என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wounded"

    • மார்க்கேயன் கோட்டை பகுதியை சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 40). இவர் தையல் தொழில் செய்து வருகிறார்.
    • பாபு, நடந்து சென்று கொண்டிருந்த வெங்கடேஷ் மீது மோதியதில் வெங்கடேஷ் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார்.

    பரமத்தி வேலூர்:

    தேனி மாவட்டம் சின்ன மனூர் அருகே மார்க்கேயன் கோட்டை பகுதியை சேர்ந்த வர் வெங்கடேஷ் (வயது 40). இவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவர் தற்பொழுது நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் பகுதி யில் தங்கி தையல் தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலை யில் இரவு வெங்கடேஷ் மணியனூர் பிரிவில் உள்ள டீக்கடைக்குச் சென்று அங்கு டீ குடித்துவிட்டு தான் தங்கி உள்ள அறைக்கு செல்வ தற்காக பரமத்தி வேலூர்-திருச்செங்கோடு சாலை, மணியனூர் செய்யாம்பா ளையம் பிரிவு சாலை அருகே ரோட்டின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அச்சாலையில் மோட்டார் சைக்கிள்ளில் அதிவேகமாக வந்த திருச்செங்கோடு பன்னீர் குத்தி பாளையம் பகுதியை சேர்ந்த தங்கமணி என்ப வரது மகன் பாபு, நடந்து சென்று கொண்டிருந்த வெங்கடேஷ் மீது மோதியதில் வெங்கடேஷ் நிலை தடுமாறி சாலையில் கீழே விழுந்தார். இதில் வெங்கடேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை திருச்செங்கோடு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து நல்லூர் போலீஸ் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    • மர்ம நபர் ஒருவர் கையில் கோடாரியுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார்.
    • ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

    நியூசிலாந்தில் ஆக்லாந்து நகரில் மூன்று சீன உணவகங்கள் உள்ளனர். இங்கு நேற்று இரவு ஏராளமானோர் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கையில் கோடாரியுடன் புகுந்து தாக்குதல் நடத்தினார். ஒவ்வொரு உணவகத்துக்குள் சென்று வாடிக்கையாளர்களை சரமாரியாக தாக்கினார். இதனால் ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.

    இந்த தாக்குதலில் 4 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்தக்கு விரைந்து வந்து தாக்குதல் நடத்திய நபரை பிடித்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் நடத்திய 24 வயது வாலிபரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மற்ற விவரங்களை தெரிவிக்க மறுத்து விட்டனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    கொளத்தூர் அருகே யானை தாக்கி ஆடு மேய்க்கும் தொழிலாளி படுகாயடைந்தார்.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சின்னதண்டா பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55). 

    இவர் ஆடு மேய்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார். நேற்று லக்கம்பட்டி கிராமத்தை கிராமத்தைச் சேர்ந்த ரங்க போ என் கார்டு அருகே வனப்பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். மாலையில் வீடு திரும்பி வரும்போது ஒரு ஆண் யானை ஒன்று பின்பக்கமாக வந்து தந்தத்தால் கோவிந்தனை முதுகில் குத்தியது. 

    இதனால் மிரண்டு போன அவர் சுதாரித்துக்கொண்டு வனப்பகுதியில் இருந்து யானையிடம் தப்பி கிராமத்துக்கு வந்தார். கிராம மக்கள் ஆம்புலன்சை வரவழைத்து உடனடியாக கோவிந்தனை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு அவருக்கு  முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து மேட்டூர் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×