search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தர்மேந்திர பிரதான்"

    இந்தி, ஆங்கிலத்தை விட எந்த மொழியும் குறைந்ததல்ல என்றும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
    காந்திநகர்:

    குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற இரண்டு நாள் தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் மத்திய கல்வி மந்திரி  தர்மேந்திர பிரதான் பேசியதாவது:

    மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள், எந்த மொழியும் தாழ்ந்ததல்ல.  

    குஜராத்தி தமிழ் பெங்காலி அல்லது மராத்தி என அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள். ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் இருப்பதால் எந்த மொழியும் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை விட தாழ்ந்ததல்ல.  அதனால்தான் புதிய தேசிய கல்வி கொள்கையில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

    சில மாநிலங்கள் புதிய தேசிய கல்வி கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் மத்திய அரசுக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஏனென்றால் நீங்கள் நினைப்பது மக்களின் நலனுக்காக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும், அதையும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம்.  பாடத்திட்டக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் அனைத்து மாநிலங்களும் பங்கேற்க வேண்டும்.

    காலனி ஆதிக்கத்தில் இருந்து நமது கல்வியை விடுவிக்க வேண்டும். 21ஆம் நூற்றாண்டில் அறிவு சார்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும், அதற்கு பள்ளிக் கல்வியே அடித்தளமாக அமையும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.



    ×