- வாழப்பாடி பகுதியில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகளில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் நேற்று ஆய்வு செய்தனர்.
- பிற மாநில தொழிலா ளர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பை உறுதி செய்த போலீசார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாழப்பாடி:
தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக, சமூக ஊடகங்களில் வதந்தி பரவியதால், இந்த தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வகையில் ஆய்வு நடத்திட காவல் துறையினருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து, வாழப்பாடி பகுதியில் பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் தனியார் தொழிற்சாலைகளில் வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில் போலீசார் நேற்று ஆய்வு செய்தனர்.
பிற மாநில தொழிலா ளர்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பை உறுதி செய்த போலீசார், சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாமென அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, எவ்வித அச்சுறுத்தலும் பயமுமின்றி பணிபுரிந்து வருவதாக தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- மாமன்ற உறுப்பினர் நிதியை உயர்த்தக்கோரி தி.மு.க. கவுன்சிலர்கள், மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பான விவாதம் நடந்தது.
மதுரை
மதுரை மாநகராட்சி பட்ஜெட் விவாத கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் துணைமேயர் நாகராஜன், மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத்சிங் ஆகியோர் முன்னிலையில் இன்று நடந்தது.
கூட்டத்தில் தி.மு.க. மாமன்ற குழு தலைவர் ஜெயராமன் பேசும்போது, எங்களுக்கு உரிய இருக்கை வசதி செய்துதர வேண்டும் என்றார்.
அவரை தொடர்ந்து மாமன்ற குழு துணைத் தலைவர் செந்தாமரை கண்ணன் உள்ளிட்டோர் இருக்கை கேட்டு பிரச்சினை செய்தனர். 92-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் கருப்புசாமி பேசும்போது, இது உள்கட்சி பிரச்சினை. இங்கு மக்கள் பிரச்சினையை மட்டும் தான் பேச வேண்டும் என்றார். இதனால் தி.மு.க. மாவட்ட உறுப்பினர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் விவாதம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம் செய்தனர்.
காங்கிரஸ் உறுப்பினர் கார்த்திகேயன் பேசும்போது, மக்கள் பிரச்சினையை மாமன்ற கூட்டத்தில் பேசுங்கள். வேறு பிரச்சி னையை தனியாக மேயரிடம் சென்று கூறுங்கள் என தெரிவித்தார். உடனே அவரை எதிர்த்து ஒரு தி.மு.க. கவுன்சிலர், "நீங்கள் மட்டும் மாமன்ற கூட்டத்திற்குள் ராகுல்காந்தி படத்தை கொண்டு வந்து பேசியது எந்த வகையில் நியாயம்? என ஒருமையில் பேசியதால் சலசலப்பு அதிகமானது.
இரு தரப்பையும் சமாதானம் செய்ய மேயர் எவ்வளவோ முயற்சித்தும் முடியவில்லை. சுமார் 1 மணி நேரம் மேயருடன் தி.மு.க. கவுன்சிலர்கள் அருகில் வந்து வாக்குவாதம் செய்தனர்.
முடிவில் மேயர் பேசும்போது, உறுப்பினர்கள் அனைவரும் தங்களது இருக்கைக்கு செல்ல வேண்டும். இல்லை என்றால் காவலர்களை வைத்து வெளியேற்ற செய்ய வேண்டியது இருக்கும் என எச்சரிக்கை விடுத்தார். அதன் பின்னர் அனைவரும் அவரவர் இருக்கைக்கு சென்று அமர்ந்தனர்.
பின்னர் பட்ஜெட் தொடர்பான விவாதம் நடந்தது.
67-வது வார்டு உறுப்பினர் நாகநாதன் பேசும்போது, விராட்டிபத்து பகுதியில் சாலை வசதி சரியில்லை. அந்த பகுதியில் பாலம் கட்டும் பணியை செய்த தனியார் நிறுவனம் சாலைகளை சேதப்படுத்தி விட்டது. மேலும் எச்.எம்.எஸ்.காலனி பகுதியில் பாதாள சக்கரை வசதி போன்றவை செய்து தர வேண்டும்.
