என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Firecracker Accident"

    • ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    • வீட்டில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.

    மேற்கு வங்காளத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    மேற்கு வங்கத்தின் சவுத் 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதர் பிரதிமா பகுதியில் உள்ள தோலகாட் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு 9 மணியளவில் எரிவாயு சிலிண்டர் வெடித்தது.

    இதில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தீயை அணைத்த பின் மீட்புக் குழுவினர் உள்ளே இருந்த 7 உடல்கள் மீட்கப்பட்டன. வெடிப்புக்கான காரணாம் குறித்த ஆய்வு நடந்து வருகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

    வீட்டில் சேமித்து வைத்திருந்த பட்டாசுகளில் தீப்பற்றி வீடு முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது. அங்கு பட்டாசு தயாரிப்பு நடந்து வந்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

    • குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.
    • மாலை இங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியம் வெள்ளாளபுரம் ஊராட்சி, முனியம்பட்டியை அடுத்த சன்னியாசி கடை பகுதியில் குமார் (வயது 40) என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சன்னியாசி கடை பகுதியை சேர்ந்த அமுதா (45) மற்றும் வெள்ளா ளபுரம் வானக்கார தெருவை சேர்ந்த வேடப்பன் (75) ஆகியோர் பட்டாசு தயாரிக்கும் பணி யில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி மாலை இங்கு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் கட்டிடத்தின் மேற்கூரை வெடித்து சிதறிய நிலையில் அங்கு பணியில் இருந்த அமுதா தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய வேடப்பன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இந்த வெடிவிபத்து தொடர்பாக வெடிபொருள் சட்டம் 1884, பிரிவு-9(1)ன் கீழ் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் நீதி விசாரணை நடத்தி வருகிறார்.

    மேலும், இந்த வெடி விபத்து எந்த சூழ்நிலையில், எதனால் ஏற்பட்டது என்பது குறித்து வருகிற 25-ந்தேதி மாலை 4.30 மணிக்கு எடப்பாடி வட்டாட்சியர் அலுவல கத்தில் பொது மக்களிடம் நேரடி விசாரணை நடத்தப்பட உள்ளது.

    எனவே, இந்த வெடி விபத்து குறித்து விபரங்கள் தெரிந்தவர்களும், நேரில் பார்த்தவர்களும் மற்றும் சாட்சியம் அளிக்க விரும்புப வர்களும் அன்று மாலை 4.30 மணிக்கு எடப்பாடி வட்டாட்சியர் அலுவல கத்தில் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் முன்னிலையில் விபரங்களை பகிரங்கமா கவோ அல்லது ரகசிய மாகவோ தெரிவிக்கலா என்று கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தெரிவித்துள்ளார்.

    • வீட்டின் மேல்மாடியில் செயல்பட்டு வந்த பட்டாசு கடையில் வெடி விபத்து.
    • வெடி விபத்தினால் கடையில் வேலை செய்துகொண்டிருந்த 2 சிறுவர்கள் உயிரிழப்பு

    உத்தர பிரதேசம் மாநிலம் கெல்வாடா கிராமத்தில் உள்ள வீட்டின் மேல்மாடியில் பட்டாசுக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த கடையில் இன்று தீடிரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஹிமான்சு என்கின்ற 12 வயது சிறுமியும், பராசு என்ற 14 வயது சிறுவனும் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் உயிரிழந்த சிறுவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், வீட்டின் உரிமையாளர் ஷதாப் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    விருதுநகர் அருகே நடந்த வெடி விபத்தில் பட்டாசு தொழிலாளி படுகாயம் அடைந்தார்.
    சிவகாசி

    சிவகாசி அருகே உள்ள அம்மன்கோவில் பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (62). இவர் செங்கமலம்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் போர்மேனாக பணியாற்றி வந்தார். 

    சம்பவத்தன்று ஆலையில் உள்ள கழிவு பட்டாசுகளை எரித்தார். அப்போது பட்டாசுகள் வெடித்ததில் கிருஷ்ணசாமி தீக்காயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் கிருஷ்ணசாமி சிகிச்சை பெற்று வருகிறார். 

    இது குறித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×