என் மலர்
நீங்கள் தேடியது "மீது"
- நிலத் தகராறில் அடியாட்களுடன் வந்து ராஜகணபதியின் குடும்பத்தி னரை தாக்கியதாகவும், இதுகுறித்து இரும்பாலை போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
- அரசு ஊழியர்களான 2 பேர் உள்பட அதே பகுதியை சேர்ந்த 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் சித்தர்கோவில் அடுத்த பெத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராசமுத்து மகன் ராஜகணபதி (வயது 42). விசைத்தறி தொழிலாளி. இவர் கடந்த திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் முகாமிற்கு வந்து மனு கொடுத்தார்.
அதில், அதே பகுதியை சேர்ந்த துணை தாசில்தார் ஒருவரும், தொழில் மையத்தில் உதவியாளராக பணியாற்றும் ஒருவரும் சேர்ந்து நிலத் தகராறில் அடியாட்களுடன் வந்து ராஜகணபதியின் குடும்பத்தி னரை தாக்கியதாகவும், இதுகுறித்து இரும்பாலை போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து ராஜகணபதி கொடுத்த மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் போலீசாரிடம் அறிவுறுத்தினார். இதன் எதிரொலியாக தற்போது இரும்பாலை போலீசார், அரசு ஊழியர்களான காந்தி தேசாய், சிங்காரவேலு ஆகிய 2 பேர் உள்பட அதே பகுதியை சேர்ந்த முருகன், வேல்முருகன், கந்தசாமி, பச்சியப்பன், கார்த்திகேயன், வெள்ளையதேவன் ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தாரமங்கலம் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் தினசரி மார்க்கெட்டில் வாழை இலை கடை நடத்தி வருபவர் மீது தாக்குதல் நடத்தினர்.
- புகாரின் பேரில் குத்தகைதாரர்கள் ஆனந்தன், சுரேஷ், காவேரி ஆகியோர் மீதும், ஆனந்தன் கொடுத்த புகாரில் செங்கு கவுண்டர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி பகுதியில் இயங்கி வரும் தினசரி மார்க்கெட்டில் வாழை இலை கடை நடத்தி வருபவர் மல்லியக்குட்டை பகுதியை சேர்ந்தவர் செங்குகவுண்டர் என்கிற சாமியார் (வயது 72). இவர் கடந்த 5 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் கடை போடாமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும்கடை போட்ட செங்கு கவுண்டரிடம் குத்தகை தாரர்கள் விடு முறை நாட்களுக்கும் சேர்த்து சுங்க கட்டணம் கட்ட வேண்டும் என்று கூறி தகராறில் ஈடுபட்டு அவரை அடித்து உதைத்ததாக தெரிகிறது. இதுபற்றி தாரமங்கலம் போலீஸ் நிலை யத்தில் செங்கு கவுண்டர் கொடுத்த புகாரின் பேரில் குத்தகைதாரர்கள் ஆனந்தன், சுரேஷ், காவேரி ஆகியோர் மீதும், ஆனந்தன் கொடுத்த புகாரில் செங்கு கவுண்டர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி அருகே கொசவம்பாளையம் பகுதியில் நிலத்தகராறில் 3 பேர் மீது தாக்குதல்.
- 3பேரும் திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இது குறித்து ஆறுமுகம் நல்லூர் போலீசில் புகார் செய்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பெருங்குறிச்சி அருகே கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம்( வயது 56). விவசாயி.இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி பழனிவேல் (70). என்பவருக்கும் நிலப்பி ரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகத்தின் மைத்துனர் இளங்கோ என்பவர் ஆறுமுகத்துக்கு சொந்தமான பாப்பன் தோட்டத்தில் டிராக்டரில் உழவு செய்து கொண்டி ருந்தார். அப்போது ஆறுமுகம் அவரது மகன் சங்கீத்குமார் ஆகியோர் டிராக்டர் களப்பையில் சிக்கிய புற்களை அப்புறப்படுத்தி கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அங்கு வந்த பழனிவேல், மருமகள் சங்கீதா, இளங்கோ டிராக்ட ரில் உழவு செய்வதை தனது செல்போனில் படம் பிடித்து அவரது கணவருக்கு அனுப்பி உள்ளார். அதை பார்த்த மாமனார் பழனிவேல், கணவர் செந்தில் ராஜா, மாமியார் பாப்பாத்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு கிடந்த புற்களை எடுத்து ஆறுமுகத்துக்கு சொந்தமான நிலத்துக்குள் வீசி உள்ளார்.
