என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டம்"

    • நாமக்கல் மாவட்டத்தி லுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
    • பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தி லுள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந் தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று காலை 11.00 மணி அளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல்.

    கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கவுரவித்தல். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞர் வீடு வழங்கும் திட்ட கணக்கெடுப்பு,

    ஜல் ஜீவன் இயக்கம், மக்கள் திட்டமிடல் இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இணையவழி வீட்டுவரி/சொத்துவரி செலுத்துதல், மகளிர் சுய உதவிக்குழு உருவாக்குதல்,

    2021 -22 மற்றும் 2022 - 23 ஆகிய ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் பண்ணை மற்றும் பண்ணை சாரா திட்ட இனங்களின் மேற்கொள்ளப்பட்ட நிதி செலவின அறிக்கை, பயனாளிகள் விவரம் மற்றும் நிதி பயன்பாடு குறித்து அறிக்கை குறித்து விவாதிக்கப்படுகிறது என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்து உள்ளார்.

    • பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடந்தது
    • ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே கல்லாலங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள் ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமை ஆசிரியர் விஜயகுமாரி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் கவிதா மற்றும் கருத்தாளர் கோமதி ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளியின் அடிப்படை தேவைகள் மற்றும் பள்ளிசெல்லா குழந்தைகள் பள்ளியில் சேர்ப்பது பள்ளிக்கு தேவையான கட்டிட வசதிகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர், கருத்தாளர் கோமதி, தலைமை ஆசிரியர் விஜயகுமாரி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • குடியிருப்போர் நலச்சங்கம் மாதாந்திர கூட்டம் நடந்தது
    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட நரிமேடு அடுக்குமாடி குடியிருப்போர் நலச்சங்கம்-3 மாதாந்திர சாதாரண கூட்டம் தலைவர் மனோகர் தலைமையில் நடைப்பெற்றது.

    செயலாளர் பிரேம்குமார் முன்னிலை வகித்தார். சங்கத்தில் நடைப்பெற்ற நிகழ்வுகளை பொருளாளர் உசேன் உறுப்பினர்களிடத்தே எடுத்துரைத்தார். சமுத்துவபுரத்திலிருந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு வரும் பாதையில் உள்ள பாலத்தின் இணைப்பு பகுதிகள் மழையின் காரணமாக அரித்து சென்றுவிட்டது. அதனால் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அதை உடனடியாக மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் கவனத்தில் கொண்டு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுப்பது.

    குப்பைகளை கொட்ட நகராட்சி நிர்வாகம் சார்பாக குப்பை தொட்டி வைக்க நகர்மன்ற தலைவர் திலகவதிசெந்தில், ஆணையர் நாகராஜன் ஆகியோருக்கு அனைத்து உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கோரிக்கை மனு கொடுப்பது.

    சங்க நடவடிக்கைகளை தொடர்ந்து வங்கி மூலம் செயல்படுத்த வங்கியில் சேமிப்பு கணக்கு துவக்க நடவடிக்கை எடுப்பது, மாத பராமரிப்பு சந்தாவை 10ம் தேதிக்குள் செலுத்த உறுப்பினர்களை கேட்டுக் கொள்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கூட்டத்தில் துணைத்தலைவர் மௌலி, துணைச் செயலாளர் அபிநயா, பிளாக் இன்சார்ஜ்கள் வனிதா, வருண், கருணாகரன், மீனாட்சி மற்றும் உறுப்பினர்கள் புவனாபாண்டியன், ஆப்தாபேகம், ரவி, சந்தோஷ், சித்ரா, பவானி, ஜெயா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

    • அகில இந்திய அஞ்சல் ஓய்வூதியர் சங்க கூட்டம் நடைபெற்றது.
    • கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது

    கரூர்

    கரூரில் அகில இந்திய அஞ்சல் ஆர்.எம்.எஸ். ஓய்வூதியர் சங்கத்தின் கரூர் மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். ஜூன் 30-ல் பணி ஓய்வு பெற்றோருக்கு நேஷனல் இன்கிரிமெண்ட் வழங்கி பென்ஷன் மறு நிர்ணயம் செய்ய வேண்டும். 1.1.2006-ம் ஆண்டு முன் பணி ஓய்வு பெற்றோருக்கு மேம்படுத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் ஓய்வூதியம் மறு நிர்ணயம் செய்ய வேண்டும், புதிய ஓய்வூதியம் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில உதவி செயலாளர் செல்வன், மாநில பொது செயலாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது
    • அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பங்கேற்பு

    அரியலூர்

    அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது, மாநில சட்ட திருத்த குழு உறுப்பினர் சுபாசந்திரசேகர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராசன், துணை அமைப்பாளர் சசிகுமார், மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் சந்திரசேகர், லதா பாலு, கணேசன், ஒன்றிய செயலாளர் அரியலூர் அன்பழகன், அறிவழகன்,

