என் மலர்
நீங்கள் தேடியது "அரசு கலைக்கல்லூரி"
- ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனர்.
- தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தாராபுரம் :
திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தில் அரசு கலைக்கல்லூரி கட்டும் பணி மற்றும் மூலனூா், குண்டடம் ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.23.25 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப்பணிகளை செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடா்ந்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:- தாராபுரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் அருகில் ரூ.11.38 கோடி மதிப்பில் அரசு கலைக்கல்லூரி கட்டும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி நபாா்டு வங்கி நிதி உதவியின் கீழ் கட்டப்பட்ட மயில்ரங்கம் ஆட்டுச்சந்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தையில் 40 கடைகளுடன், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் வகையில் 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க இலக்காக நிா்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.
முன்னதாக மூலனூா் பேரூராட்சி வாா்டு எண் 8ல் பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வடுகப்பட்டி சாலை முதல் வெங்கல்பட்டி சாலை வரை ரூ.30 லட்சம் மதிப்பில் சிமென்ட் சாலை அமைத்தல், ரூ.6.67 லட்சம் மதிப்பில் சின்னகாம்பட்டி ஆதிதிராவிடா் காலனியில் புதிய மின்மாற்றியை தொடங்கி வைத்தல், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சூரியநல்லூா் ஊராட்சி, சோ்வகாரன்பாளையம் அன்னமாா் கோவில் அருகில் பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.17 கோடி மதிப்பீட்டில் மானூா்பாளையம் முதல் மேற்கு சடையம்பாளையம் சாலை வரை புதிய தாா்சாலை அமைத்தல், ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புளியம்பட்டி முதல் வெள்ளியம்பாளையம் வரை புதிய தாா்சாலை அமைத்தல் என மொத்தம் ரூ.23.25 கோடி மதிப்பீட்டிலான வளா்ச்சித் திட்டப்பணிகளைத் அமைச்சா்கள் தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் அசோக்குமாா், திருப்பூா் மாநகராட்சி 4வது மண்டலத்தலைவா் இல.பத்மநாபன், தாராபுரம் நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன், மூலனூா் பேரூராட்சி தலைவா் தண்டபாணி, தாராபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
- அரசு கலைக்கல்லூரிகளில் தமிழகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- மே மாதத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு தொடங்குகிறது.
சென்னை:
அரசு கலைக்கல்லூரிகளில் தமிழகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தாமதமாக தொடங்கின.
இதனால் பாடத்திட்டங்களை பருவத்தேர்வுக்கு முன்னதாக முடிப்பதில் சிரமம் உள்ளது.
மே மாதத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு தொடங்குகிறது. அதற்குள் பாடப்பகுதியை முடிக்க அனைத்து கலைக்கல்லூரிகளுக்கும் கல்லூரி இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
மே 1-ந் தேதிக்குள் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அதனால் அனைத்து அரசு, உதவி பெறும் கலைக்கல்லூரிகளில் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி பாடப் பகுதிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 14 இளநிலை பட்டப்படிப்புகளும் 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன.
- பொதுப்பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.
உடுமலை :
உடுமலை அரசு கலைக்கல்லூரியில் பொதுப்பிரிவு மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கீ.கல்யாணி கூறியதாவது:- உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 14 இளநிலை பட்டப்படிப்புகளும் 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளன. இதில் 2023- 2024 ம் கல்வியாண்டிற்கு இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின் படி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் சிறப்பு பிரிவில் மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு துறை என மொத்தம் 21 பேர் சேர்ந்தனர். அதைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையில் பெற்ற தரவரிசைப்படி பொதுப்பிரிவு மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.
