என் மலர்
நீங்கள் தேடியது "Ramajayam murdered case"
- ராமஜெயம் கொலை வழக்கில் இன்று சந்தேகப்படும் என்று அறியப்பட்ட 13 ரவுடிகள் ஒரே நேரத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை முன்னிட்டு திருச்சி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடும் பட்சத்தில் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை மேலும் சூடுபிடிக்கும்.
திருச்சி:
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பி தொழிலதிபர் கே.என்.ராமஜெயம். இவர் 2012-ம் ஆண்டு மார்ச் 29-ந்தேதி, திருச்சியில் நடைபயிற்சி சென்றபோது கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார்.
அவரின் உடல் திருச்சி-கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கினை உள்ளூர் போலீசார் முதலில் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
இருப்பினும் எந்த துப்பும் துலங்கவில்லை. அதைத்தொடர்ந்து ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன், 'இவ்வழக்கை தமிழக அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும்' என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமீபத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவின்படி, எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், டி.எஸ்.பி. மதன்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக திருச்சி திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டது. இந்த குழுவின் மூலம் தற்போது வரை சுமார் ஆயிரம் பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கில் திடீர் திருப்பமாக, சென்னையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., எம்.கே.பாலன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில்குமார் ஆகியோரை பிடித்து சிறப்பு புலனாய்வுக்குழு தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தது.
சென்னை சைதாப்பேட்டையில் அ.தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினராக எம்.கே.பாலன் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 30-ந்தேதி நடைபயிற்சி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. விசாரணையில் அவரை கடத்தி கொலை செய்து எரித்து விட்டது தெரிய வந்தது.
இந்த பாலன் கொலை வழக்கு விசாரணை தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பாலனைப் போன்று ராமஜெயமும் நடைபயிற்சி சென்றபோது கொலை செய்யப்பட்டதால் அந்தக் கொலையாளிகளுக்கு இதில் சம்பந்தம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ராமஜெயம் கொலை வழக்கில் அவரது உதவியாளர்களாக இருந்த மோகன், ஜெயக்குமார் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் அதில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 22-ந்தேதி சி.பி.சி.ஐ.டி., டி.ஜி.பி. ஷகில் அக்தர் திருவெறும்பூர் வருகை தந்தார். பின்னர் பாலன் கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் 20 பேரிடம் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் அதில் 13 பேரை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டது.
பின்னர் சாமி ரவி, திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், மாரிமுத்து, சீர்காழி சத்யராஜ், தினேஷ், திலீப் என்கிற லட்சுமி நாராயணன், தென்போவன் என்கிற சண்முகம், ராஜ்குமார், சிவ குணசேகரன், சுரேந்தர், கலைவாணன், லெப்ட் ரவி ஆகிய 13 ரவுடிகளுக்கு இன்று திருச்சி கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்படி 12 பேர் இன்று காலையிலேயே கோர்ட்டுக்கு வந்தனர். இதில் 13-வது நபரான லெப்ட் ரவி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் திருச்சி கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் 13 ரவுடிகளும் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கோரப்பட்டது.
தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை திருச்சி கோர்ட்டில் நடைபெற்றது. அப்போது இந்த சிறப்பு புலனாய்வுக்குழுவில் விசாரணை அதிகாரியாக இருக்கும் எஸ்.பி., வராத காரணத்தால் மனு மீதான விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அன்றைய தினம் உண்மை கண்டறியும் சோதனைக்கு உத்தரவிடுமாறு எஸ்.பி. ஜெயக்குமார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வார் என சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தெரிவித்தனர்.
அன்று அவர்கள் 13 பேருக்கும் பெங்களூருவில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கப்படும் என்று தெரிகிறது.
ராமஜெயம் கொலை வழக்கில் இன்று சந்தேகப்படும் என்று அறியப்பட்ட 13 ரவுடிகள் ஒரே நேரத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை முன்னிட்டு திருச்சி கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உத்தரவிடும் பட்சத்தில் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை மேலும் சூடுபிடிக்கும்.