    திருமானூர் கென்னடி, அசோக சக்கரவர்த்தி, செந்துறை செல்வராஜ், எழில்மாறன், ஜெயங்கொண்டம் தனசேகரன், மணிமாறன், ஆண்டிமடம் முருகன், கலியபெருமாள், தா.பழுர் கண்ணன், சௌந்தர்ராஜ், நகரச் செயலாளர் அரியலூர் முருகேசன், ஜெயங்கொண்டம் கருணாநிதி, உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ். எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு பேசியதாவது :

    ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. பல லட்சம் கோடி கடன் சுமை விட்டு சென்றது. இப்படி இக்காட்டான நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறமையாக ஆட்சி புரிந்து வருகிறார். மக்களின் பிரச்னைகளை கேட்டு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணியாளர்களுக்கு தீபாவளியையொட்டி மனநிறைவான போனஸ் கொடுக்கப்பட்டது. அதனால், போக்குவரத்துத்துறையில் பணி செய்யும் அனைவரும் மனமகிழ்ச்சி அடைந்தனர்.

    இதன்மூலம் தீபாவளி பண்டிகையின் போது மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர பேருந்து வசதிகள் சிறப்பாக அமைந்தது. தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்காத ஒரு திட்டமான புதுமைப் பெண் திட்டத்தால் இனிவரும் காலங்களில் 90 சதவீத பெண் குழந்தைகள் உயர்கல்வியினை பெறுவர்.

    அரியலூருக்கு தமிழக முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்க வருவதாக இருந்தது அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் ஓய்வு எடுத்து வருகிறார் அதனால் 5ம் தேதி நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது பின்னர் தேதி அறிவிக்கப்படும் எப்போது வருகை தந்தாலும் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    • பள்ளி மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம் நடந்தது
    • செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் (பொ) பொன்னுதுரை தலைமை வகித்தார்.பள்ளி மேலாண்மை குழு தலைவி கவிதா, தொழிற்கல்வி ஆசிரியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நிதிதிரட்டி கட்டிய கட்டடம் இடியும் தருவாயில் உள்ளதால் அந்த கட்டிடத்தை அகற்றுதல், ஆஸ்பெஸ்டாஸ் கட்டிடத்தை புனரமைப்பு செய்து பயன்பாட்டுக் கொண்டு வருதல், சீரமைப்பு செய்யப்பட்ட ஓட்டு கட்டிடத்தை மாணவர்கள் பயன்பாடு கொண்டு வருதல், பள்ளி கட்டிட இட அமைப்புக்கான ரூ.9 லட்சம் நிதியும், பள்ளி மாணவர்களின் குடிநீர் திட்டத்திற்கான ரூ 3 லட்சம் நிதியும் இந்தப் பள்ளிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.இந்த நிதியை முறையான வகையில் பயன்படுத்தி திட்டங்களை நிறைவேற்றிட வேண்டுமெனவும், இன்று நடைபெறும் சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டுமென இக்கூட்டத்தில் பேசினார்.

    தொடர்ந்து பள்ளியில் செயல்படும் நான் முதல்வன் திட்டம் பற்றி நீலாவதி ஆசிரியர் விரிவாக பேசினார். முடிவில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. முன்னதாக உதவி தலைமை ஆசிரியர் லதா வரவேற்றார். நிறைவாக ஆசிரியை பாஸ்கர் நன்றி கூறினார்.

    • பொன்னமராவதி பேரூராட்சியில் பகுதி சபைக் கூட்டம் நடந்தது
    • அமைச்சர் எஸ். ரகுபதி பங்கேற்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பேரூராட்சி, 10 -வது வார்டில், உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற பகுதி சபா கூட்டத்தில் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி கலந்து கொண்டு சிறப்பித்தார்.

    இக்கூட்டத்தில் பொன்னமராவதி பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தார். ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

    இக்கூட்டத்தில், பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல். பேரூராட்சி பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள். கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் . வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை. தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளின் முன்னேற்ற விபரங்களை சபாக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறுதல். இதர பொருட்கள் ஏதேனும் இருப்பின் சபாவின் ஒப்புதலுக்கு கொண்டு வருதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    இக்கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலர; (நெடுஞ்சாலை நிலமெடுப்பு) பெ.வே.சரவணன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி, பொன்னமராவதி பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், பொன்னமராவதி ஒன்றியக்குழுத் தலைவர் சுதா அடைக்கலமணி, பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ.கணேசன், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கூடச்சேரியில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
    • இணைய வழி வீட்டு வரி மற்றும் சொத்து வரி செலுத்துதல். மகளிர் சுய உதவி குழு உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் கூடச்சேரியில் உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். ஊராட்சி துணைத் தலைவர் சத்யா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் உதயகுமார் வரவேற்றார்.

