என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Soil Conservation"

    • ஒவ்வொரு வருடமும் 14,000 விவசாயிகளுக்கு மரம் சார்ந்த விவசாயத்திற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
    • சத்குருவின் வழிகாட்டுதலில் 'வெள்ளியங்கிரி உழவன்' நிறுவனம் துவங்கி முதலில் நிறுவனத்தின் குழு உருவாக்கப்பட்டு, பரிவர்த்தனை துவங்கியது.

    கோவை:

    கோவை செம்மேடு பகுதியில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் அரசு வேளாண் மற்றும் அதனை சார்ந்த துறைகளின் உயர் மற்றும் இடைநிலை அலுவலர்களுக்கு காவேரி கூக்குரல் மற்றும் மண் காப்போம் இயக்கத்தின் இயக்குனர்கள் அந்தந்த திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பயிற்றுவித்தனர்.

    கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்தும் ஐந்து நாள் பயிற்சியான 'எக்ஸ்டென்சன் நெக்ஸ்ட் - வேளாண் விரிவாக்கத்தில் மாற்றங்களும் புதுமைகளும்' என்ற நிகழ்ச்சி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறை அலுவலர்களுக்கு நடந்து வருகிறது. டிசம்பர் 12 முதல் 16 வரையிலான 5 நாட்கள் நடைபெற்று வரும் இந்நிகழ்வின் நேற்றைய ஒரு பகுதி, ஈஷாவின் மண் காப்போம் மற்றும் காவேரி கூக்குரல் திட்டங்களின் செயல்முறையும் செம்மேடு பண்ணையில் பயிற்சியாக வழங்கப்பட்டது. 

    இதில் காவேரி கூக்குரல் திட்டத்தின் இயக்குனர் திரு. ஆனந்த் எத்திராஜுலு அவர்கள் பேசுகையில் திட்டத்தின் செயல்பாடுகள், சந்தித்த சவால்கள், நடந்த மாற்றங்கள், எதிர்கால திட்டங்கள் ஆகியவற்றை விளக்கினார். "ஆரம்ப கட்டத்தில் பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளிட்ட பொது இடங்களில் மரங்களை நட்டோம்.

    அதன் உயிர்பிழைப்பு சதவிகிதம் 40 சதவீதத்திற்கும் கீழாக இருந்தது. அதனை கண்டறிந்து மரங்களின் உயிர்வாழ்தல் சதவிகிதம் அதிகரிப்பதற்கு, மரங்களை விவசாயிகளின் நிலங்களில் நட்டோம். அது அவர்களுக்கும் பொருளாதார ரீதியாகவும் பயனுள்ளதாக இருந்தது. அப்போது மரங்களின் உயிர்வாழும் சதவிகிதம் ஆச்சர்யப்படும் வகையில் 80 சதவிகிதத்திற்கும் மேல் இருந்தது. குறிப்பாக மரம் சார்ந்த விவசாயத்தில், முதலில் பழ மரங்கள், மழை தரும் மரங்கள், மூலிகைகள் என துவங்கி விவசாயிகளுக்கு நல்ல விலை வருகின்ற வகையிலான டிம்பர் மரங்களின் தேவை இருப்பதை அனுபவத்தில் கண்டறிந்தோம்.

    அதன் பிறகு 2009-ல் தேக்கு, செம்மரம், மகோகனி, மலைவேம்பு உள்ளிட்ட பல்வேறு மதிப்புமிக்க டிம்பர் வகை மரங்களை விவசாயிகளுக்கு மிகக்குறைந்த மானிய விலையான 3 ரூபாயில் வழங்கினோம். இந்த டிம்பர் மதிப்பு மரங்கள் குறைந்த காலம் முதல் நீண்ட காலம் வரையிலான நிதி காப்பீடாக இருக்கும் என்பதை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தோம்.

