என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகளுக்கு"

    • கரும்பு சாகுபடி குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.
    • உழவன் செயலி பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் நீடித்த நவீன கரும்பு சாகுபடி குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    வேளாண்மை உதவி இயக்குனர் கனிமொழி தலைமை வகித்தார். இதில், விதைச் சான்று அலுவலர் நாசர் அலி, உதவி தோட்டக்கலை அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர் வேளாண் விற்பனைத்துறை அலுவலர்கள் பங்கேற்று, அரசு துறை சார்ந்த மானிய திட்டங்கள், சந்தேகங்கள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    மேலும், இப்பயிற்சியில் விவசாயிகளுக்கு கரும்பு சாகுபடி மானியம், ஒரு பருகரணை நடுவதால் ஏற்படும் நன்மைகள், இயந்திரத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், நீர் மற்றும் உர மேலாண்மை, சொட்டுநீர் பாசனத்தின் பயன்கள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    வட்டாரத் திட்ட மேலாளர் பிரபாகரன், உழவன் செயலி பயன்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கமளித்தார்.

    உதவித் திட்ட மேலாளர் தியாகராஜன் சிறுதானியத்தின் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். விதை சான்று அலுவலர் நாசர் அலி, விதைப்பண்ணை அமைத்தல், விதை தேர்வு, ரகங்கள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளித்தார்.

    இப்பயிற்சியில் 40-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம்’’ குறித்து ஆவல்நாய்க்கன்பட்டி கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு விவசாயிகள் பயிற்சி வழங்கப்பட்டது.
    • உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    நாமக்கல் வட்டார வேளாண்மைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தின் கீழ் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் மூலம் 'கிராம அளவிலான விவசாய மேம்பாட்டுக் குழுவிற்கு முன் பருவ மற்றும் பின் பருவ பயிற்சி திட்டம்'' குறித்து ஆவல்நாய்க்கன்பட்டி கிராம வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு விவசாயிகள் பயிற்சி வழங்கப்பட்டது. அதுசமயம் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட பல்வேறு முன்னோடித் திட்டங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம், முதல்-அமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம், தமிழ்நாடு சிறுதானிய இயக்கம், ஒருங்கிணைந்த பண்ணையம், பயறு பெருக்குத் திட்டம் உள்பட பல முன்னோடி நலத்திட்டங்கள் செயல்படுத்தபடுகிறது. மேலும் முக்கிய திட்டங்களில் உள்ள இடை வெளியினை குறைக்கும் வகையில் விவசாயிகளின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்திடவும் அவர்க ளின் வருமானத்தை உயர்த்திடவும் பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய "மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம்" கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படுகின்றது என்று விளக்கமளித்து பயிற்சி வழங்கினார். இதில் உடன் உதவி வேளாண்மை அலுவலர் பெரியசாமி துறைசார்ந்த மானியத்திட்டங்களை எடுத்துக்கூறினார். அட்மா திட்ட உழவனின் நண்பன் நந்தகுமார் அட்மா திட்ட செயல்பாடுகள் மற்றும் இக்குழுவின் செயல்பாடுகள் குறித்து எடுத்து கூறினார். அட்மா திட்ட வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர். ரமேஷ் மற்றும் உதவி தொழில் நுட்ப மேலாளர். கவிசங்கர் ஆகியோர் வருகைபுரிந்த விவசாயி களுக்கு உழவன் செயலி பயன்களை விளக்கமளித்து பதிவேற்றம் செய்தும் நன்றி கூறி இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், 5000 பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வழங்கி தொடங்கி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.
    • 4 வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.28 லட்சம் மானியத்தில், 33 பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சங்ககிரி:

    சென்னையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், 5000 பவர் டில்லர்களை விவசாயிகளுக்கு அரசு மானியத்தில் வழங்கி தொடங்கி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    அதனையடுத்து வேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் சங்ககிரி உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், சங்ககிரி, மகுடஞ்சாவடி, எடப்பாடி, கொங்கணாபுரம் ஆகிய 4 வட்டாரங்களில் உள்ள விவசாயிகளுக்கு ரூ.28 லட்சம் மானியத்தில், 33 பவர் டில்லர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சங்ககிரி உதவி செயற்பொறியாளர் மூர்த்தி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக வட்டார ஆத்ம குழு தலைவர்கள் ராஜேஷ் (சங்ககிரி), பரமசிவம் (கொங்கணாபுரம்), பச்சமுத்து (மகுடஞ்சாவடி), நல்லதம்பி (எடப்பாடி) ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பவர் டில்லர்களை வழங்கினார்கள்.

    மேலும், உதவி பொறியாளர்கள் செல்வன், கிருஷ்ணமூர்த்தி, வைத்தீஸ்வரி ஆகியோர் அரசு திட்டங்கள், பவர் டிரில்லர்களின் பயன்கள் மற்றும் செயல்முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

    இதில் விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

    • ஜேடர்பாளையம் கரப்பாளை யத்தை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
    • இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த கரும்பு ஆலையில் பணியாற்றிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் கரப்பாளை யத்தை சேர்ந்த இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அப்பகுதியில் செயல்பட்டு வந்த கரும்பு ஆலையில் பணியாற்றிய 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.

    இதனை தொடர்ந்து புதுப்பாளையத்தில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசைகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். தொடர் வன்முறையால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த விவசாயிகளின் தோட்டத்தில் பாக்குமரங்கள், வாழை மரங்கள், மரவள்ளி பயிர்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.