    கூட்டத்தில், உள்ளாட்சி தின சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தல். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவ டிக்கை எடுத்தல். இணைய வழி வீட்டு வரி மற்றும் சொத்து வரி செலுத்துதல். மகளிர் சுய உதவி குழு உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் ஊராட்சி உறுப்பினர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், சுகாதாரத் துறையினர், மருத்துவத் துறையினர், கிராம நிர்வாக அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், வேளாண்மை துறையினர், ஊர் பொது மக்கள் உள்ளிட்ட ஏராள மான கலந்து கொண்டனர்.

    • ஏர் உழவர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது
    • நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் கூட்ட அரங்கில் ஏர் உழவர் சங்க தலைவர் தமிழர் நீதி கட்சி தலைவர் சுபா இளவரசன் தலைமையில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அரியலூர் மாவட்ட செயலாளர் பாக்யராஜ் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் மாநில மகளிர் அணி தலைவி கவியரசி இளவரசன், மாநில துணைத்தலைவர் தங்கத்தமிழன், ஆசைத்தம்பி மாநில ஏர் உழவர் சங்க துணை தலைவர், தலைமை நிலைய செயலாளர் மதியழகன் கவிஞர். அறிவு மழை, புலவர் அரங்கநாடன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் மருத்துவ கல்வியை தமிழில் பயில திட்டமிட்டுள்ள தமிழக அரசுக்கு தமிழ் மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், தமிழக கல்வி முறையாக தமிழில் பயன்படுத்தப்பட வேண்டும் எனவும், மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மொழிகளை கற்பதை அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசை கூட்டத்தின் வாயிலாக கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

    ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தமிழ் கல்வியை கட்டாயமாகவும் அரசு செயல்பாட்டின் மொழியாக இரு மொழி தவிர்த்து தமிழ் தாய் மொழியை அரசு முறையாக அறிவிக்க வேண்டும் எனவும், தமிழக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    • பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது
    • 12-ந் தேதி நடக்கிறது

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் பொது வினியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 12-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் உள்ளிட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தீர்வு செய்து கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.

    • மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது
    • வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர வலியுறுத்தல்

    பெரம்பலூர்

    தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் சலுகையினை ரத்து செய்ய விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மேற்பார்வை மின்பொறியாளர் அம்பிகா தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகள், மின் நுகர்வோர்கள் கலந்துகொண்டு மின் தொடர்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளித்தனர்.

    கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் தலைமையில் விவசாயிகள் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது,

    தமிழ்நாடு முழுவதும் நல்ல மழை பெய்து நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து உள்ள நிலையில் மேலும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கிட இலக்கீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    பெரம்பலூர் வசூல் மையத்தில் ஒருவர் மட்டும் மின்கட்டணம் வசூல் செய்து வருவதால் மின் நுகர்வோர்கள் அதிக நேரம் காத்திருத்து மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படுகிறது. ஆகையால் ஏற்கனவே இருந்தது போல் 3 பேரை வசூல் மையத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும்.

    ஒருவர் பல வீட்டு மின்இணைப்பு பெற்று, அதில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் 100 யூனிட் இலவச மின்சாரம் சலுகையினால் பயனடைந்து வருகின்றார்கள். தற்பொழுது 100 யூனிட் இலவச மின்சாரம் பெற்று வரும் சலுகைகளை ரத்து செய்து பொது பயன்பாட்டு கட்டணம் வசூல் செய்ய இருக்கும் தமிழக மின்துறை அமைச்சரின் முடிவு நியாயமில்லை. இதுபற்றி விசாரணை செய்து மின்நுகர்வோர் நலன் காக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவினை பெற்றுக்கொண்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அம்பிகா மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • ஒன்றிய குழு தலைவர் இ.டி.டி.சுமதி செங்கண்ணன் தலைமை வகித்தார்.

    மொரப்பூர்,

    தருமபுரி மாவட்டம்,மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு சாதாரண கூட்டம் ஒன்றிய மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் இ.டி.டி.சுமதி செங்கண்ணன் தலைமை வகித்தார்.

    ஒன்றிய குழு துணை தலைவர் சி.வன்னிய பெருமாள்,வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்வாகம் லோகநாதன் வரவேற்று பேசினார்.

    இக்கூட்டத்தில் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணியில் குறித்து ஆய்வு செய்யப்பட்டு பணிகள் விரைவாக முடிக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது.மேலும் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

    ஒன்றிய குழு உறுப்பினர்கள் சசிகுமார், முனியம்மாள் நந்தி குமார்,கோமதி செல்வராஜ்,மாது ராஜலிங்கம்,அம்பிகா கிருஷ்ண மூர்த்தி, பழனியம்மாள் ரவி, நாராயணன்,சுதா தர்மன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பணி மேற்பார்வையாளர் இன்பசேகரன் நன்றி கூறினார்.

    ×