அப்போது இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சங்கீத்கு மாரின் சட்டையை பிடித்து அவர் அணிந்திருந்த 2 1/2பவுன் செயினை செந்தில் ராஜா பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. அதை தட்டி கேட்ட ஆறுமுகத்தை கையில் வைத்திருந்த அரிவாளால் இடது கையை வெட்டியுள்ளார்.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அதைப் பார்த்து ஓடி வந்து இளங்கோ தடுத்தபோது அவரும் தாக்கப்பட்டார். இதையடுத்து காயம் அடைந்த 3பேரும் திருச்செங்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற னர். இது குறித்து ஆறுமுகம் நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பழனிவேல், அவரது
மகன் செந்தில் ராஜா, மருமகள்
சங்கீதா ஆகியோரை தீவிர மாக தேடி வருகின்றனர்.
- விவசாயியான இவர் நேற்று தன் தோட்டத்தில் வேலை செய்ய நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு முட்புதூரில் பதுங்கி இருந்த கரடி, திடீரென அவர் மீது பாய்ந்து அவரது கை, முதுகு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் கடித்து குதறியது.
- அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு ஓலையார் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 45). விவசாயியான இவர் நேற்று தன் தோட்டத்தில் வேலை செய்ய நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு முட்புதூரில் பதுங்கி இருந்த கரடி, திடீரென ராஜேந்திரன் மீது பாய்ந்து அவரது கை, முதுகு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் கடித்து குதறியது.
இதில் ராஜேந்திரன் படுகாயம் அடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டினர்.
பின்னர் ராஜேந்திரனை மீட்டு செம்மேடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வன அலுவலர் சுப்பராயன் தலைமையிலான வனத்துறையினர்,
கரடியின் கால் தடத்தை வைத்து ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
- ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் போலீசார், பிரபல ரவுடி தீனா என்கிற தீன தயாளனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சம்பவத்தன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிர் அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் ராஜசேகர் (வயது 34) என்பவர், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது, போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த ரவுடி தீனதயாளன், எப்படி எனக்கு எதிராக நீ சாட்சி சொல்லலாம்? என ராஜசேகரிடம் கேட்டு மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியில் வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கினர்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 23). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் , மதன் (26), ஷாஜகான் (22), முருகன் (23), ஏழுமலை (21), தமிழரசன் (20) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வழிப்பறி திருடர்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் அண்ணன், தம்பி மீது 4 பேர் சரமாரியாக தாக்கினர்.
- போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த். இவர் நேற்று இரவு வீட்டுக்கு செல்வதற்காக புட்டாநாயக்க தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் ஆனந்த் வழி பாதையை விட்டு ஓரமாக நின்று பேசுங்கள் என கூறினார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த 4 பேர் ஆனந்தை சரமாரியாக தாக்கினர்.
இதை அறிந்த ஆனந்தின் சகோதரர்கள் கார்த்திக் மற்றும் முரளி இருவரும் வந்தனர். எதிர் தரப்பை சேர்ந்த 4 வாலிபர்களின் நண்பர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் கார்த்திக் முரளியை பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.
பலத்த காயம் அடைந்த கார்த்தி மற்றும் முரளி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே வாலிபர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு நிலவியது. அந்த காட்சிகளை வைத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
- நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லப்பம்பட்டி அருகே சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது.
- இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு மது போதையில் வந்த மின்னாம்பள்ளியை சேர்ந்த காலி பெட்ரோல் கேனில் டீசலை நிரப்புமாறு ஊழியர்களிடம் கூறினார்.
நாமக்கல்:
நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் செல்லப்பம்பட்டி அருகே சுரேஷ் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு மேலாளராக பாஸ்கர் என்பவரும், ஊழியர்களாக களங்கானியை சேர்ந்த ராம்குமார் (வயது 22), புதன் சந்தையை சேர்ந்த கவின் (25) ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு மது போதையில் வந்த மின்னாம்பள்ளியை சேர்ந்த சக்திவேல் (30) என்பவ,ர் காலி பெட்ரோல் கேனில் டீசலை நிரப்புமாறு ஊழியர்களிடம் கூறினார்.
ஊழியர்கள் அந்த கேனில் டீசலை நிரப்பினர். அப்போது கேன் நிரம்பியதால் வேறு கேனை எடுத்து வருமாறு சக்திவேலிடம் ஊழியர்கள் தெரிவித்தனர். அதை ஏற்க மறுத்த சக்திவேல், கேனில் இருந்த டீசலை அகற்றிவிட்டு மறுபடியும் புதிதாக டீசல் நிரப்புமாறு கூறினார்.
