என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Welfare assistance"

    • எட்டயபுரம் ரோடு கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவில் தையல் எந்திரம், சைக்கிள், உதவித்தொகை, ஹாட் பாக்ஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • தொழில் வளம் பெருகுவதற்கும் கல்வி வளர்ச்சியடைவதற்கும் என அனைத்து துறைகளையும் முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் சென்றுள்ளார்

    தூத்துக்குடி:

    தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. 45-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எட்டயபுரம் ரோடு கலைஞர் அரங்கில் நடைபெற்ற விழாவில் தையல் எந்திரம், சைக்கிள், உதவித்தொகை, ஹாட் பாக்ஸ் என மொத்தம் 728 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.

    பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கடுமையான நிதிநெருக்கடி, மறுபுறம் ஒன்றிய அரசின் நெருக்கடி இவற்றை யெல்லாம் தாங்கி கொண்டு பொருளாதார நிலை உயர்வதற்கும் தொழில் வளம் பெருகு வதற்கும் கல்வி வளர்ச்சியடைவதற்கும் என அனைத்து துறைகளையும் முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

    தமிழர்களின் வாழ்வாதாரமும், கலாசாரமும் பாதுகாக்கப்பட்டு உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமையை எடுத்துச் சொல்லும் வகையில் பணியாற்றும் முதல்-அமைச்சர் தமிழகத்தில் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருகிறார். முதல்-அமைச்சரின் கரத்தை வலுப்படுத்த அனைவரும் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் தி.மு.க. மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செயலளார் புளோரன்ஸ், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் நிர்மல்ராஜ், அன்னலட்சுமி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச்செயலாளர் ஆறுமுகம், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன்,

    மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரி தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏவின் 45-வது பிறந்த நாளை முன்னிட்டு ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி இணைந்து ராணிப்பேட்டை நகரத்தில் உள்ள விசுவாஸ் மனவளர்ச்சி குன்றிய பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் வினோத் காந்தி தலைமை தாங்கினார்.விஸ்வாஸ் பள்ளி தலைவர் கமலா காந்தி வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உணவு அளித்து அவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்.நிகழ்ச்சியில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் சுற்றுச்சூழல் அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நாகர்கோவில் செர்வ் சாரிட்டபிள் தொண்டு நிறுவனத்தின் சார்பில் ஏழை, எளிய கிராமப்புற மக்கள் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
    • 35 வகையான உணவு பொட்டலம் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கயத்தாறு:

    கயத்தாறு யூனியன் செட்டிகுறிச்சி பஞ்சாயத்தில் தெற்கு கோனார் கோட்டை கிராமத்தில் நாகர்கோவில் செர்வ் சாரிட்டபிள் தொண்டு நிறுவனத்தின் சார்பில் அப்பகுதியில் உள்ள ஏழை, எளிய கிராமப்புற மக்கள் 110 பேருக்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை செட்டி குறிச்சி பஞ்சாயத்து தலைவர் முத்துலட்சுமி கிருஷ்ணசாமி ஆகியோர் வழங்கினர்.

    இதில் செர்வ் சாரிட்டபிள் தொண்டு நிறுவனம், ஏழை, எளியோர், முதியோர், ஊனமுற்றோர் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 110 பயனாளிகளுக்கு 25 கிலோ அரிசி பை, 32 வகை மளிகை பொருட்கள், 2 லிட்டர் சமையல் எண்ணெய் உட்பட 7 லட்சம் மதிப்புள்ள 35 வகையான உணவு பொட்டலம் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் நாகர்கோவில் செர்வ் சாரிட்டபிள் தொண்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சஜின், ஜஸ்டின், பென்சீர் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • பேராசிரியரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கியும், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும்.
    • பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    திருப்பூர் :

    தி.மு.க. திருப்பூர் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வடக்கு மாவட்ட அவைத்தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், வடக்கு மாநகர செயலாளரும், மேயருமான தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கூட்டத்தின் நோக்கம் குறித்து சிறப்புரையாற்றினார். மாவட்ட, மாநகர, ஒன்றிய, செயலாளர்கள், பகுதி செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் பேராசிரியர் அன்பழகனின் பிறந்தநாளான வருகிற 19-ந்தேதி மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகில் பேராசிரியரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கியும், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் கொண்டாட வேண்டும்.

    வருகிற 16-ந்தேதி திருப்பூர் வடக்கு மாவட்டத்தில் பேராசிரியர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில், இலக்கிய அணி செயலாளர் வி.பி.கலைராஜன், தலைமை கழக சொற்பொழிவாளர் புகாரி ஆகியோர் பேசுகிறார்கள். பொதுக்கூட்டத்தை சிறப்பாக நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • ஊட்டி முள்ளிக்கொரை ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கம்பளி போர்வைகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கினார்.

