என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுமான"

    • எங்கள் பகுதியில் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, பாதை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி ஆகியவற்றை ஊர் மக்களாகிய நாங்கள் போராடி வாங்கினோம்.
    • இந்த கற்களை தொடர்ந்து இரவில் சேலம் மாநகராட்சி 47-வது கோட்ட கவுன்சிலர் புனிதாவின் கணவர் சுதந்திரம் என்பவர் திருடி செல்கின்றார். இதை தட்டிக்கேட்டபோது ஊர் மக்களையும் திட்டி மிரட்டினர். எனவே அரசு கட்டுமான பொருளை திருடிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    சேலம்:

    சேலம் குகையில் உள்ள ஆண்டிப்பட்டி ஏரி கார்கில் நகரில் சுமார் 3000 பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த நவமணி மற்றும் ஊர் மக்கள் சேலம் டவுன் போலீஸ் உதவி கமிஷனரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

    அதில், எங்கள் பகுதியில் அத்தியாவசிய தேவைகளான குடியிருப்பு, பாதை வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை வசதி ஆகியவற்றை ஊர் மக்களாகிய நாங்கள் போராடி வாங்கினோம்.

    இந்த நிலையில் கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவாக தமிழ்நாடு அரசு குடிசை மாற்றுவாரியத்தின் எல்ஐ.ஜி அடுக்குமாடி பகுதிக்கு கார்கில் நகர் என பெயர் சூட்டியுள்ளோம். அந்த பெயரில் தான் மத்திய அரசின் தபால் தொடர்புகளும் உள்ளன.

    இது குறித்து, கார்கில் நகர் பகுதி என அறிமுகப்படுத்தும் 4 பெயர் பலகையும் நிறுவினோம். இதற்கு தேவையான ஜல்லி கற்கள் அந்த பகுதியில் புதிதாக கட்டப்படும் மருத்துவமனை அருகில் குடிசைமாற்று வாரியத்தின் ஒப்பந்ததாரர் குவித்து வைத்திருந்தார்.

    இந்த கற்களை தொடர்ந்து இரவில் சேலம் மாநகராட்சி 47-வது கோட்ட கவுன்சிலர் புனிதாவின் கணவர் சுதந்திரம் என்பவர் திருடி செல்கின்றார். இதற்கு உடந்தையாக கவுன்சிலர் புனிதா மற்றும் அதே பகுதியை சேர்ந்த வி.எம்.துரை, இவரது தங்கை தாமரைச்செல்வி ஆகியோர் இருக்கின்றனர். இதை தட்டிக்கேட்டபோது என்னையும், ஊர் மக்களையும் திட்டி மிரட்டினர். எனவே அரசு கட்டுமான பொருளை திருடிய அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    கவுன்சிலர் மீது வழக்கு

    இது தொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணை நடத்தி, சுதந்திரம், கவுன்சிலர் புனிதா, வி.எம்.துரை, தாமரைச்செல்வி உள்ளிட்டோர் மீது 294 (பி), 506(1), ஐ.பி.சி.379 போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2015-ம் ஆண்டு கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 8 ஆண்டுகளாகியும் கோவில் திருப்பணிகள் இன்னும் முடியவில்லை.
    • கோவில் புதுப்பிக்கும் பணிக்காக கோவில் வளாகத்தை சுற்றிலும் கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

    சேலம்:

    சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள குமரகிரி மலையில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது . இந்த கோவிலுக்கு சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து முருகனை தரிசனம் செய்து செல்வார்கள்.

    திருப்பணிகள்

    கடந்த 2015-ம் ஆண்டு கோவில் திருப்பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் 8 ஆண்டுகளாகியும் கோவில் திருப்பணிகள் இன்னும் முடியவில்லை. கோவில் புதுப்பிக்கும் பணிக்காக கோவில் வளாகத்தை சுற்றிலும் கட்டுமான பொருட்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால் கோவில் அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மலை மீதுள்ள குமரகிரி முருகனை தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.

    இதனால் கோவில் திருப்பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    சேலம் ஸ்ரீ ஆய்வு

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சேலம் ஸ்ரீ கோவிலில் நடைபெறும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இந்த கோவில் திருப்பணிகள் கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இன்னும் பணிகள் முடிய பல ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம் , கந்தசஷ்டி உள்ளிட்ட விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    அந்த நாட்களில் அம்மாபேட்டை, உடையாபட்டி, பொன்னம் மாப்பேட்டை உட்பட சேலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை காவடி எடுத்து வந்து மலை மீது ஏறி முருகனை தரிசனம் செய்வார்கள். திருப்பணிகள் காரணமாக திருவிழா காலங்களில் பக்தர்கள் வருகை குறைந்துவிட்டது.