இதனால் அவர்களுக்கும் சக்திவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை அடுத்து சக்திவேல் தனது நண்பர்களை கைபேசி மூலம் தொடர்பு கொண்டு அழைத்தார். உடனே அங்கு வந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும், ஊழியர்களான ராம்குமார், கவின், பாஸ்கர் ஆகியோரை கடுமையாக தாக்கினர். பின்னர் அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இதில் காயமடைந்த ஊழியர்கள் நாமக்கல்
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டுள்ளனர். இது குறித்து நல்லிபாளையம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சக்திவேல் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோதூர் அருகே மாலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நிலப் பிரச்சினை சம்பந்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- இது குறித்து செல்வி நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ரங்கசாமி, முத்துசாமி ,கண்ணையன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோதூர் அருகே மாலிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பொம்மசாமி ( வயது 48 ). இவரது மனைவி செல்வி (43). இவர்களுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் ரங்கசாமி, முத்துசாமி, கண்ணையன் ஆகியோருக்கும் நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது .இந்நிலையில் செல்வி இருந்த பகுதிக்கு வந்த ரங்கசாமி, முத்துசாமி, கண்ணையன் ஆகியோர் செல்வியிடம் நிலப் பிரச்சினை சம்பந்தமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதில் இரு பிரிவினருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது .இதனால் ஆத்திரம் அடைந்த ரங்கசாமி, முத்துசாமி, கண்ணையன் ஆகியோர் சேர்ந்து செல்வியை தாக்கியுள்ளனர். இதில் காயம் அடைந்த செல்வி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து செல்வி நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ரங்கசாமி, முத்துசாமி ,கண்ணையன் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கடந்த 2-ந்தேதி அங்கு வந்த சத்யநாதன் உள்ளிட்ட சிலர், வாகுவாதம் செய்து, ராஜசேகரை தாக்கினர்.
- அவரை தாக்கிய, சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் இந்த சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே பெரியேரியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 22). இவர் தலைவாசல் பஸ் நிலையத்தில் உள்ள தட்டச்சு பயிற்சி நிலையத்தல் தட்டச்சு பயிற்சி பெறுகிறார். கடந்த 2-ந்தேதி அங்கு வந்த சத்யநாதன் உள்ளிட்ட சிலர், வாகுவாதம் செய்து, ராஜசேகரை தாக்கினர். காயமடைந்த அவர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கிய, சி.சி.டி.வி வீடியோ காட்சிகள் தற்போது வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால் இந்த சம்பவம் குறித்து தலைவாசல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், ராஜசேகருக்கும் சத்யநாதனுக்கும் இடையே கபடி தொடர்பாக முன்விரோதம் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே ராஜசேகர் தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.
- ரெயில் நெய்க்கா ரப்பட்டி அருகே சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
- மர்ம நபர்கள் ெரயிலின் மீது கற்களை வீசினர்.
சேலம்:
கன்னியாகுமரியில் இருந்து புனேவுக்கு செல்லும் கன்னியாகுமரி - புனே எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16382) சேலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நெய்க்கா ரப்பட்டி அருகே சேலம் நோக்கி நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வந்து கொண்டி ருந்தது.
அப்போது மர்ம நபர்கள் ெரயிலின் மீது கற்களை வீசினர். இதில் ரெயிலின் ஏ1 2-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியின் கண்ணாடி உடைந்தது. இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் முறையிட்டனர்.
அவர், சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அவர்கள், சேலம் ரெயில்வே கோட்ட போலீசாருக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாது காப்பு படையினர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்வீசிய மர்மந பர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.கல்வீச்சு நடந்த பகுதியில் போலீசார் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
- கடந்த 15-ம் தேதி, கன்னங்குறிச்சி அய்யந்திரு மாளிகையில் உள்ள சத்யாவின் தாய் வீட்டுக்கு வந்தனர்.
- கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சக்திவேல் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
ஆத்தூர் பைத்தூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி சத்யா (வயது 30), கர்ப்பிணியான இவரும், பன்னீர்செல்வமும் கடந்த 15-ம் தேதி, கன்னங்குறிச்சி அய்யந்திரு மாளிகையில் உள்ள சத்யாவின் தாய் வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் வெளியே பன்னீர்செல்வம் நீண்ட நேரம் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசுவது, தன்னை குறித்து தான் என நினைத்த பக்கத்து வீட்டை சேர்ந்த சக்திவேல், அவரது மனைவி சித்ரா, மகள் கோகிலா, மருமகன் சிரஞ்சீவி ஆகியோர் தட்டிக் கேட்டுள்ளனர். மேலும் அவரை தாக்கியதாகவும் தெரிகிறது. அப்போது அதனை தடுக்க வந்த சத்யாவையும் தாக்கி ஆபாசமாக பேசியுள்ளனர்.
இதுகுறித்து கன்னங்குறிச்சி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சக்திவேல் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.