அவரை தொடர்ந்து பேசிய 64-வது வார்டு உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான சோலை ராஜா பேசும்போது, மதுைரயைவிட குறைந்த வருவாய் ஈட்டக்கூடிய கோயம்புத்தூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு மேம்பாட்டு நிதியாக ரூ.50 லட்சம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகை குறைவாக உள்ளதால் அதனை தலா ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றார்.
- கலந்துரையாடல் கல்வி, கலாச்சார பரிமாற்ற பயணம் மேற்கொண்டுள்ளனர்
- தமிழக போலீசாரின் செயல்பாட்டிற்கு பாராட்டு
திருச்சி,
சுவீடன் நாட்டில் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் கல்வி கலாச்சார பரிமாற்ற குழு பயணமாக இந்தியா வந்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அவர்கள் இந்தியாவின் கல்வி முறை மற்றும் கலாச்சாரங்கள் குறித்து பலதரப்பினருடன் கலந்து ரையாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சுவீடன் மாணவ குழுவினர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியபிரியாவை சந்தித்தனர். சுவீடன் நாட்டை சேர்ந்த 3 ஆசிரியர்கள், அந்நாட்டில் 12ம் வகுப்பு பயிலும், 11 மாணவ, மாணவியர்கள் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு, குழந்தைகளின் கல்வி, இந்திய கல்வி, கலாச்சாரம், தமிழக காவல்துறையின செயல்பாடுகள், செஸ் ஒலிம்பியா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு மாநகர கமிஷனர் பதிலளித்தார். மேலும் சுவீடன் மாணவர்களுடன், தனது பணி அனுவப வத்தையும் அவர் பகிர்ந்து கொண்டார்.இது குறித்து சுவீடன் பள்ளி மாணவர்கள் கூறும்போது, போலீஸ் கமிஷனருடன் கலந்துரையாடியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவரின் பேச்சில் இருந்து ஏராளமான குறிப்புகள் நாங்கள் எடுத்து உள்ளோம். தமிழக காவல்துறை மக்கள் நம்பிக்கை கொண்டு உள்ளதையும், பெருமை கொள்ளும் விதமாக செயல்படுவதையும் வியந்து கேட்டோம் என்று அவர்கள் கூறினார்கள்.
- போலீஸ் சூப்பிரண்டு மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.
- படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார்.
கடலூர்:
விருத்தாச்சலம் கல்வி மாவட்டம் தீவலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா சம்பந்தமாக கடலூர் மாவட்ட காவல் அலுவலகத்திற்கு வந்தனர்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் மாணவர்களை வரவேற்று இருக்கையில் அமர வைத்தார். பின்னர் மாணவர்களிடம் பொது அறிவு சம்பந்தமான கேள்விகளை கேட்டு கலந்துரையாடினார்.
நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன். இப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறேன். நீங்களும் ஒழுக்கத்துடன் நன்றாக படித்து பெரிய பதவி வகிக்க வேண்டும் எனவும், ஒழுக்கம் குறித்தும், படிக்கும் காலங்களில் ஏதேனும் தொந்தரவுகள் இருந்தால் உடனடியாக பெற்றோரிடம் கூற வேண்டும் எனஅறிவுரை கூறினார். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு குளிர்பானம் கொடுத்தும், பேனா, பென்சில் ,ரப்பர் போன்ற பரிசுப் பொருட்கள் வழங்கி மகிழ்வித்தார்.பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், ஆசிரியர் ஜோஸ்பின் கீதாஞ்சலி, தன்னாலர்வலர்கள் சுகுணா ,சிந்தனை செல்வி, சமையலர் பார்வதி ஆகியோர் உடன் இருந்தனர்.
