என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செயல்முறை"

    • ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் நடந்தது.
    • என்.சி.சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தடுப்பு செயல்முறை விளக்கம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பானுமதி தலைமை தாங்கினார். என்.சி.சி அலுவலர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். என்.சி.சி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தீயணைப்பு நிலைய அலுவலர் பலகார ராமசாமி, சிறப்பு நிலைய அலுவலர் ஏழுமலை மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இணைந்து தீ விபத்து பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது பாதுகாப்புடன் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விழிப்புணர்வு மற்றும் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

    இதில் கல்லூரி ஆசிரியர்கள், 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தீ பாதுகாப்பு குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தனர்.

    • நிள அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு 90 நாட்களுக்கான நில அளவை பயிற்சி கடலூர் அருகே நடைபெற்றது.
    • செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது.

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 922 நில அளவர்கள் மற்றும் வரைவாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் கடந்த 15-ந்தேதி தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்ட 102 நிள அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு 90 நாட்களுக்கான நில அளவை பயிற்சி கடலூர் அருகே நடைபெற்றது. 

    மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், உதவி இயக்குனர்கள் திருநாவுக்கரசு, சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை ஆற்றினார்கள். இதில் பங்கேற்றுள்ள 102 நில அளவர் மற்றும் வரைவாளர்கள் பயிற்சி முடித்து கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணியில் ஈடுபட உள்ளனர். பயிற்சியில் ஈடுபடும் நில அளவர்கள் மற்றும் வரைவாளர்கள் செயல்முறை விளக்கமும் அளிக்கப்பட உள்ளது. கடலூர் கோட்ட ஆய்வாளர் நாராயணன் நன்றி கூறினார்.

    கொளத்தூரில் விவசாயிகளுக்கான செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது.
    மேட்டூர்:

    கொளத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு லாபகரமான விவசாயம் குறித்த செயல் முறை விளக்க நிகழ்ச்சி கொளத்தூரில் நடைபெற்றது. கொளத்தூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வெங்கடாசலம் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார்.

    வேளாண்மை விற்பனை துறை உதவி பொறியாளர் நடராஜன் ,வேளாண் அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத் துறை இயக்குனர் பாலசுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். 

    விவசாயிகள் வேளாண்மை துறையில் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்துவைக்க அவுட் குரோ என்ற புதிய செயலி அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

    விவசாயிகள் குறைந்த நிலப்பரப்பில் அதிக லாபம் ஈட்டுவதற்கு குறித்தும் மற்றும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகள் பழங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்கும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்வதற்கும் விவசாய பயிர் பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
     
    நிகழ்ச்சியில் அன்னை காவேரி விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சுகவனம்,   அவுட் குரோ நிறுவனத்தின் விவசாயிகள் செயல்பாடுகள் பிரிவு தலைவர் செந்தில்குமார் உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். 

    இதற்கான ஏற்பாடுகளை அன்னை காவேரி விவசாய உற்பத்தி குழுமம் மட்டும் அவுட் குரோ செயலி குழுமத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
    ×