    மேலும் கடந்த 15 வருடங்களாக இந்த மரம் சார்ந்த விவசாயத்தில் சாதித்த விவசாயிகளின் வழிகாட்டுதல்கள், பகிர்தல்களை பயிற்சி நிகழ்வுகளின் மூலம் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்குவது மிகவும் பயனுள்ளதாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது. இப்போது ஒவ்வொரு வருடமும் 14,000 விவசாயிகளுக்கு மரம் சார்ந்த விவசாயத்திற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதில் 2500 விவசாயிகள் முழுவதுமாக மரம் சார்ந்த இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளனர். இது அனைத்து தட்பவெப்ப நிலைகளுக்கும் பொருந்தும்படியான வேளாண்மை என்பது குறிப்பிடத்தக்கது" என்றார்.

    ஈஷாவின் வழிகாட்டுதலில் இயங்கும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் திட்ட இயக்குனர் திரு. வெங்கட்ராசா அவர்கள் பேசுகையில், "தற்போது மத்திய துறை திட்டம் 10,000 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை துவங்க உள்ளதாக அறிவித்து, வெள்ளியங்கிரி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை மாதிரி நிறுவனமாக அங்கீகரித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்த 3 நாள் பங்குதாரர்கள் மாநாட்டில், ஈஷா அவுட்ரீச்-ன் திட்ட மாதிரி அமைச்சகம் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு, பிறகு அது இந்தியா முழுவதும் பரிந்துரைக்க ஏற்றுக்கொள்ளப்பட்டது. பெரும் நிறுவனங்களுக்கே இத்தகைய உடன்படிக்கைக்கு வருவது என்பது சிக்கலானதாக இருக்கும்போது, அமைப்புசாரா துறையான விவசாயத்தில் இருக்கும் விவசாயிகளிடம் இதனை கொண்டு செல்வது சவாலான இலக்காக இருந்தது.

    சத்குருவின் வழிகாட்டுதலில் 'வெள்ளியங்கிரி உழவன்' நிறுவனம் துவங்கி முதலில் நிறுவனத்தின் குழு உருவாக்கப்பட்டு, பரிவர்த்தனை துவங்கியது. விவசாயிகளை தங்களுக்கு மட்டுமே சிந்திப்பதிலிருந்து அனைவருக்குமான தீர்வுகளை சிந்திக்கும் அளவிற்கு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அடுத்து வேளாண் துறை அமைச்சகத்தோடு இணைந்து மேலும் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை துவக்க உள்ளோம்" என்றார்.

    இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வேளாண்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், மண் காப்போம் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண் விரிவாக்க கல்வி இயக்க தலைவர் பேராசிரியர் திரு. ஆனந்தராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

    • இந்தியா வாழை உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கிறது.
    • 37 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறோம்.

    'ஈஷா மண் காப்போம்' இயக்கம் சார்பில் 'வாழ வைக்கும் வாழை' எனும் பிரம்மாண்ட பயிற்சி கருத்தரங்கு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் கல்லூரியில் நடைப்பெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ICAR-NRCB இயக்குனர் செல்வராஜன், "சத்குரு உலகமெங்கும் பயணித்து, மண் காப்போம், மண் நமது உயிர் என ஐ.நா அமைப்புகள் மற்றும் பல்வேறு உலக நாடுகளில் மண் வளம் காக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்துப் பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளார்" என பாராட்டினார்.

    இத்திருவிழாவின் நோக்கம் குறித்து மண் காப்போம் இயக்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஶ்ரீமுகா பேசுகையில், "திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயம் பிரதானமாக இருக்கிறது. பல விவசாயிகள் வாழை விவசாயம் என்பது வாழை சாகுபடியோடு நின்று விடுவதாக நினைக்கிறார்கள்.

    ஆனால் வாழையில் அதன் அனைத்து பாகங்களையும் மதிப்பு கூட்ட முடியும். இவ்வாறு மதிப்பு கூட்டுவதன் மூலம் சிறு விவசாயிகள் கூட தொழில் முனைவோர்கள் ஆக முடியும். எனவே அது குறித்த உத்திகளை, தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது" என பேசினார்.

    இவ்விழாவில் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் செல்வராஜன் பேசுகையில், "ஈஷாவால் நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தோடு பங்கேற்கின்றனர். இது போன்ற விவசாயிகளை ஒருங்கிணைத்து பயிற்சி கருத்தரங்குகளை நடத்துவதற்கு ஈஷாவிற்கு நன்றி.