10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையில் விரைவில் குற்றவாளிகள் கைதாவார்கள் என்று சிறப்பு புலனாய்வுக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
- ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய தினம் திருச்சி தில்லை நகர் பகுதியில் மேற்கண்ட 13 பேரில் 5 பேரின் செல்போன் பயன்பாடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
- 13 பேரில் சண்முகம் என்பவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
திருச்சி:
தி.மு.க. முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும் தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி அதிகாலை வழக்கம்போல் நடைபயிற்சி சென்றார்.
அப்போது அவர் மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்டார். அவரது உடல் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கல்லணை ரோடு திருவளர்ச்சோலை பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
இது தொடர்பாக முதலில் உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் சி.பி.ஐ., சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆனால் எந்தவித துப்பும் துலங்கவில்லை. இந்த நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வு குழுவினர் கடந்த 6 மாதமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை 700 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதில் சந்தேகப்படும்படியான 13 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நாளுக்கு முந்தைய தினம் திருச்சி தில்லை நகர் பகுதியில் மேற்கண்ட 13 பேரில் 5 பேரின் செல்போன் பயன்பாடு இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
அது மட்டும் அல்லாமல் கொலை நடப்பதற்கு மூன்று தினங்களுக்கு முன்பு காரைக்காலில் அவர்கள் சந்தித்து பேசிய ஆதாரங்களும் கிடைத்திருக்கின்றன.
இந்த நபர்களுக்கு ஜாபர் என்பவரது கொலை வழக்கிலும் தொடர்புள்ளது. எனவேதான் ராமஜெயம் கொலை வழக்கிலும் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கின்றோம். மேலும் இந்த 5 பேருடன் மற்ற 8 பேருக்கும் தொடர்பு இருக்கின்றது. அந்த அடிப்படையில் தான் 13 பேருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் கண்டிப்பாக துப்பு துலங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.
இந்த 13 பேரில் சண்முகம் என்பவர் மட்டும் உண்மை கண்டறியும் சோதனைக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆகவே வேறு வகையில் அவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்படும் 12 பேருக்கும் முழு உடல் தகுதி மருத்துவ பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அதைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) மருத்துவ அறிக்கையுடன் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் ஆஜர்படுத்துகிறார்கள். நீதிபதி உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி அளித்து தீர்ப்பு கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரித்து வருகின்றனர்.
- சி.பி.சி.ஐ.டி. போலீசார் தயாரித்து வைத்துள்ள கேள்விகளுடன், டெல்லி அதிகாரிகளும் தனியாக கேள்வியை எழுப்பி இந்த விசாரணையை நடத்த உள்ளனர்.
சென்னை:
தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியை சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபயிற்சி சென்றபோது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை 10 ஆண்டுகளாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்தும் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது.
போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையில் 40 பேர் அடங்கிய போலீசார் இந்த வழக்கை மீண்டும் தூசி தட்டி விசாரித்து வருகின்றனர். ராமஜெயம் கொலை பாணியில் தமிழகத்தில் நடைபெற்ற கொலை வழக்குகளில் கைதான ரவுடிகள், ராமஜெயம் கொலையின்போது திருச்சியில் தங்கி இருந்த ரவுடிகள் பட்டியலை தயாரித்தனர். இதில் இந்த வழக்கில் 12 பேர் சந்தேக நபர்களாக சேர்க்கப்பட்டனர்.
அவர்களிடம் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்துவதற்கு திருச்சி மாஜிஸ்திரேட்டிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் அனுமதி பெற்றனர். பின்னர் 12 பேருக்கும் இந்த சோதனைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். இதையடுத்து அவர்கள் சென்னையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டனர்.
எனவே இந்த விசாரணை 17-ந் தேதி (நேற்று) தொடங்கும் என்று தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் நேற்று விசாரணை நடைபெறவில்லை. உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து மத்திய தடயவியல் துறை நிபுணர் மோசஸ் உள்பட 2 அதிகாரிகள் நேற்று சென்னை வந்தனர். அவர்கள் தடயவியல் துறை அலுவலகத்தை பார்வையிட்டு தாங்கள் கொண்டு வந்த உபகரணங்களை வைத்தனர்.