- கீழக்கரை நகராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
- நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அந்தக் குழிக்குள் விழுந்து காயமடைந்து வருகிறார்கள்
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர்மன்ற அவசரக் கூட்டம் நடந்தது. தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஹமீது சுல்தான்,ஆணையாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
கவுன்சிலர் சப்ராஸ் நவாஸ், துணைத் தலைவர் ஹமீது சுல்தான்: கடந்த 3 மாதங்களுக்கு முன் பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பெத்ரி தெருவில் பைப்லைன் அமைப்பதற்கு டெண்டர் விடப்பட்டது. ஒப்பந்ததாரர் பழனி அதை எடுத்தார். அந்த இடத்தில் பைப் போடுவதற்கு குழிகள் தோண்டப்பட்டு 3 மாதங்களாக அப்படியே போட்டு வைத்துள்ளார். இதனால் அங்கு நடந்து செல்லும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அந்தக் குழிக்குள் விழுந்து காயமடைந்து வருகிறார்கள். அது ஏன் அப்படியே போடப்பட்டுள்ளது? ஓவர்சியர்: அந்த ஒப்பந்ததாரரிடம் பலமுறை கூறியும் நாளை பார்க்கிறேன், நாளை பார்க்கிறேன் என்று காலம் தாழ்த்தி வருகிறார்.
துணைத் தலைவர்: அவ்வாறு பணி செய்ய மறுக்கும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார். கவுன்சிலர்கள் பாதுஷா, காயத்ரி மீரான் அலி, நஸ்ருதீன். முஹம்மது ஹாஜா சுஐபு, சித்திக், சுகாதார ஆய்வாளர் பரகத்துல்லா, பொறியாளர் அருள், மேற்பார்வையாளர் சாம்பசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு மே 31-ந் தேதி நடக்கிறது.
- ஜூன் 20-ந் தேதி வரை 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணை நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தமிழரசி வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:-
திருவெண்ணை நல்லூர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-2024-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மற்றும் இளமறிவியல் மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு இட ஒதுக்கீட்டு கலந்தாய்வு மே 31-ந் தேதி நடக்கிறது. இதில், ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள், மாநிலம் மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளலாம். தொடர்ந்து, பொது கலந்தாய்வு ஜூன் 5-ந் தேதி கணினி அறிவியல் கணிதம் இயற்பியல் வேதியல் தாவரவியல் விலங்கியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு காலை 9.30 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் இந்த பாடப்பிரிவலுக்கு கட்டணம் 2740 ஆகும்.
ஜூன் 6-ந் தேதி வணிகவியல் காலை 9.30 மணி அளவில் தொடங்கும் இதற்கு கட்டணம் ரூ.2,720 ஆகும். ஜூன் 7-ந் தேதி தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்தாய்வு நடைபெறும். இதற்கு கட்டணம் 2.720 ரூபாய் ஆகும். ஜூன் 20-ந் தேதி வரை 2 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் இவற்றின் உண்மைச் சான்றிதழ் உடன் 2 பிரதிகள், ஜெராக்ஸ் 5 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும். பெற்றோருடன் கலந்து கொள்ள வேண்டும்.
சேர்க்கைக்கான கட்ட ணத்தை அன்றே அலுவ லகத்தில் செலுத்த வேண்டும். மேலும், விண்ணப்பம் செய்த வர்களின் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், www.gasctvn.com என்ற இக்கல்லூரியின் இணையத் தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் குறுஞ் செய்தி மற்றும் புலனம் (வாட்ஸ் அப்) வழியாக தகவல் தெரிவிக்கப்படும். கூடுதல் விவரங்களை அறிய கல்லூரியை அணுகலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, மேட்டூரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்றார்.
- புதிதாக போலீஸ் பணியில் சேர்ந்து, மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 480 ஆண் காவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
மேட்டூர்:
தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, மேட்டூரில் செயல்பட்டு வரும் காவலர் பயிற்சி பள்ளிக்கு நேரில் சென்றார். புதிதாக போலீஸ் பணியில் சேர்ந்து, மேட்டூர் காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் 480 ஆண் காவலர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
மேலும் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், பயிற்சி காவலர்களை ஊக்கம் அளிக்கும் வகையில் சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து பயிற்சி காவலர்களுக்கான உணவகத்தை ஆய்வு செய்தார். பின்னர் பயிற்சி காவ லர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். அப்போது, மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி (பொறுப்பு) விஜயகு மார், போலீஸ் கண்கா ணிப்பாளர்கள் சிவகுமார் (சேலம்), ஜவகர் (ஈரோடு), காவலர் பயிற்சி பள்ளி கண்காணிப்பாளர் சந்திர மௌலி ஆகியோர் உடன் இருந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை காவலர் பயிற்சி பள்ளி துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் உதவி கண்காணிப்பாளர் நாகராஜ், இன்ஸ்பெக்டர்கள் கவிதா, ராஜேஷ் ஆகியோர் செய்தனர்.
