என் மலர்
நீங்கள் தேடியது "மின்"
- ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க வினர் கலந்து கொண்டனர்.
- தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நாகர்கோவில்:
பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்து பாரதிய ஜனதா வினர் தமிழகம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தி னர். குமரி மாவட்டத்தில் 26 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பா.ஜ.க சார்பில் அகஸ்தீஸ்வரம் சந்திப்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சுயம்பு தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சுபாஷ், தென்தாமரைகுளம் பேரூராட்சி தலைவி கார்த்திகா பிரதாப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வளையாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தி னராக மாநில செயலாளர் மீனாதேவ் கலந்து கொண்டு பேசினார்.
அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் பாரத் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் திர ளான பா.ஜ.கவினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறை வில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
தக்கலை தெற்கு ஒன்றிய பாஜக சார்பில் இரணியல் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பேரூர் பாஜக தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார் ஒன்றிய தலைவர் பத்மநாபன் பேரூர் தலைவர் ஸ்ரீகலாமுருகன் மாவட்ட செயலாளர் பிரியா சதீஷ் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் கலந்து கொண்டார்.ஒன்றிய துணை தலைவர் கிருஷ்ணகுமார் மாவட்ட பார்வையாளர் குமார் தாஸ் பொது செயலாளர் வக்கீல் பத்மகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ராஜாக்கமங்கலம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய பாஜக தலைவர் பொன் சுரேஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொதுச் செயலாளர் செந்தில் அதிபன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட் டத்திற்கு குமரி பா. ரமேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் டாக்டர் சிவக்குமார், ராஜக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஸ்வரி சுகுமார், கணபதிபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெயஸ்ரீ, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ஹேமா, பாஜக ஒன்றிய செயலாளர் ஜெயஸ்ரீ, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஒன்றிய செயலாளர் தாமோதரன் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் செல்லத்துரை, ரமேஷ் முன்னாள் வந்திய கவுன்சிலர் சுகுமார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆசாரிபள்ளம் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மேற்கு மாநகர பாஜக தலைவர் சிவசீலன் தலைமை தாங்கினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராம் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் மோகன்ராஜ், மாமன்ற உறுப்பினர் ஆன்றோடைல்ஸ்டைனா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
போராட்டத்தில் மாநகர பொதுச்செயலாளர்கள் வேலானந்தன், பிரஜாபதி, பொருளாளர் ராஜுவ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவ பிரசாத் மாநகர தொழில் பிரிவு தலைவர் முத்துகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி உட்பட நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
குளச்சல் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் நகர தலைவர் கண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் குமாரதாஸ், நகர பார்வையாளர் சிவகுமார் பிரபு, மாவட்ட பிரசார அணி முன்னாள் தலைவர் ஜெயபிரகாஷ், நகர பொதுச்செயலாளர் ஜெனோ ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொதுச்செயலாளர் பிரதீப்குமார் வரவேற்று பேசினார்.மாவட்ட முன்னாள் தலைவர் பொன் ரெத்தினமணி, கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், சுஜித்திரா, முன்னாள் கவுன்சிலர் விஜயராணி மற்றும் ஜஸ்டின் செல்வகுமார், பகவதியப்பன், ஜெயச்சந்திரன், ராஜன், சூர்யா முருகன், அல்போன்ஸ், ஜாண்சன், டிக்சன், பெருமாள், துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கீழூர், கெடமலை, மேலூர் என 3 கிராமங்கள் உள்ளன.இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு மின் வசதி செய்யப்பட்டிருந்தது.
- 1 மாதமாக மின் விநியோகம் இல்லை என்று கூறப்படுகிறது. கெட மலையில் 500 பேருக்கு மேல் வசிக்கின்றனர். அதேபோல் மேலூரில் 450 பேர் வசிக்கின்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போத மலையில் கீழூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கீழூர், கெடமலை, மேலூர் என 3 கிராமங்கள் உள்ளன.இந்த கிராம மக்கள் பயன்பெறும் வகையில் சில வருடங்களுக்கு முன்பு மின் வசதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மேலூர் மற்றும் கெடமலைப்ப குதியில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையின் காரணமாக அங்குள்ள டிரான்ஸ்பார்மர்கள் செயல்படவில்லை. இதனால் 1 மாதமாக மின் விநியோகம் இல்லை என்று கூறப்படுகிறது. கெட மலையில் 500 பேருக்கு மேல் வசிக்கின்றனர். அதேபோல் மேலூரில் 450 பேர் வசிக்கின்றனர்.அங்குள்ள டிரான்ஸ்பார்மர்கள் சரிவர செயல்படவில்லை என்பதால் அங்கு மின் தடை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சரிவர மின் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் குடிநீருக்காக 2 கிலோ மீட்டர் தூரம் வரை மலைப்பகுதியில் சென்று தண்ணீர் எடுத்து வருவதாகவும், பள்ளி மாணவர்கள் இரவு நேரங்களில் படிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும், விவசாயத்திற்கு தண்ணீர் எடுத்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போதமலையைச் சேர்ந்த மக்கள் தெரிவித்தனர்.