    ஊட்டி,

    தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நீலகிரி மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் ஊட்டி முள்ளிக்கொரை ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் நாகராஜ் அனைவரையும் வரவேற்றார்.மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, தொரை, ஊட்டி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு கம்பளி போர்வைகள் மற்றும் அறுசுவை உணவு வழங்கினார்.விழாவில் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் காந்தல் ரவி, எல்கில் ரவி, ராஜா, ஊட்டி நகர பொருளாளர் அணில்குமார், மாவட்ட பிரதிநிதிகள் கார்திக், ஊட்டி நகராட்சி உறுப்பினர்கள் ரமேஷ், விஷ்னு, திவ்யா, மீனா, ரகுபதி, கஜேந்திரன், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளர்கள் ஜெயராமன், மேத்யூஸ், மார்கெட் ரவி, தியாகு, மத்தீன், நிர்வாகிகள் எச்பி்எப் ரவி, சபீர், ஆகாஷ் உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • 64 பயனாளிகளுக்கு ரூ.25.47 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை, குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார்கோவில்), சுதர்சனம் (மாதவரம்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோருடன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துறைகள் ரீதியாக களஆய்வுகள் மேற்கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின்போது சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன்,எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி (காரைக்குடி), தமிழரசி (மானாமதுரை), சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி,துணைச் செயலாளர் ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.

    காரைக்குடி வட்டத்தி ற்குட்பட்ட அழகப்பா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும், காரைக்குடி ஆதிதிராவிடர் நலத்துறையின் அரசினர் மாணவிகள் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், காரைக்குடி அரசு தலைமை மருத்துவ மனையில் இயற்கை மற்றும் யோகா பிரிவில் தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியமர்த்த வேண்டிய பிரிவின் பணியாளர்கள், மருந்துகளின் இருப்புகள் குறித்தும் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.

    கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு மையம் மற்றும் அருங்காட்சியகப் பணிகளின் நிலை குறித்தும், பையூர் ஊராட்சியில், பழமலைநகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பித்தல் முறை மற்றும் மேம்படுத்த வேண்டிய வசதிகள் ஆகியன குறித்தும் ஆய்வு செய்தனர்.

    பின்னர் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெ ருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், சிறப்பான நிர்வாகத்தை வெளிப்ப டைத் தன்மையுடன் அரசு மேற்கொள்ளும் வகையில், இந்த குழு அடிப்படை யாக திகழ்கிறது. எங்களுக்கு அளிக்கப்படும் விவரங்கள் பரிசீலனை க்கு உட்படுத்தப்பட்டு, அரசிற்கு இந்த குழு வாயிலாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

    இந்த நிகழ்வின்போது, பல்வேறு துறைகள் சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூ.25.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை வழங்கினார்.

    ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 62 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ,15.69 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • கலெக்டர் வழங்கினார்

    கரூர்:

    உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவையொட்டி கரூர் தாந்தோணிமலையில் நேற்று நடைபெற்ற விழாவில் கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு பேசியது:-

    மனு அளித்த ஒரு மணி நேரத்தில் 10-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கு மாற்றுத் திறனாளிகள் நலன் சார்ந்த திட்டங்களை வழங்குவதற்காக அரசிடம் கலெக்டரின் தன் விருப்புரிமை நிதிக்காக ரூ.5 ேகாடி கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது என்றார். விழாவில் 62 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.15.69 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • கரிக்கையூா் கிராமத்தில் இருளா் பழங்குடியினா் அதிகளவில் வசித்து வருகின்றனா்.
    • உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கரிக்கையூா் கிராமத்தில் இருளா் பழங்குடியினா் அதிகளவில் வசித்து வருகின்றனா். இந்த பழங்குடியின மாணவா்கள் பயன்பெறும் வகையில் காவல் துறை சாா்பில் நோட்டு புத்தகங்கள், உடற்பயிற்சி சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. காவல் துறை சாா்பில் கட்டப்பட்டுள்ள பழங்குடியினா் மேம்பாட்டு மையத்தை மாவட்ட திட்ட இயக்குநா் மோனிகாராணா திறந்து வைத்தாா். ஸ்ரீ ஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தை பாா்வையிட கரிக்கையூா் அரசு பள்ளியில் இருந்து தோ்வான 10ம் வகுப்பு மாணவா் ராஜு மற்றும் ரேவதி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், வனத்துறை அலுவலா் ராஜ்குமாா், கன்டோண்மென்ட் தலைமை அலுவலா் முகமது அலி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.

    • மலையடிப்புதூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் உள்ள களக்காடு அருகே உள்ள மலையடிப்புதூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொரு ளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை யாற்றினார்.