- இளநிலை பட்ட படிப்பில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது.
- நாளொ ன்றுக்கு 150 மாணவ, மாணவிகள் வீதம் முதல் கட்ட கலந்தாய்விற்கு 859 பேர் அழைக்கப்ப ட்டுள்ளனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி களில் இளநிலை பட்ட படிப்பில் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு நேற்று துவங்கியது. காரைக்கால் மாவட் டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரிகளில் இள நிலை பட்ட படிப்புக ளான பி.ஏ,. பி.காம், பி.எஸ்.சி ஆகிய வகுப்புகளில் சேருவதற்கா ன முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கி யது. இந்த கலந்தாய்வு, இம்மாதம் 27-ந் தேதி வரை, காரைக்கால் நேரு நகரில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள தேர்வுக் கூடத்தில் நடை பெறும் என்றும், நாளொ ன்றுக்கு 150 மாணவ, மாணவிகள் வீதம் முதல் கட்ட கலந்தாய்விற்கு 859 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர்களுக்கு கல்லூரி சேர்க்கைக்கான அனுமதி சான்றிதழை அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முகமது ஆசாத் ராசா மற்றும் அவ்வை யார் அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பாலாஜி ஆகியோர் மாணவ ர்களுக்கு வழங்கினார்கள்.
- திருகோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளியில் மாணவர்களின் பெற்றோர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது
- பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு நுழைவுத் தேர்வு பற்றிய சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில், மேல்நிலை வகுப்பு மாணவர்களின் பெற்றோர்களுடன் கலந்துரையாடல் மற்றும் நியூ ஹரிஸோன் அகாடமியுடன் இணைந்து நீட், ஜே.இ.இ பயிற்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. "சேர்ந்தே உயர்த்துவோம்" என்னும் தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமையேற்றார். அவர் பேசும்போது, இன்றைய நிலையில் பள்ளியிறுதி வகுப்புக்குப்பிறகான படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அப்படி எழுதுகின்ற நுழைவுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுகின்ற மாணவர்கள்தான் நல்ல தரமான கல்லூரிகளில் மேற்படிப்பை தொடர முடியும். அதற்கான பயிற்சிகளைத் தேடி பெருநகரங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை. நம்பள்ளியில் இந்த ஆண்டு முதல் நீட் மற்றும் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை நியூ ஹரிஸோன் அகாடமியுடன் இணைந்து வழங்குகின்றோம். மேலும் மாணவர்கள் ஆடிட்டர் படிப்பைத் தெரிவு செய்ய சி.ஏ. படிப்புக்கான பயிற்சியை பிரசாத் ஆடிட்டருடன் இணைந்து நம் பள்ளியில் வழங்க உள்ளோம்.பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இலட்சியங்களைக் கேட்டறிந்து அவர்கள் கடுமையாக உழைக்க உறுதுணையாக இருக்கவேண்டும் என்று பேசினார்.
தொடர்ந்து நியூ ஹரிஸோன் அகாடமியின் இயக்குநர் டேவிட்ரிச்சர்ட்பார்டன் பேசினார். முன்னதாக ஒருங்கிணைப்பாளர் அபிராமசுந்தரி வரவேற்க, நிறைவாக துணை முதல்வர் குமாரவேல் நன்றி கூறினார். ஏராளமான பெற்றோர்களும் மாணவர்களும் கலந்து கொண்டு நுழைவுத் தேர்வு பற்றிய சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டர். விழாவில் ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, வரலெட்சுமி, கோமதி. மேலாளர் ராஜா, ஆசிரியர் கணியன் செல்வராஜ் நியூ ஹரிஸோன் அமைப்பினைச் சேர்ந்த கண்ணன், கோபு, கலைவாணி, இராஜகோபால் ஆடிட்டர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டர். நிகழ்வை ஆசிரியர் உதயகுமார் தொகுத்து வழங்கினார்.