    நிவாரண உதவி

    இந்த நிலையில் கொலை யுண்ட இளம்பெண் குடும்பத்தாருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல்-அமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் நிவாரண தொகையை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் கலெக்டர் டாக்டர் உமா ஆகியோர் கபிலர்மலை யூனியன் அலுவலகத்தில் வழங்கினார்கள்.

    மேலும் அவரது 2 குழந்தைகளுக்கு வருங்கால வைப்பு நிதியாக தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்கள். வாழை, பாக்கு மரம் மற்றும் டிராக்டர் எரித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரண தொகை வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நாமக்கல் எம்.பி. சின்ராஜ், தி.மு.க. நாமக்கல் மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், திருச்செங்கோடு ஆர்.டி.ஓ. சுகந்தி, கபிலர்மலை ஒன்றிய செயலாளர் சண்முகம், பரமத்தி ஒன்றிய செயலாளர் தனராஜ், கபிலர்மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிரிஜா, புஷ்பராஜன், பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி, பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவர் டாக்டர்.சோமசேகர், துணைத்தலைவர் முருகவேல், பிலிக்கல் பாளையம் ஊராட்சி தலைவர் மணிமேகலை லோகநாதன், அ. குன்னத்தூர் ஊராட்சி தலைவர் எம்.ஜி.ஆர் என்கிற ரமேஷ், ஆனங்கூர் ஊராட்சி தலைவர் மோகன்ராஜ், வடகரையாத்தூர் ஊராட்சி தலைவர் மஞ்சுளா குணசேகரன் மற்றும் ஊராட்சி செயலர்கள் சசிகுமார், பொன்னுவேல், ரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுக்களின் தாக்குதல் தற்பொழுது அதிகமாக காணப்படுகிறது.
    • இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருங்குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை வயலில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் நிலக்கடலை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழுக்களின் தாக்குதல் தற்பொழுது அதிகமாக காணப்படுகிறது. இது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெருங்குறிச்சி கிராமத்தில் விவசாயிகளுக்கு நிலக்கடலை வயலில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. பெருங்குறிச்சி ஊராட்சி தலைவர் திரு மாணிக்கம் இந்த வயல்வெளி முகாமிற்கு முன்னிலை வகித்தார்.

    கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி தலைமை வகித்து நிலக்கடலை சாகுபடியை பாதிக்கும் பல்வேறு பூச்சிகளை கட்டுப்படுத்துவது குறித்து விளக்கி கூறினார்.

    நிலக்கடலையில் சிவப்பு கம்பளிப்புழு தாக்கும் பருவம், தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விளக்கினார். வேளாண்மை அலுவலர் அன்புச்செல்வி நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழுவை ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளில் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்து விளக்கி கூறினார்.

    நிலக்கடலை சிவப்பு கம்பளிப்புழு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகள் அறிந்து கொள்வதற்கான பிரசுரங்கள் இந்த முகாமில் விநியோகம் செய்யப்பட்டது. வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் பிரதம மந்திரி பயிர் காப்பீடு குறித்தும், வேளாண் கடன் அட்டை குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினார்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர் சந்திரசேகரன் மற்றும் அட்மா தொழில்நுட்ப உதவி மேலாளர் ஜோதிமணி இணைந்து செய்திருந்தனர்.

    சேலத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், கடனுதவியை கலெக்டர் கார்மேகம் வழங்கினார்
    சேலம்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த விழாவில் தமிழகம் முழுவதும் ஊராட்சிகளில்  “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை” தொடங்கி வைத்தார். 

    சேலம் மாவட்டத்தில் 86 கிராம பஞ்சாயத்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது. இந்த ஊராட்சிகளில் முதல்-அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சி காணொலி மூலமாக ஓளிபரப்பப்பட்டது.

    அயோத்தியாபட்டணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் கலந்துகொண்டார்.விழாவில் வேளாண்மை – உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை - மலைப் பயிர்கள் துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.9,770  மதிப்பிலான மானியத்துடன் கூடிய இடுபொருட்களும், ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 3 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளையும்  கலெக்டர் கார்மேகம் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வம், வேளாண் இணை இயக்குநர் கணேசன், அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றியக்குழு  தலைவர்  புவனேஸ்வரி செந்தில்குமார் மற்றும் விவசாயிகள்  கலந்துகொண்டனர்.
    சேலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு தலா ரூ.2 ஆயிரம் பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார்.
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 82 விவசாயிகள் பிரதம மந்திரியின் கவுரவ நிதித் திட்டத்தின்  (பி.எம்.கிசான் திட்டம்)  மூலம் 4 மாதங்களுக்கு ஒரு முறை  தலா ரூ.2 ஆயிரம்  என ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய்  பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில்  விவசாயிகளுக்கான நிதியுதவித் திடடத்தின் கீழ் 10 கோடி விவசாயிகளுக்கு 11-வது தவணையாக ரூ.21,000 கோடியை பிரதமர் நரேந்திரமோடி வழங்கினார். இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக  தலா ரூ.2000 செலுத்தப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதேபோல் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு லட்சத்துக்கும்  அதிகமான விவசாயிகளுடைய  வங்கி கணக்கில் தலா ரூ.2000 செலுத்தப்பட்டது. 10-வது தவணை பணம் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதி புத்தாண்டு தினத்தில்  பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தினார்.

    சேலம் மாவட்டத்தில் மட்டும் 1 லட்சத்து 57 ஆயிரத்து 475 விவசாயிகள் பொதுத்துறை வங்கிகளின் மூலம் உழவர் கடன் அட்டை (கிசான் கார்டு) பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
    ×