உண்மை கண்டறியும் பரிசோதனை இன்று தொடங்குகிறது. காலை 10 மணிக்கு ஒருவரிடமும், மதியம் 2 மணிக்கு ஒருவரிடம் என தினமும் 2 பேரிடம் இந்த சோதனை நடைபெற உள்ளது. 6 நாட்களில் அனைவரிடமும் இந்த சோதனை நடத்தி முடிக்கப்படும்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள கேள்விகளுடன், டெல்லி அதிகாரிகளும் தனியாக கேள்வியை எழுப்பி இந்த விசாரணையை நடத்த உள்ளனர்.
சந்தேக நபர்கள் அளிக்கும் பதில்கள் அனைத்தும் 'வீடியோ' பதிவு செய்யப்படும். உண்மை கண்டறியும் பரிசோதனை விவரங்கள் அனைத்தும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- மெரினா காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் அருகில் உள்ள தடயவியல் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது.
- சோதனை நடைபெற்ற தடயவியல் துறை அலுவலகத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வந்திருந்தார்.
சென்னை:
அமைச்சர் நேருவின் தம்பியும் தொழில் அதிபருமான ராமஜெயம் திருச்சியில் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தியும் கொலை வழக்கில் துப்பு துலங்கவில்லை. இதனால் ராமஜெயம் கொலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மர்மம் நீடிக்கிறது.
அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலையாளிகள் யார்? என்பது தொடர்பாக எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகாமலேயே உள்ளது.
ராமஜெயம் கொலை தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தியும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் மாநில போலீசாரே விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து அப்போது தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டாக இருந்த ஜெயக்குமார் தலைமையில் புதிய விசாரணை குழு ராமஜெயம் கொலை தொடர்பான வழக்கை விசாரிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதில் டி.எஸ்.பி. மதன் உள்ளிட்ட காவலர்கள் இடம் பெற்றனர். ஐகோர்ட்டு உத்தரவை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவினர் தங்களது விசாரணையை தொடங்கினர்.
பல்வேறு குற்ற வழக்குகளில் திறம்பட செயல்பட்டவர் என்ற முறையிலும், ரவுடிகள் ஒழிப்பு படை பிரிவில் பணியாற்றியவர் என்ற முறையிலும் சூப்பிரண்டு ஜெயக்குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டதையடுத்து ராமஜெயம் கொலை வழக்கு விசாரணை சூடு பிடித்தது.
தமிழகம் முழுவதும் உள்ள பிரபல ரவுடிகளின் மீது போலீசாரின் சந்தேக பார்வை விழுந்தது. காலையில் நடைபயிற்சி சென்ற போதுதான் ராமஜெயம் திட்டம் போட்டு கடத்தி கொல்லப்பட்டார்.
இதையடுத்து அதே பாணியில் இதற்கு முன்பு நடைபெற்ற கொலை சம்பவங்கள், அதில் ஈடுபட்ட ரவுடிகள் பற்றிய பட்டியலை தயாரித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் ரவுடி மோகன்ராம் உள்பட 12 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த சோதனைக்கு கோர்ட்டில் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டனர். இதன்படி திருச்சி மாஜிஸ்திரேட்டு அதற்கான அனுமதியை அளித்தார்.
இதன்படி திண்டுக்கல் மோகன்ராமன், நரைமுடி கணேசன், தினேஷ், சீர்காழி சத்யா ஆகிய 4 ரவுடிகளிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
அவர்கள் 4 பேரும் இன்று காலை 10 மணி அளவில் தடயவியல் துறை அலுவலகத்துக்கு வக்கீல்களுடன் வந்து காரில் இறங்கினார்கள். இவர்கள் 4 பேருடன் தலா ஒரு வக்கீல் தடயவியல் துறை அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மெரினா காமராஜர் சாலையில் டி.ஜி.பி. அலுவலகம் அருகில் உள்ள தடயவியல் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது. இதற்காக டெல்லியில் இருந்து தடயவியல் நிபுணர் மோகன் தலைமையில் 2 அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர்.
இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரை 4 நாட்கள் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது. இன்று 4 பேருக்கு சோதனை நடைபெறும் நிலையில் மற்ற 8 ரவுடிகளுக்கும் அடுத்தடுத்த நாட்களில் தடயவியல் சோதனை நடத்தப்பட உள்ளது.
இந்த சோதனை முடிவில் ராமஜெயம் கொலை வழக்கில் இவர்கள் யாருக்காவது தொடர்பு இருந்தால் அது தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை நடைபெற்ற தடயவியல் துறை அலுவலகத்துக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வந்திருந்தார்.
- ராமஜெயம் கொலை வழக்கில் கொலையில் இதுவரையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
- இன்று சத்தியராஜ், செந்தில், கலைவாணன், ராஜ்குமார், சுரேந்தர் ஆகிய 5 பேரிடம் விசாரணை நடக்கிறது.
சென்னை:
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலையில் இதுவரையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடந்து வருகிறது.
சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் துறை அலுவலகத்தில் நேற்று கூலிப்படையை சேர்ந்த திண்டுக்கல் மோகன் ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சீர்காழி சத்யா ஆகிய 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
இன்று சத்தியராஜ், செந்தில், கலைவாணன், ராஜ்குமார், சுரேந்தர் ஆகிய 5 பேரிடம் விசாரணை நடக்கிறது. நாளை 3 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உண்மை கண்டறியும் பரிசோதனையின்போது அவர்கள் கூறும் தகவல் போலீசாரால் பதிவு செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்படுகிறது.
- ராமஜெயம் கொலை தொடர்பாக சென்னையில் ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- நேற்று முன்தினம் தொடங்கிய உண்மை கண்டறியும் சோதனை இன்று 3-வது நாளாக நடைபெற்றது
சென்னை:
அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை தொடர்பாக சென்னையில் ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் தொடங்கிய இந்த சோதனை இன்று 3-வது நாளாக நடைபெற்றது. இன்று ரவுடிகள் சாமிரவி, மாரிமுத்து, சிவா உள்ளிட்டோருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்றது.
- சென்னையில் கடந்த 18-ந் தேதி அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடந்து முடிந்து உள்ளது.
- கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் ராமஜெயம் கொலை வழக்கில் நிலவி வரும் மர்ம முடிச்சுகள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சியை சேர்ந்த தொழில் அதிபருமான ராமஜெயம் கடந்த 2010-ம் ஆண்டு நடைபயணம் சென்றபோது மர்ம கும்பலால் கடத்தி கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. ஜெயக்குமார், தலைமையில் டி.எஸ்.பி. மதன் சென்னை சி.பி.சி.டி.ஐ.யை சேர்ந்த ரவி ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் சந்தேக வளையத்துக்குள் சிக்கிய மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், சத்யராஜ், செந்தில், கலைவாணன், சுரேந்திரன், சாமி ரவி, மாரிமுத்து, சிவா ஆகிய 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி சென்னையில் கடந்த 18-ந் தேதி அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை தொடங்கி நடந்து முடிந்து உள்ளது. அவர்களிடம் ராமஜெயம் குறித்து தடயவியல் நிபுணர்கள் கேள்வி கேட்டு பதில்கள் பெற்றனர்.
இந்த சோதனை தொடர்பாக அனைத்து விவரங்களையும் அறிக்கையாக தயாரிக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த அறிக்கையை சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் வழங்க உள்ளனர். அவர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையினை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மேற்கொள்ள உள்ளனர்.
உண்மை கண்டறியும் சோதனை அறிக்கையை சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 வாரத்தில் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் ராமஜெயம் கொலை வழக்கில் நிலவி வரும் மர்ம முடிச்சுகள் விலகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பிடிபட்ட நபர்கள் மூலமாக தப்பி ஓடிய நபரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
- கொலை செய்யப்பட்ட பிரபு மீது கொலை முயற்சி, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திருச்சி:
திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள மதுரா அப்பார்ட்மெண்டில் வசித்து வந்தவர் பிரபு என்கிற ஆம்புலன்ஸ் பிரபாகரன் (வயது 51). முன்னாள் மாவட்ட பா.ம.க. ஆம்புலன்ஸ் தொழிற்சங்க செயலாளரான இவர் சொந்தமாக ஆம்புலன்ஸ் மற்றும் ஹோம் கேர் நிறுவனம் நடத்தி வந்தார்.
