என் மலர்
நீங்கள் தேடியது "ராமஜெயம் கொலை வழக்கு"
- ராமஜெயம் கொலை தொடர்பாக சென்னையில் ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- நேற்று முன்தினம் தொடங்கிய உண்மை கண்டறியும் சோதனை இன்று 3-வது நாளாக நடைபெற்றது
சென்னை:
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை தொடர்பாக சென்னையில் ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் தொடங்கிய இந்த சோதனை இன்று 3-வது நாளாக நடைபெற்றது. இன்று ரவுடிகள் சாமிரவி, மாரிமுத்து, சிவா உள்ளிட்டோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது.
- சென்னையில் கடந்த 18-ந் தேதி அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடந்து முடிந்து உள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் ராமஜெயம் கொலை வழக்கில் நிலவி வரும் மர்ம முடிச்சுகள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியை சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2010-ம் ஆண்டு நடைபயணம் சென்றபோது மர்ம கும்பலால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ஜெயக்குமார், தலைமையில் டி.எஸ்.பி. மதன் சென்னை சி.பி.சி.டி.ஐ.யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் சந்தேக வளையத்துக்குள் சிக்கிய மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ், செந்தில், கலைவாணன், சுரேந்திரன், சாமி ரவி, மாரிமுத்து, சிவா ஆகிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னையில் கடந்த 18-ந் தேதி அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடந்து முடிந்து உள்ளது. அவர்களிடம் ராமஜெயம் குறித்து தடயவியல் நிபுணர்கள் கேள்வி கேட்டு பதில்கள் பெற்றனர்.
இந்த சோதனை தொடர்பாக அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தயாரிக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் வழங்க உள்ளனர். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையினை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.
உண்மை கண்டறியும் சோதனை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வாரத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் ராமஜெயம் கொலை வழக்கில் நிலவி வரும் மர்ம முடிச்சுகள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பிடிபட்ட நபர்கள் மூலமாக தப்பி ஓடிய நபரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
- கொலை செய்யப்பட்ட பிரபு மீது கொலை முயற்சி, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திருச்சி:
திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள மதுரா அப்பார்ட்மெண்டில் வசித்து வந்தவர் பிரபு என்கிற ஆம்புலன்ஸ் பிரபாகரன் (வயது 51). முன்னாள் மாவட்ட பா.ம.க. ஆம்புலன்ஸ் தொழிற்சங்க செயலாளரான இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் மற்றும் ஹோம் கேர் நிறுவனம் நடத்தி வந்தார்.
நேற்று இரவு 9.20 மணியளவில் புத்தூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனது அலுவலகத்தில் தனியாக இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த முகமூடி அணிந்த 4 பேர் கும்பல் அலுவலகத்துக்குள் திபுதிபுவென புகுந்தனர்.
பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அங்கு இருந்த பிரபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
பிரபுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே கொலையாளிகள் அங்கிருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் பிரபுவின் அலுவலகத்தில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளின் விவரங்களை சேகரித்தனர். இதை தொடர்ந்து செல்போன் டவர் மூலமாக நள்ளிரவில் போலீசார் கொலையாளிகளை தேடினர்.
இதை தொடர்ந்து இந்த கொலை வழக்கு தொடர்பாக அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (30), பஷீர் (29), ரியாஸ் (24) தஞ்சை மாதவரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தக் கொலையில் அப்பு என்கிற ஹரிஹரனை போலீசார் தேடி வருகின்றனர்.
பின்னர் கே.கே. நகரில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிடிபட்ட நபர்கள் மூலமாக தப்பி ஓடிய நபரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பிரபு மீது கொலை முயற்சி, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்விரோதம் காரணமாக அவர் கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பிரபுவை தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது கண்காணிப்பு வளையத்தில் தொடர்ந்து இருந்து வந்தார். நாளை அவர் போலீசில் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
- தமிழக காவல்துறை விசாரிக்கக்கோரி ராமஜெயமின் சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
- அரசு தரப்பின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கை சிபிஐயிடம் இருந்து மாற்றி தமிழக காவல்துறை விசாரிக்கக்கோரி ராமஜெயமின் சகோதரர் ரவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, வழக்கு விசாரணை தொடர்பாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் பணியிட மாறுதல் செய்யப்பட்டதால் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு கோரிக்கை வைத்தது.
அதன்படி, அரசு தரப்பின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
அதன்படி, ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவில் திருச்சி டிஐஜி, தஞ்சை எஸ்பி ஆகியோரை கூடுதலாக நியமித்து புலன் விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக நகர்புற துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சி தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பது தெரியாமல் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு சமீபத்தில் மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகள் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் அறிவித்துள்ளனர். இது தொடர்பான போஸ்டர் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கொலை நடந்தன்று சுங்கச்சாவடிகளில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து கொலையாளிகள் வெர்ஸா மாடல் காரில் தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகள் தப்பி சென்றதாக சந்தேகிக்கப்படும் வெர்ஸா மாடல் கார் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த அந்த காலகட்டத்தில் வெர்ஸா கார் வைத்திருந்த உரிமையாளர்களின் பட்டியலை அந்தந்த பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சேகரித்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் அதன் உரிமையாளர்களின் முகவரியை அடிப்படையாக வைத்து நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட மாடல் கொண்ட கார் யார் வைத்திருந்தார்கள், கார் காணாமல் போனதா அல்லது வேறு யாருக்கு விற்பனை செய்யப்பட்டதா அல்லது யாரிடமாவது விலைக்கு வாங்கப்பட்டதா என்பது போன்ற பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் குறிப்பிட்ட அந்த மாடல் கார் 2012-ம் ஆண்டு காலகட்டத்தில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வந்தது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பட்டியல் அடிப்படையில் கார் உரிமையாளர்களை நேரில் சந்தித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த சில நாட்களாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 60 சதவீத உரிமையாளர்களிடம் விசாரணை முடிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழில் அதிபரான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி அதிகாலை 5 மணியளவில் நடைபயிற்சி சென்றபோது மர்மநபர்களால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
கொலையாளிகள் அவரது உடலை கட்டு கம்பியால் கட்டி திருச்சி கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பொன்னி டெல்டா பகுதியில் காவிரி ஆற்றின் கரையோரம் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. மற்றும் சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் மீண்டும் ராமஜெயம் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை விசாரணை அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அதன் பின்னர் கோர்ட்டுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் இந்த மாதம் வருகிற 8-ந் தேதி ஒருமாத விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர். இதில் பிரபல ரவுடிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகப்படும் வெர்ஷா மாருதி வாகன உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார்கள்.