    இதில் முன்னாள் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன்,தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, களக்காடு ஒன்றிய சேர்மன் ஜார்ஜ்கோசல், களக்காடு தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் அலெக்ஸ், களக்காடு நகராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜார்ஜ்வில்சன், மலை யடிப்புதூர் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ், மாநில விவசாய அணி செயலாளர் விவேக்முருகன், மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர், கக்கன் கார்த்தி கேயன், செல்லப்பாண்டி, மாநில மகளிரணி இணை செயலாளர் கமலா, அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் வட்டார தலைவர் சங்கரநாராயணன், பவன், ஏர்வாடி பேரூராட்சி, திருக்குறுங்குடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ரீமாபைசல், ராசாத்தி அம்மாள்,பாளை தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் நளன், களக்காடு வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் பால்பாண்டி, களக்காடு நகராட்சி தலைவர் சாந்திசுபாஷ், தி.மு.க நகர செயலாளர் மணிசூரியன், கவுன்சிலர்கள் மிகா, வனிதா காமராஜ், கோவிலம்மாள்புரம் பஞ்சாயத்து தலைவி லதா முத்துராமலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர் காமராஜ், களக்காடு தெற்கு வட்டாரம்,களக்காடு நகராட்சி காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் டேனியல், காமராஜ், நாங்குநேரி வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ராஜா, சுந்தர், ஜெயசீலன், பொன்ராஜ் வட்டார மகளிரணி தலைவி பிரியாமுருகன், களக்காடு வட்டார மகளிரணி நிர்வாகிகள் ராணி, விமலா, பானு, லதா, ஸ்ரீதேவி, சுதா, ஏர்வாடி பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள்,களக்காடு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், அன்வர், ஆபிரகாம் மற்றும் களக்காடு, நாங்குநேரி வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

    • அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாளையொட்டி உழவர்கரை தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகளுக்கு நோட்டு-புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கினார்.

    புதுச்சேரி:

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்த நாளையொட்டி உழவர்கரை தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    அ.ம.மு.க. மாநில இணைச் செயலாளர் லாவண்யா ஏற்பாட்டியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாநில அ.ம.மு.க செயலாளர் எஸ்.டி.சேகர் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு நோட்டு-புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் 150-க்கும் மேற்பட்டோருக்கு அறுசுவை உணவு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் அவை தலைவர் சுப்பிரமணியன், துணைச் செயலாளர் சிலம்பரசன், மகளிர் அணி செயலாளர் காமாட்சி, மூத்த நிர்வாகி ரகுபதி, ஜெ. பேரவை செயலாளர் காண்டீபன், முன்னாள் இலக்கிய அணி செயலாளர் ஆனந்தன், இளைஞர் பாசறை செயலாளர் இளம்வழுதி.

    வர்த்தக அணி செயலாளர் கணேசன், மாணவரணி செயலாளர் ஜெகதீசன், கதிர்காமம் ராமசந்திரன் மற்றும் உழவர்கரை தொகுதி நிர்வாகிகள் லூர்து, கலியபெருமாள், அவைத்தலைவர், மீனம் முருகன், சுரேஷ், நாகுமணி, டேவிட், பிரதாப், மூலகுளம் சுரேஷ், பாவாணர் நகர் சுரேஷ், ெதய்வாணை, சகிலா, சுரேஷ், சார்ஜத், சரளா, ஆர்த்தி, உமா, லட்சுமி, மரியா, அன்புமணி வள்ளி வசந்தி, சாந்தி, உமா மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

    • இளையான்குடி அருகே ரூ.31 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்திதல் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அ.நெடுங்குளத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கலந்து கொண்டு பல்வேறு துறைகள் சார்பில் ரூ.30.92 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 194 பயனாளிகளுக்கு வழங்கி னார். பின்னர் அவர் பேசிய தாவது:-

    முதல்-அமைச்சர் பொதுமக்களின் நலனை கருத்திதல் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறார். பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து அதில் உள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நலத்திட்ட உதவிகள் வழங்க மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) காமாட்சி, இணை இயக்குநர்கள் தனபாலன் (வேளாண்மைத்துறை), நாகநாதன் (கால்நடைப் பராமரிப்புத்துறை, துணை இயக்குநர் (சுகாதாரம்) விஜய்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பசுவந்தனையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
    • முகாமில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு முதியோர்- விதவை உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் செய்ய பெறப்பட்டவர்கள் 192 மனுக்களின் 172 மனுக்கள் ஏற்கப்பட்டன.

    புதியம்புத்தூர்:

    பசுவந்தனையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் கலந்து கொண்டு முதியோர்- விதவை உதவித்தொகை, இலவச வீட்டு மனை பட்டா, பட்டா பெயர் மாற்றம் செய்ய பெறப்பட்டவர்கள் 192 மனுக்களின் 172 மனுக்கள் ஏற்கப்பட்டன 72 பேருக்கு 2.33 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி ஆர்.டி.ஓ. மகாலட்சுமி, ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ், தாசில்தார் நிஷாந்தினி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வகுமார், பசுவந்தனை பஞ்சாயத்து தலைவி லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். இதைத்தொடர்ந்து பசுவந்தனை பஜாரில் கட்டப்பட்ட புதிய சுகாதார வளாகத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.

    ×