என் மலர்
நீங்கள் தேடியது "Jamabandi"
- பொதுமக்கள் வழங்கிய 213 மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கப்பட்டது.
- 2 பேருக்கு பட்டா மாறுதல் ஆணையும், ஒருவருக்கு பட்டா உட்பிரிவு மாறுதல் ஆணையும் கலெக்டர் வழங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாசில்தார் அலுவலகத்தில் 2-வது நாள் கபிஸ்தலம் சரகத்திற்கு ஜமாபந்தி நடந்தது. நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.
இந்த ஜமாபந்தியில் 25 கிராமங்களுக்கு நடந்தது. ஜமாபந்தியில் பொதுமக்கள் வழங்கிய 213 மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கி அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும் 2 நபர்களுக்கு பட்டா மாறுதல் ஆணையும், ஒருவருக்கு பட்டா உட்பிரிவு மாறுதல் ஆணையும் வழங்கினார்.
இதில் பயிற்சி துணை கலெக்டர் விஷ்ணு பிரியா, பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முருககுமார், திருவையாறு ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் நெடுஞ்செழியன், தஞ்சை கலெக்டர் அலுவலக மேலாளர் ரத்தினவேல் மற்றும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள், பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
- திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.
வண்டலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. தாசில்தார் பாலாஜி தலைமை தாங்கினார். காட்டாங்கொளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயாகருணாகரன், துணை தலைவர் ஆராமுதன், வட்ட வழங்கல் அலுவலர் அப்துல்ராஷிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜமாபந்தி அலுவலர் சரவணன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு எம்.எல்.ஏ. வரலட்சுமிமதுசூதனன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில் பட்டா, சிட்டா, ,பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 99 மனுக்கள் பெறப்பட்டது. நெடுங்குன்றம் தி.மு.க. ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீசீனிவாசன் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருப்போரூர் எம்.எல்.ஏ பாலாஜி கலந்து கொண்டார். நிகழ்ச்சியின்போது, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் 26 பேருக்கு, தலா ரூ.12ஆயிரம், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 38பேருக்கு தலா ரூ.20ஆயிரம் என மொத்தம் ரூ.10.72 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது.
- தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் புகார்
- நீர்நிலைகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
மாமல்லபுரம்:
திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது. மணமை, வடகடம்பாடி, எச்சூர், கடம்பாடி, குழிப்பாந்தண்டலம், பூஞ்சேரி, எச்சூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி ஆகியோரிடம் அளித்தனர்.
அப்போது மணமை ஊராட்சியை சேர்ந்த வீராசாமி என்பவர் 500க்கும் மேற்பட்ட மனுக்களை தலையில் சுமந்தவாறு வந்து மனு அளித்தார்.
அந்த மனுவில், மணமை ஊராட்சியில் அரசு நீர்நிலைகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பை அகற்றவும், சட்டவிரோதமாக நடத்தப்படும் இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் நிலைகள் பாதிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
30 ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுவரை தான் கொடுத்த 500க்கும் மேற்பட்ட மனுக்களின் நகல்களை தலையில் சுமந்தவாறு வந்து மனு கொடுத்ததாக வீராசாமி கூறினார். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு காணப்பட்டது.