    வருகிற ஏப்ரல் மாதம் பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது. அதற்குள் இந்த கோவில் திருப்பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும், கோவில் கும்பாபிஷேகம் எப்போது நடைபெறும் என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இதனால் பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகத்தை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கோவிலுக்கு செல்லும் மலை சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. அந்த சாலையையும் உடனே சீரமைக்க வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது
    • பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12 மற்றும் ஐ.டி.ஐ.படிப்பு இருக்கலாம்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு கட்டுமான கழகத்தால் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு 3 மாத கால திறன் பயிற்சி மற்றும் ஒரு வார கால திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. 3 மாத கால திறன் பயிற்சியை தமிழ்நாடு கட்டுமான கழகமானது எல் அன்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையத்துடன் இணைந்து நடத்த உள்ளது.

    பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்களின் கல்வி தகுதி 5-ம் வகுப்பு முதல் 12 மற்றும் ஐ.டி.ஐ.படிப்பு இருக்கலாம். வயது 18-ல் இருந்து 40 ஆக இருத்தல் வேண்டும். பயிற்சி வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, கம்பி வளைப்பவர், கார்பென்டர், பார்பென்டிங் மற்றும் ஸ்கப் போல்டிங் பயிற்சிக்கு கட்டணம் ஏதும் கிடையாது. உணவு, தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். பயிற்சி பெறுபவர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    இதேபோல் ஒரு வார கால பயிற்சி தையூரில் அமைய உள்ள தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நடைபெறும். பயிற்சி பெறும் கட்டுமான தொழிலாளர்கள், தமிழ் மொழியில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது 18-க்கு மேல் இருத்தல் வேண்டும். பயிற்சி பெறுபவர் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்து இருத்தல் வேண்டும். 3 வருடம் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.

    பயிற்சி வழங்கப்படும் தொழில்கள் கொத்தனார், பற்ற வைப்பவர், மின்சார பயிற்சி, குழாய் பொருத்துனர், மரவேலை, வளைப்பவர், கார்பென்டர், பார்பென்டிங் மற்றும் ஸ்கப் போல்டிங் மற்றும் பயிற்சியாளர்களுக்கு தினந்தோறும் வேலை இழப்பு ஏற்படுவதை ஈடு செய்ய தினந்தோறும் ரூ.800 வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமான கழகம், எல் அன்ட் டி கட்டுமான திறன் பயிற்சி நிலையம் இணைந்து மத்திய அரசின் கீழ் உள்ள தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

    இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் அவர் தம் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்புடைய நாகர்கோவில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் அல்லது மார்த்தாண்டம் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தை அணுக வேண்டும். இந்த பயிற்சி அடுத்த மாதம் 15 -ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக சேலம் ஜில்லா கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேட்டூர் வட்டாரத் தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார்.

    கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை போனசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். கட்டுமான நல வாரிய கூட்டம் முடிவின்படி ஓய்வூதியம் ரூ.2 ஆயிரத்திற்கான அரசாணை வெளியிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூயம் வழங்க வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மாவட்டம் தோறும் அரசு மணல் குவா ரிகளை அமைத்து மணல் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் சங்க நிர்வாகிகள் இளங்கோ, கருப்பண்ணன், மோகன், கோவிந்தராஜ், தேவி, செல்வ கணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    குமாரபாளையத்தில் தாலுகா அலுவலக கட்டுமான பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது.
    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தாலுகா அலுவலகம் நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. குறிப்பிட்ட தொகை வாடகையாக கொடுக்கப்பட்டு மக்கள் வரி பணம் வீணாகி வருகிறது. 

    மழைக்காலங்களில் மழைநீர் ஒழுகி கோப்புகள் வீணாகி வருகிறது என்று புகார் கூறப்பட்டது. இதைதொடர்ந்து புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு உள்ளது.   இந்த பணி முழுமையாக முடிவடையவில்லை. இதனால் தாலுகா அலுவலக பணிகளை மீண்டும் தொடங்க வலியுறுத்தப்பட்டது. 

    இதுபற்றி  தாசில்தார் தமிழரசி கூறுகையில், குமாரபாளையம் தாலுகா அலுவலகம் கட்டுமான பணி பொதுப்பணித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  நிதி பற்றாக்குறையால் கட்டுமான பணி நிறைவுபெறாமல் உள்ளதாக கூறப்படுகிறது. நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் பணிகள் தொடரும். பணிகள் முழுமையாக முடிந்த பின் தாலுகா அலுவலகத்தை எங்களிடம் ஒப்படைப்பார்கள் என்றார்.

    இந்நிலையில் புதிய தாலுகா அலுவலகம் விரைவில் செயல்பட உள்ளது பற்றி  தகவல் தெரிந்ததும், தாலுகா அலுவலக பகுதியில் ஜெராக்ஸ், டீ, பேக்கரி, கடைகள் மற்றும் இ-சேவை மையங்கள் தொடங்க பலர் மும்முரமாக உள்ளனர்.
    ×