என் மலர்
முகப்பு » tag 330794
நீங்கள் தேடியது "லேண்ட் ரோவர்"
லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய டிபெண்டர் 130 மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல் எட்டு பேர் அமரக்கூடிய இடவசதி கொண்டுள்ளது.
லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய டிபெண்டர் மாடலை அறிமுகம் செய்து உள்ளது. இந்த மாடலில் 2+3+3 அடிப்படையில் முன்புறம் பார்த்த நிலையில் இருக்கைகள் பொருத்தப்பட்டு உள்ளன. எஸ்.யு.வி. மாடலின் நீண்ட வெர்ஷன் கொண்ட கார் டிபெண்டர் 130 ஆகும். இந்த மாடல் குடும்பத்துடன் ஆஃப் ரோடிங் செய்வதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
டிபெண்டர் 130 மாடலில் 3022mm வீல்பேஸ், 340mm நீளமான ரியர் ஆக்சில் உள்ளது. இது காரின் மூன்றாவது அடுக்கு இருக்கைகளை வைக்க இடவசதி வழங்கி இருக்கிறது. மூன்றடுக்கு இருக்கைகளிலும் சவுகரியமாக கால்களை வைத்துக் கொள்ளும் வகையில் புதிய டிபெண்டர் 130 மாடல் உள்ளது. இத்துடன் இரண்டு மற்றும் மூன்றாம் அடுக்கு இருக்கைகளை மடித்துக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
புதிய டிபெண்டர் 130 மாடலில் பிரத்யேக செடோனா ரெட் நிற பெயிண்ட் மற்றும் குரோம் ட்ரிபம் பீஸ்கள் உள்ளன. புது மாடலின் நீளம் அதிகரித்து இருந்தாலும், ஆப் ரோடிங் திறன்களில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் புதிய டிபெண்டர் 130 மாடல் டிசைன் செய்யப்பட்டு உள்ளது.
லேண்ட் ரோவர் டிபெண்டர் 130 மாடலின் டேஷ்போர்டில் 11.4 இன்ச் பிவி ப்ரோ டச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இது மூன்று ஸ்கிரீன் செட்டப் ஆகும். இதில் ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், செண்ட்ரல் அப்பர் டச் ஸ்கிரீன் மற்றும் செண்டர் லோயர் டச் ஸ்கிரீன் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. இந்த மாடல் SE, HSE, X டைனமிக், X மற்றும் ஃபர்ஸ்ட் எடிஷன் ட்ரிம்களில் கிடைக்கிறது.
இந்த மாடலில் 3 லிட்டர், 6 சிலிண்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட மைல்டு ஹைப்ரிட் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. மூன்று என்ஜின்களுடன் 8 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் iAWD சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதே கார் சக்திவாய்ந்த வி8 என்ஜின் மற்றும் பிளக் இன் ஹைப்ரிட் பவர்டிரெயின் ஆப்ஷன்களிலும் கிடைக்கும் என தெரிகிறது.
×
X