என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electronic"

    • பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022 மூலமாக குப்பை சேகரிக்கும் மி்ன்னணு ஆட்டோ வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிகயில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022 மூலமாக குப்பை சேகரிக்கும் மி்ன்னணு ஆட்டோ வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பரசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கபிலர்மலை அட்மா தலைவரும், ஒன்றிய கவுன்சிலரும், ஒன்றிய கழக செயலாளருமான சண்முகம், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், மாவட்ட துணை செயலாளர்கள் அன்பழகன், மயில்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், சிவக்குமார், பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு ‘சீல்’ வைத்தனர்.
    • அங்கு போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நேற்று முன்தினம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் நடந்தது.

    இரவு 9.15 மணிக்கு இறுதி சுற்று அறிவிக்கப்பட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவ னுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் வெற்றி பெற்றமைக்கான சான்றிதழை வழங்கினார்.

    இதற்கிடையில் அவ்வப்போது எண்ணி முடிக்கப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள், கட்டு ப்பாட்டு கருவி, வி.வி.பேட் ஆகியவை பாதுகாப்பு அறையில் கொண்டு சென்று அதற்கான இடத்தில் வைத்தனர்.

    ஓட்டு எண்ணிக்கை முடிந்த பின் அந்த அறையில் தேர்தல் தொடர்பான எந்த பொருட்களும் இல்லாமல் அகற்றினர்.

    பின்னர் வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள், தேர்தல் பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் முன்னிலையில் மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு 'சீல்' வைத்தனர்.

    அங்கு ஒரு ஏ.டி.எஸ்.பி. தலைமையில் போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஓரிரு நாளில் ஓட்டுப்பெட்டிகள் அங்கிருந்து ஈரோடு மாநகராட்சி அலுவல கத்துக்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைக்க உள்ளனர்.

    • சேலம் சித்தர் கோவில் மெயின் ரோடு அம்மன் நகர் பகுதியில் சிவதாபுரம் மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது.
    • எனவே இனி சிவதாபுரம், நெத்திமேடு மின்சார வாரிய அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு மேற்கண்ட சொந்த கட்டிடத்தில் செயல்படும்.

    சேலம்:

    சேலம் சித்தர் கோவில் மெயின் ரோடு அம்மன் நகர் பகுதியில் சிவதாபுரம் மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று புத்தூர் இட்டேரி ரோடு, கொடம்பைகாடு பகுதியில் நெத்திமேடு புறநகர் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த 2 அலுவலகமும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தன.

    இந்த நிலையில் கந்தம்பட்டி சித்தர் கோவில் மெயின்ரோடு, கிருஷ்ணப்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் எதிரில் புதிதாக சொந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. எனவே இனி சிவதாபுரம், நெத்திமேடு மின்சார வாரிய அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு மேற்கண்ட சொந்த கட்டிடத்தில் செயல்படும். இந்த தகவலை சேலம் மேற்கு கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்து உள்ளார்.

    சேலம் செவ்வாய்ப்பேட்டையில் எலக்ட்ரானிக் கடையில் திருட்டு சம்பவத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சேலம்:

    சேலம் குகை பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் கடந்த 1-ந் தேதி ஷட்டரை உடைத்து பொருட்களை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்றது. 

    இதையடுத்து செவ்வாய்ப்பேட்டை போலீசார் அங்கு உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து கொள்ளையர்களை தேடி வந்தனர். அப்போது இந்த கொள்ளையில் ஈடுபட்டது கிச்சிப்பாளையத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் என்பது தெரியவந்தது. 

    அவர்களை போலீசார் நேற்று இரவு மடக்கி பிடித்தனர் .தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×