இது பற்றி மின்வாரிய அதிகாரி கூறியதாவது:-
சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழை யால் கெடமலை மற்றும் மேலூர் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளன. அவற்றை கீழே கொண்டு வருவதற்கு சாலை வசதி இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள மக்கள் உதவியுடன் தான் பழுதடைந்த டிரான்ஸ்பார்மர்களை கீழே கொண்டு வர முடியும். புதிய டிரான்ஸ்பார்மர்கள் தயார் நிலையில் உள்ளது. அங்குள்ள மக்கள் ஒத்துழைப்பு தந்தால் உடனடியாக புதிய டிரான்ஸ்பார்மர்களை அங்கு வைத்து மின் சப்ளை செய்ய முடியும். நாங்கள் எப்போதும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
- அஸ்தம்பட்டி, எம்.டி.எஸ். நகர் பின்புறம் உள்ள கே.பி.எம். நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது வீடு 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை காலியாக பூட்டப்பட்டு இருந்தது.
- இதனால் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப் படவில்லை. இந்த சூழலில் அவரது மின் இணைப்புக்கு கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 120 கட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
சேலம்:
சேலம், அஸ்தம்பட்டி, எம்.டி.எஸ். நகர் பின்புறம் உள்ள கே.பி.எம். நகரைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது வீடு 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம்வரை காலியாக பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் வீட்டில் மின்சாரம் பயன்படுத்தப் படவில்லை. இந்த சூழலில் அவரது மின் இணைப்புக்கு கட்டணமாக ரூ.4 ஆயிரத்து 120 கட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வீடு பூட்டப்பட்டு காலியாக இருந்த காலத்திற்கு மின்கட்டணம் எதுவும் செலுத்தவேண்டியது இல்லை என்று மஞ்சுளா மின்வாரிய உதவி பொறியாளரிடம் தெரிவித்திருந்தார். ஆனால் நிலுவை கட்டணம் ரூ.4,120 கட்டிதான் ஆகவேண்டும் என்றும், தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும் மஞ்சுளாவுக்கு உதவி பொறியாளர் கடிதம் அனுப்பி இருந்தார்.
இதை தொடர்ந்து மஞ்சுளா மின்வாரியம் மீது சேவை குறைபாடு, மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு கோரி தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் மக்கள் உரிமைகள் புலானய்வு கமிட்டி தலைவர் வக்கீல் செல்வம் மூலம் சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
மேலும் வழக்கு முடியும் வரை மின் இணைப்பை துண்டிக்கக் கூடாது எனவும் அவர் கோரியிருந்தார்.
அதனை விசாரித்த சேலம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய நீதிபதி கணேஷ்ராம் வருகிற 6.1.2023 வரை மஞ்சுளா பெயரில் உள்ள மின் இணைப்பை துண்டிக்க கூடாது எனவும், மேலும் மின் பகிர்மான கழக உதவி பொறியாளர், செயற் பொறியாளர், மேற்பார்வை பொறியாளர் ஆகியோர் அன்று ஆஜராகி தங்களது பதிலை தெரிவிக்கும்படியும் உத்தரவிட்டார்.
- எருமைப்பட்டி அருகே பழையபாளையம் ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் மழையால் 2 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- இந்த ஏரி வழியாக 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைத்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே பழையபாளையம் ஏரி உள்ளது. கொல்லிமலையில் பெய்யும் மழையால் 2 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
அதே சமயம் இந்த ஏரி வழியாக 20-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் அமைத்து மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது . இந்த மின் கம்பங்கள் ஆண்டு முழுவதும் தண்ணீர் உள்ளதால் அடிப்பகுதி பெயர்ந்தும் சேதமடைந்தும் காணப்படுகிறது.
சில மின் கம்பங்கள் கம்பிகளின் உதவியுடன் தொங்கியபடி உள்ளன. சில மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன. முற்றிலும் சாய்ந்தால் பெரும் அசம்பாவிதம் நடக்கும், உயிர்ப்பலி ஏற்படும் என்பதால் அந்த பகுதி விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே ஏரியில் உள்ள மின்கம்பங்களை மாற்றி வேறு இடத்தில நட மின் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு பூசாரிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தார்.
- அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் பாதி மின்கம்பம் லாரியின் மீதுசாய்ந்தது. உடனே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரதாப் (வயது23).
லாரி டிரைவர். இவர் இன்று காலை ராமேஸ்வரம் பகுதியில் இருந்து லாரியில் வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு பூசாரிப்பட்டி பகுதியில் விற்பனைக்காக கொண்டு வந்தார்.
பூசாரிபட்டி பழைய சினிமா கொட்டாய் பகுதி யில் ஒரு விவசாயிக்கு 5 கட்டுகளை இறக்கிவிட்டு லாரி புறப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக மின் கம்பத்தில் லாரி மோதியது. இதில் பாதி மின்கம்பம் லாரியின் மீதுசாய்ந்தது. உடனே டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் .இந்த விபத்தில் மின் இணைப்பு துணிக்கப்படாமல் இருந்தால் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும்.
தகவல் அறிந்த போலீசார் மற்றும் மின் வாரிய அதிகாரிகல் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுபற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தலைவாசல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக உள்ளார்.
