என் மலர்
நீங்கள் தேடியது "celebrate"
- 2022-ம் ஆண்டு நாளை மறுநாள் முடிவடைகிறது. இதனால் 2023-ம் ஆண்டை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள்.
- அதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாடும் வகையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு–கிறார்கள்.
நாமக்கல்:
2022-ம் ஆண்டு நாளை மறுநாள் முடிவடைகிறது. இதனால் 2023-ம் ஆண்டை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் புத்தாண்டை அசம்பாவிதங்கள் இல்லாமல் கொண்டாட தமிழக அரசும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
அதன் தொடர்ச்சியாக நாமக்கல் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை அமைதியாக கொண்டாடும் வகையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு–கிறார்கள். 20 இடங்களில் வாகன சோதனை செய்ய போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட உள்ளது.
31-ந் தேதி நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட தடை செய்யப்பட்டுள்ளது. அதிவேகமாக வாகன ஓட்டுபவர்கள் கேமரா மூலம் கண்காணித்து அபராதம் விதிக்க, வழக்கு பதிவு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பைக் ரேஸில் ஈடுபடுபவர்கள் குறித்து 100-க்கும், போலீஸ் செயலிக்கும் தகவல் தெரிவிக்கலாம். வழிபாட்டு தளங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவ–தாக நாமக்கல் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.
- கேக்குகளை தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
- கேக் வெட்டி பொதுமக்கள் புத்தாண்டை கொண்டாடினார்கள்.
பெரம்பலூர்
புத்தாண்டை வரவேற்கும் விதமாக சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேக்கரிகளில் சாக்லெட் கேக், வெண்ணிலா கேக், ஐஸ்கிரீம் கேக், பிளாக் பாரஸ்ட் கேக் உள்ளிட்ட பல்வேறு வகையான கேக்குகளை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அவ்வாறு வாங்கப்பட்ட கேக்குகளை தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் வெட்டி புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.