என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Citizenship Amendment Act"

    • என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.
    • குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.

    மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அக்கூட்டத்தில் பேசிய அவர், "தேசிய குடிமக்கள் பதிவேட்டை நான் அனுமதிக்க மாட்டேன். அசாமில் 19 லட்சம் இந்து வங்காளிகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

    என் பெற்றோரின் பிறந்தநாள் கூட எனக்கு தெரியாது. அப்படியிருக்க என் பெற்றோரின் சான்றிதழ்களை அவர்கள் கேட்டால் என்னால் எப்படி அவற்றை கொடுக்க முடியும்.

    குடியுரிமை திருத்த சட்டத்தில் நீங்கள் விண்ணப்பிக்க வில்லை என்றால் நீங்கள் வெளிநாட்டினராக மாறி விடுகிறீர்கள்.

    50 ஆண்டுகளுக்கு முந்தைய சான்றிதழை அவர்கள் கொண்டு வர சொன்னால், முதலில் பாஜக வேட்பாளர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தில் சான்றிதழ்கள் கொடுத்து குடியுரிமைக்கு விண்ணப்பிக்க சொல்லுங்கள்.

    பாஜகவினரே குடியுரிமை திருத்த சட்டத்தில் விண்ணப்பிக்கவில்லை என்றால் நாம் ஏன் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய இரண்டையும் நான் அனுமதிக்க மாட்டேன்" என்று மம்தா தெரிவித்தார். 

    • மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
    • நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ௨௦௧௯ ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, குடியுரிமை சட்டத்தில், மேற்கு வங்கம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பகுதியில் உள்ள முஸ்லீம் அல்லாத சமூகத்தினருக்கு முக்கியமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள், கிறித்தவர்களுக்கு விரைந்து குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யபட்டது.

    இஸ்லாமியர்களை பாதிக்கும் வகையில் பாரபட்சமாக இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது. அனால் பாஜக இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயந்த இலங்கைத் தமிழர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்நிலையில் சிஏஏ மூலம் நாட்டில் முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியுரிமைக்கு விண்ணப்பித்த டெல்லியைச் சேர்ந்த 14 புலம்பெயர்ந்வர்களிடம் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா அவர்களுக்கான குடியுரிமை ஆவணங்களை வழங்கி அதன் நன்மைகள் குறித்து பேசினார்.இதில் பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • மோடி மற்றும் அவரது அரசாங்கத்தை சாவந்த் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
    • குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை அவர் கடுமையாக விமர்சித்தார்.

    இந்திய-அமெரிக்க அரசியல்வாதி ஷாமா சாவந்த் விசா வழங்க மறுத்த மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

    பெங்களூருவில் உள்ள தனது நோய்வாய்ப்பட்ட 82 வயதான தாயாரைப் பார்க்க 3 ஆவது முறையாக இந்திய விசா மறுக்கப்படுவதாக சாவந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது மோடி அரசாங்கத்தின் 'நிராகரிப்பு பட்டியலில்' [ரிஜெக்ட் லிஸ்ட்டில்] தான் இருப்பதாக தனக்குச் சொல்லப்பட்டதாக சாவந்த் கூறுகிறார்.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிறந்த சாவந்த் அமெரிக்க அரசியலில், குறிப்பாக சியாட்டில் நகர அரசியலில் பல ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

    மும்பை பல்கலைக்கழகத்தில் பயின்று 1994 ஆம் ஆண்டு கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். பட்டப்படிப்புக்குப் பிறகு, சாவந்த் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். 2003 ஆம் ஆண்டு வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

    2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வரை பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

     அமெரிக்காவில் சோசலிஸ்ட் ஆல்டர்நேட்டிவ் என்ற இடதுசாரி அரசியல் கட்சியில் சேர்ந்தார். அவர் 2014 முதல் 2024 வரை சியாட்டில் நகர சபையில் பணியாற்றினார்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தை சாவந்த் கடுமையாக விமர்சித்து வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை அவர் கடுமையாக விமர்சித்தார்.

    இந்நிலையில் தனது பெயரை மோடி அரசின் ரிஜெக்ட் லிஸ்டில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றும் நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்கவிடாமல் தடுக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இதை கண்டித்து சியாட்டிலில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சாவந்த் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது. 

    கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பின் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா தெரிவித்திருந்தார்.
    புது தில்லி

    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளில்  மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு உள்ளான, சிறுபான்மையினருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

    அண்டை நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி மதத்தினர், கிறிஸ்தவர்கள் ஆகியோர், உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க இந்த சட்டம் வழி வகை செய்கிறது. இஸ்லாமியர்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்பதால் எதிர்க்கட்சிகள் இந்த சட்டத்தை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

    கடந்த மாதம், மேற்கு வங்கத்தில் உள்ள சிலிகுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய  மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா,  கொரோனா தொற்று  முடிவுக்கு வந்த பின்  குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என்றார்.  

    இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்த சட்டத்தை தனது அரசு அமல்படுத்தாது என்று உறுதிபட கூறினார்.  

    குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தனது அரசு தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது, அது தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  குடியுரிமை திருத்த சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என்றும், மதத்தின் அடிப்படையில் குடியுரிமையை நிர்ணயிக்க இங்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

    அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த பிரச்சினையில் கேரள அரசு தனது நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்றும் பினராயி விஜயன் தெரிவித்தார்.


    ×