என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father-son"

    • மாணிக்க வாசகம் டீக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
    • கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாபநாச பெருமாள் இறந்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குலசேகரப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் பாபநாச பெருமாள். இவரது மகன் மாணிக்க வாசகம் (வயது 21). பாலிடெக்னிக் படித்து முடித்துவிட்டு பாவூர் சத்திரத்தில் உள்ள டீக்கடை யில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அவரது தந்தை பாபநாச பெருமாள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இறந்ததால் மாணிக்கவாசகம் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மனவிரக்தியில் இருந்து வந்த மாணிக்க வாசகம் நேற்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • முத்தையா 3-வது மனைவி தனலெட்சுமியுடன் வசித்து வருகிறார்.
    • தகராறின்போது அல்லாத்தான், முத்தையாவை சரமாரியாக தாக்கினார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி முத்தையா (வயது 64). இவரது முதல் மனைவி பூலம்மாளின் மகன் அல்லாத்தான். முத்தையாவின் முதல் இரு மனைவிகள் இறந்து விட்டதால், 3-வது மனைவி தனலெட்சுமியுடன் வசித்து வருகிறார். தனக்கு சொந்தமான 2 வீடுகளில் ஒரு வீட்டை அல்லாத்தானுக்கு எழுதி வைத்துள்ளார். ஆனால் மற்றொரு வீட்டையும் தனக்கு எழுதி தருமாறு அல்லாத்தான் தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அல்லாத்தான், தனது தந்தை முத்தையாவை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்லாத்தானை இன்று கைது செய்தனர். 

    • 2 மர்மநபர்கள் மணமகன் அறைக்குள் புகுந்து நகையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற காட்சிகள் வெளியானது.
    • போலீசார் விசாரணை நடத்தி நகை திருடிய தந்தை-மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் ரவுண்டுரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் மதுரையை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளர் மகனுக்கும், திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 10-ந்தேதி திருமணம் நடந்தது. அப்போது மணமகன் அறையில் இருந்த 16 பவுன் நகை திருடுபோனது.

    திருமண வீட்டில் கலந்து கொள்வது போல வந்த மர்மநபர்கள் மணமகன் அறைக்குள் புகுந்து நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நகர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி பாஸ்கரன் உத்தரவின்பேரில் டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மனோகர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ்எட்வர்டு, ஏட்டுகள் ராதாகிருஷ்ணன், முகமதுஅலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் இணைந்து விசாரணையை தொடங்கினர்.

    திருமண வீட்டில் நிகழ்ச்சிகளை ஒலிப்பதிவு செய்த கேமராமேனிடம் இருந்த வீடியோக்களை போலீசார் பார்வையிட்டனர். இதில் இருவீட்டாருக்கும் சம்பந்தம் இல்லாத நபர்கள் யாரேனும் உள்ளனரா என்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது 2 பேர் மணமகன் அறைக்குள் புகுந்து நகையை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற காட்சிகள் வெளியானது.

    அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து போலீசார் விசாரித்தனர். நகை திருட்டில் ஈடுபட்டது கரூர் மாவட்டம் நரசிம்மபுரத்தை சேர்ந்த பாலமுருகன்(48) மற்றும் அவரது 16 வயது மகன் என தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து 16 பவுன் நகை மற்றும் குற்றச்சம்பவத்திற்கு பயன்படுத்திய பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    வெவ்வேறு விபத்துக்களில் தந்தை-மகன்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
    சிவகங்கை

    சிவகங்கை நகர் இந்திரா நகரைச் சேர்ந்தவர் குருசாமி மகன் பழனிவேல். இவர் தனது இரு மகன்களுடன் இருசக்கர வாகனத்தில் வெளியே புறப்பட்டார். அப்போது மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் ைசக்கிள் மீது மோதியது. 

    இதில் இரு சிறுவர்கள் உட்பட 3 பேர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூரை சேர்ந்தவர் பூமி.  லாரி டிரைவரான இவர் இளையான்குடி பகுதியில் லாரியை ஓட்டிச்சென்ற போது எதிரே மானகிரியை சேர்ந்த ரபீல் என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக மோதியது. 

    இதில் பூமி உட்பட அவரது லாரியில் பயணம் செய்த 3 பேர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×