    இந்தியா வாழை உற்பத்தியில் உலகில் முதலிடம் வகிக்கிறது. நாம் 10 லட்சம் ஹெக்டேர் வாழை சாகுபடி செய்து 37 மில்லியன் டன் உற்பத்தி செய்கிறோம். ஆனால் 3 லட்சம் டன் மட்டுமே ஏற்றுமதி செய்கிறோம்.

    மேலும் ஒரு ஏக்கர் பூவன் வாழை தண்டிலிருந்து 20,000 லிட்டர் ஜூஸ் எடுக்கலாம். 200 மில்லி ஜூஸை ரூ.25 விற்கிறோம். 20,000 லிட்டரில் 25 லட்சம் வரை வருமானம் எடுக்க முடியும் இது 6 மாதம் வரை கெட்டுப்போகாது.

    மேலும் சிறுநீரக கல்லை குறைக்க இந்த ஜூஸ் உதவுகிறது. இது போல வாழை பூ, வாழை காய் என அனைத்தையும் மதிப்பு கூட்டலாம்" எனப் பேசினார்.

    அவரைத் தொடர்ந்து பேசிய முன்னோடி விவசாயி திருமதி. சியாமளா குணசேகரன், 'எந்தவொரு தொழில் செய்பவரும் தான் உற்பத்தி செய்வதை குறைந்த விலைக்கு விற்பதில்லை.

    ஆனால் விவாசயிகள் மட்டுமே தங்கள் கண் முன்பே தங்கள் உற்பத்தியை குறைந்த விலைக்கு விற்கும் சூழல் உள்ளது. இதிலிருந்து வெளி வர வேண்டும் என நினைத்தேன்.

    வாழை சார் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தொடங்கினேன். நம் தோட்டத்தில் பணம் கொட்டிக் கிடக்கிறது. பண்ணையில் கிடைக்கும் அருகம்புல் எடுத்து ஜூஸ் போட்டு கொடுத்தால் காசு, குப்பை மேனியை சோப் செய்து கொடுத்தால் காசு, ஒரு காலத்தில் என் தோட்டத்தில் தேங்காய் மரங்களை வெறும் ரூ.5000-த்திற்கு குத்தகை கொடுத்தேன். ஆனால் இப்போது ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் எடுத்து ஒரு கிலோ சோப் செய்கிறோம் அதை ரூ.800-க்கு கொடுக்கிறோம்.' எனப் பேசினார்.


    மேலும் வாழை சார் தொழில் முனைவோர்களான எஸ்.கே. பாபு, ராஜா, அஜிதன், ஜமின் பிரபு மற்றும் முன்னோடி விவசாயி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

    மேலும் இவர்களோடு திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகளான கற்பகம், சுரேஷ்குமார், ஜெயபாஸ்கரன் மற்றும் ஜி. பிரபு ஆகியோர் பங்கேற்று தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் சேவைகள், அரசு திட்டங்கள், வாழை ரகங்கள், அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், மதிப்புகூட்டப்பட்ட பொருட்களுக்கு வாழை சார் ஏற்றுமதி வாய்ப்புகள் உள்ளிட்டவற்றை குறித்து பேசினர்.

    இந்த கருத்தரங்கின் முக்கிய நிகழ்வுகளாக வாழையில் மதிப்பு கூட்டப்பட்ட 50-க்கும் மேற்பட்ட உணவு பொருட்கள் மற்றும் வாழை நாரால் ஆன 150-க்கும் மேற்பட்ட கைவினை பொருட்கள் விற்பனைக்கும் கண்காட்சிக்கும் வைக்கப்பட்டன.

    மேலும் இயற்கை விவசாயத்தின் மூலம் விளைவிக்கப்பட்ட சிறுதானிய திண்பண்டங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டது.


    வாழை விவசாயிகளுக்கும் வாழை சார் தொழில் முனைவோர்களுக்கும் 'சிறந்த வாழை விவசாயி' விருதுகள் வழங்கப்பட்டன.

    'ஈஷா மண் காப்போம்' இயக்கம் கடந்த 15 வருடங்களாக நம் மண்ணின் வளத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்து விவசாய பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது.