- ஆழ்துளை குழாய் கிணற்றில் உள்ள 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி மின்மோட்டாரின் வயர்களை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஆத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் தலைவாசல் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக உள்ளார். அவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் ஆழ்துளை குழாய் கிணற்றில் உள்ள 10 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீர்மூழ்கி மின்மோட்டாரின் வயர்களை நேற்று முன்தினம் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இது குறித்து முருகையன் ஆத்தூர் டவுன் போலீசில் புகார் அளிக்க சென்றார். ஆனால், மின் வயர் திருட்டு தொடர்பாக புகார் வாங்க மறுத்து விட்டனர். இதனால் ஆன்லைன் மூலம் முருகையன் புகார் அளித்தார்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வட்டக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார்.
- மின் இணைப்பிற்கு வீட்டின் அருகே கம்பம் அமைக்க முயன்றபோது, தி.மு.க கவுன்சிலர் எங்களை மிரட்டினார். வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க விடாமல் தடுத்து வருகிறார்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வட்டக்காடு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி, பெற்றோருடன் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துவிட்டு அவர் நிருபர்களிடம் கூறும்போது,
நாங்கள் வாழப்பாடி பகுதியில் வசித்து வருகிறோம். நான், என்னுடன் தங்கை மற்றும் தம்பி ஆகிய 3 பேரும் கல்லூரியில் படித்து வருகிறோம். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு, வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு மின்சார அலுவலகத்தில் மனு அளித்திருந்தோம்.
இந்த நிலையில் மின் இணைப்பிற்கு வீட்டின் அருகே கம்பம் அமைக்க முயன்றபோது, தி.மு.க கவுன்சிலர் எங்களை மிரட்டினார். வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க விடாமல் தடுத்து வருகிறார்.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு, மின் இணைப்பு வழங்க விடாமல் மிரட்டி வரும் தி.மு.க கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுத்து, வீட்டிற்கு உடனடியாக மின் இணைப்பு தர வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
- சேலம் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
- இந்த தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் மின்னாம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கூட்டாத்துபட்டி விளாம்பட்டி,ஏரிபுதூர், நீர்முள்ளிக்குட்டை, கோலாத்துக்கோம்பை, எஸ்.என். மங்கலம், ஏ.என்.மங்கலம், ஜலகண்டாபுரம், அனுப்பூர்,பூசாரிப்பட்டி, பாலப்பட்டி, தேங்கல்பாளையம், குள்ளம்பட்டி, காட்டூர், வலசையூர்,குப்பனூர், தாதனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, வெள்ளியம்பட்டி, கத்திரிப்பட்டி, பூவனூர் ஆகிய பகுதிகளில் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின் செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.
- ஓமலூர் கோட்டத்திற்கு உட்பட்ட தொப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெற உள்ளது.
- பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஓமலூர் கோட்டத்திற்கு உட்பட்ட தொப்பூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (25-ந்தேதி) நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுகுளி, தளவாய்பட்டி, எலத்தூர், சென்னா ரெட்டியூர், கொண்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, சோழியானூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை ஓமலூர் மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால்
- ஆகிய ஊர்களுக்கும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வில்லிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (25-ந் தேதி) வெள்ளிக் கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வில்லி பாளை யம், ஜங்கமநாயக்கன்பட்டி, சின்னம நாயக்கன்பட்டி , சுங்ககாரம்பட்டி, நல்லாகவுண்டம்பாளை யம், பெரியாக்கவுண்டம் பாளையம்,தம்ம காளிபாளையம், பில்லூர், கூடச்சேரி, அர்த்தநாரி பாளையம், மாவுரெட்டி, ஓவியம்பாளையம், தேவி பாளையம், கீழக்கரை, கஜேந்திர நகர், சுண்டக்காம்பாளையம் ஆகிய ஊர்களுக்கும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது என பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
- நாமக்கல் மாவட்டத்தில் மின் நிறுத்த அறிவிப்பு மின்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 8- ந் தேதி
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்ய உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் மின் நிறுத்த அறிவிப்பு மின்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 8- ந் தேதி மெட்டல்லா, ஆனங்கூர், சமயசங்கிலி, 12- ந் தேதி நல்லூர், சோழசிராமணி, ஜேடர்பாளையம், மல்லசமுத்திரம், 14 -ந் தேதி நாமகிரிப்பேட்டை, இளநகர், இமல்லி, கொமரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை, உப்புபாளையம், 16- ந் தேதி சேந்தமங்கலம், பரமத்திவேலூர், முசிறி, 19- ந் தேதி வளையப்பட்டி, திருச்செங்கோடு, உஞ்சனை, 20- ந் தேதி ராசிபுரம், எஸ்.வாழவந்தி, நாமக்கல், 21 - ந் தேதி காளப்பநாயக்கன்பட்டி, எருமப்பட்டி, கபிலர்மலை, பருத்திபள்ளி, வில்லிபாளையம், 26- ந் தேதி கெட்டிமேடு, பள்ளக்காபாளையம், ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்ய உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.