நேற்று இரவு 9.20 மணியளவில் புத்தூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனது அலுவலகத்தில் தனியாக இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த முகமூடி அணிந்த 4 பேர் கும்பல் அலுவலகத்துக்குள் திபுதிபுவென புகுந்தனர்.
பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அங்கு இருந்த பிரபுவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
பிரபுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். உடனே கொலையாளிகள் அங்கிருந்து 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பிச் சென்றனர். தகவல் அறிந்த திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றிய தகவல் அறிந்த மாநகர போலீஸ் கமிஷனர் காமினி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் பிரபுவின் அலுவலகத்தில் இருந்த சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளின் விவரங்களை சேகரித்தனர். இதை தொடர்ந்து செல்போன் டவர் மூலமாக நள்ளிரவில் போலீசார் கொலையாளிகளை தேடினர்.
இதை தொடர்ந்து இந்த கொலை வழக்கு தொடர்பாக அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் (30), பஷீர் (29), ரியாஸ் (24) தஞ்சை மாதவரம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய 4 பேரை கைது செய்துள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தக் கொலையில் அப்பு என்கிற ஹரிஹரனை போலீசார் தேடி வருகின்றனர்.
பின்னர் கே.கே. நகரில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிடிபட்ட நபர்கள் மூலமாக தப்பி ஓடிய நபரையும் போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட பிரபு மீது கொலை முயற்சி, போதை பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்விரோதம் காரணமாக அவர் கூலிப்படை மூலம் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பிரபுவை தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களது கண்காணிப்பு வளையத்தில் தொடர்ந்து இருந்து வந்தார். நாளை அவர் போலீசில் ஆஜராகவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை நடந்த பகுதியில் பதட்டம் நிலவி வருவதால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
தமிழக நகர்புற துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரும், திருச்சி தொழிலதிபருமான ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
இக்கொலையில் தொடர்புடையவர்கள் யார் என்பது தெரியாமல் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு சமீபத்தில் மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகள் குறித்த தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், தகவல் தெரிவிப்பவர்கள் குறித்து ரகசியம் காக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் அறிவித்துள்ளனர். இது தொடர்பான போஸ்டர் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில் கொலை நடந்தன்று சுங்கச்சாவடிகளில் பதிவான காட்சிகளை அடிப்படையாக வைத்து கொலையாளிகள் வெர்ஸா மாடல் காரில் தப்பி சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையாளிகள் தப்பி சென்றதாக சந்தேகிக்கப்படும் வெர்ஸா மாடல் கார் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த அந்த காலகட்டத்தில் வெர்ஸா கார் வைத்திருந்த உரிமையாளர்களின் பட்டியலை அந்தந்த பகுதியில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் சேகரித்துள்ள சி.பி.சி.ஐ.டி போலீசார் அதன் உரிமையாளர்களின் முகவரியை அடிப்படையாக வைத்து நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட மாடல் கொண்ட கார் யார் வைத்திருந்தார்கள், கார் காணாமல் போனதா அல்லது வேறு யாருக்கு விற்பனை செய்யப்பட்டதா அல்லது யாரிடமாவது விலைக்கு வாங்கப்பட்டதா என்பது போன்ற பல்வேறு தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் குறிப்பிட்ட அந்த மாடல் கார் 2012-ம் ஆண்டு காலகட்டத்தில் 70-க்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தி வந்தது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட பட்டியல் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பட்டியல் அடிப்படையில் கார் உரிமையாளர்களை நேரில் சந்தித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் கடந்த சில நாட்களாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 60 சதவீத உரிமையாளர்களிடம் விசாரணை முடிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.