என் மலர்
நீங்கள் தேடியது "திடீரென"
- தினமும் ஏராளமான நோயாளிகள் வருவது வழக்கம்.
- குப்பை கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது
நாகர்கோவில் :
தக்கலை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் வருவது வழக்கம். இந்த மருத்துவமனையின் பின்புறம் பிணவறை உள்ளது. அதனருகில் மருத்துவ மனை ஊழியர்கள் குப்பை கழிவுகள் போடுவது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை அந்த குப்பை கழிவுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஆஸ்பத்திரி வளாகம் பெரும் புகை மண்டலமாக காணப்பட்டது. இதை கண்ட நோயாளிகள் பலர் ஓட்டம் பிடித்தனர்.
இது பற்றி அருகில் உள்ள குடியிருப்பு மக்கள் தக்கலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் சிலர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு தீயை அணைந்தனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த தே.மு.தி.க. கவுன்சிலர் கூறும் போது, "தக்கலை அரசு மருத்துவமனையில் உள்ள கழிவுகளை அதற் கான குடியிருப்பு இல்லாத பகுதியில் கொட்டி எரித் தால் இது போன்ற சம்பவங்கள் நடக்காது. அரசு இது குறித்து ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார். மருத்துவமனை வளாகத்தில் திடீரென தீ பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
- அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, ஒத்தக்கடை, கந்தம்பாளையம், நல்லூர், மணியனூர் ,பெருங்குறிச்சி, குப்பிக்காபாளையம், சுள்ளிப் பாளையம், சோளசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி, கொத்தமங்கலம், சிறுநல்லிகோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், வடகரை யாத்தூர், கு.அய்யம்பா ளையம், பிலிக்கல்பாளையம், சேளூர், கொந்தளம், கோப்ப ணம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இரவு முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர் .அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பூக்கடைகள் பழக்கடைகள் ,பலகார கடைகள், துணிக்கடைகள், மண்பாண்டம் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டது. கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருத்தது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மழையின் காரணமாக வியாபாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.