    இவ்வியக்கம் மூலம் இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 10,000 விவசாயிகள் இதுவரை இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்கள்.
    • 50-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற்றது.

    ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் "ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்" எனும் மாபெரும் கருத்தரங்கம் இன்று திண்டுக்கல் PSNA கல்லூரியில் நடைபெற்றது.

    இந்த கருத்தரங்கினை மண் காப்போம் இயக்கத்துடன் PSNA கல்லூரி மற்றும் HDFC வங்கி இணைந்து நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொது மக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    கருத்தரங்கில் மண் காப்போம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுவாமி ஸ்ரீமுகா கூறியதாவது:-

    ஈஷா மண் காப்போம் இயக்கம் தமிழகத்தை இயற்கை விவசாய மாநிலமாக மாற்றும் நோக்கத்தோடும் விவசாயிகளின் பொருளாதாரம் மற்றும் மண்வளத்தை மீட்டெடுக்கும் நோக்கத்தோடும் கடந்த 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகளிடமிருந்து விவசாயிகளுக்காக என்ற நோக்கத்தோடு, வெற்றி பெற்ற விவசாயிகளின் அனுபவ பகிர்வு விவசாயிகளையே சென்றடையும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முறையின் மூலம் புதிதாக களம் காணும் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.

    இதுவரை தமிழகம் முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு நேரடியாக இயற்கை விவசாய களப்பயிற்சி வழங்கியதோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து அவர்களுக்கு இயற்கை விவசாயம் சார்ந்த வழிகாட்டுதல்களை வாட்ஸ்-அப் குழுக்கள் மூலமாகவும் நேரடியாக அவர்களின் நிலங்களுக்கு சென்றும் வழங்கி வருகிறது. இதன் மூலம் 10,000 விவசாயிகள் இதுவரை இயற்கை விவசாயத்திற்கு திரும்பி வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறார்கள்.

    தற்போதைய சூழ்நிலையில், விவசாயிகள் ஒரே ஒரு பயிரை மட்டுமே நம்பி விவசாயம் செய்வதால், போதுமான விளைச்சலும், விளைச்சலுக்கு ஏற்ற விலையும் கிடைக்காமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இதற்கு தீர்வாக ஈஷா மண் காப்போம் இயக்கம் "ஒருங்கிணைந்த பண்ணையம் ஒவ்வொரு நாளும் வருமானம்" என்ற மாபெரும் கருத்தரங்கு நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பண்ணையம் மூலம் நல்ல வருமானம் பெற முடியும் என்பதை விவசாயிகளுக்கு உணர்த்தும் விதமாக ஆடு, மாடு, கோழி, வாத்து, மீன் ஆகியவைகளை உள்ளடக்கிய 'மாதிரி ஒருங்கிணைந்த பண்ணை' ஒன்றை நிகழ்ச்சி நடைபெறும் கல்லூரி வளாகத்திலேயே அமைக்கப்பட்டு இருந்தது.

    இதனுடன் விதைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விற்பனை மற்றும் கண்காட்சியும் நடைபெற்றது.

    திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கும்பகோணம், மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஸ்டாண்டத்தான் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
    உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ‘மண் காப்போம்’ இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    மண் வளப் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் மயிலாப்பூர் முதல் செங்கப்பட்டு வரை 55 கி.மீ விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது.

    கோவை மற்றும் சேலத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டமும், மதுரை, நாகர்கோவில், ஈரோடு, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் விழிப்புணர்வு வாக்கத்தான் (தொடர்நடை பயணம்) நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

    மேலும், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கும்பகோணம், மயிலாடுதுறை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஸ்டாண்டத்தான் நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

    இதுதவிர, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்ய உள்ளனர்.

    மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி சத்குரு தொடங்கியுள்ள ‘மண் காப்போம்’ இயக்கம் சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 74 நாடுகள் இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.

    இதையும் படியுங்கள்.. ரெய்டு பயத்தால் வாய் திறப்பதில்லை அதிமுக- பாரதிய ஜனதா மீண்டும் தாக்கு
    ×