இதில் பிபிஏ., பாடப்பிரிவில் 10 மாணவர்களும்,பி.காம் பாடப்பிரிவில் 52 மாணவர்களும்,பி.காம்(சிஏ) பாடப்பிரிவில் 59 மாணவர்களும்,இ.காமர்ஸ் பாடப்பிரிவில் 11மாணவர்களும்,பொருளியல் பாடப்பிரிவில் 6 மாணவர்களும், அரசியல் அறிவியல் பாடப்பிரிவில் 2 மாணவர்களும் ஆக மொத்தம் 140 மாணவ, மாணவிகள் சேர்ந்தனர் .முதல் கட்ட கலந்தாய்வின் 3- ம் நாளான இன்று கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கைக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் அறிவியல் பாடப்பிரிவிற்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.கலந்தாய்வுக்கு வருகை தரும் மாணவர்கள் 10,11,12-ம்வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் , மாற்று சான்றிதழ்,ஆதார் அட்டை,சாதிச்சான்றிதழ் ஆகிய அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் 3 நகல்கள், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 6 , இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல்,தரவரிசை நகல் , கல்லூரிக்கட்டணம் உள்ளிட்டவற்றை கொண்டு வரவேண்டும்.கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் கட்டாயம் பெற்றோருடன் வரவேண்டும்.இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
- வருகிற 22-ந்தேதி மற்றும் 23-ந்தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடை பெறுகிறது.
- 23-ந்தேதி அன்று கணிதம், இயற்பியல், உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கும் பொதுக்கலந்தாய்வு நடைபெறும்.
கும்பகோணம்:
கும்பகோணம், அரசு கலைக் கல்லூரி முதல்வர் மாதவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்ப தாவது:-
கும்பகோணம், அரசினர் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவ மாணவியர்களுக்கான பொதுக் கலந்தாய்வு வருகிற 22-ந் தேதி மற்றும் 23 ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடை பெறுகிறது.
வருகிற 22 ந் தேதி அன்று தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, இந்திய பண்பாடு மற்றும் சுற்றுலாவியல், வணிகவியல், வணிக மேலாண்மை மற்றும் புவியியல் ஆகியப் பாடப்பிரிவுகளுக்கும்
23-ந் தேதி அன்று கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், புள்ளியியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் பொதுக்கலந்தாய்வு நடை பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நடப்பாண்டில் 89 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
- ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சேலம்:
சேலம் வின்சென்டில் இயங்கி வரும் அரசு கலை கல்லூரியில் சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த கல்லூரியில் 20 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. இளநிலை படிப்புக்கு 1400 இடங்கள் உள்ளன. இதற்காக நடப்பாண்டில் 89 ஆயிரத்து 51 பேர் விண்ணப்பித்து உள்ளனர். இங்கு சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு கடந்த 29-ந் தேதி நடைபெற்றது.
இந்தநிலையில் பொதுப்பிரிவினருக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று கல்லூரியில் தொடங்கியது. கல்லூரி முதல்வர் செண்பக லெட்சுமி கலந்தாய்வை தொடங்கி வைத்தார்.
இதில் இளங்கலை கணிதம், புள்ளியில், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புவியியல், நிலவியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அப்போது கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.சி.ஏ., பி.ஏ. தமிழ், பி.காம், பி.காம். சி.ஏ, பி.காம். கூட்டுறவு, நிலவியல் உள்பட பல்வேறு பாடப் பிரிவுகளை மாணவ-மாணவிகள் விரும்பி தேர்வு செய்தனர். இதனால் அந்த பாடங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டது. தொடர்ந்து நாளை ( 11-ந் தேதி) பி.காம், பிகாம் சி.ஏ., கூட்டுறவு, பி.பி.ஏ., பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல் அறிவியில் மற்றும் பொது நிர்வாகம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
இந்த கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பெறப்பட்ட செல்போன்குறுஞ்செய்தி, இ.மெயில் விவரம் ஆகியவற்றுடன் 10,11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் , சாதி சான்று, மாற்று சான்று, ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை கொண்டு வர அறிவுறுத்தப்பட்டிருந்தது. வருகிற 15-ந் தேதி வரை இந்த கலந்தாய்வு நடைபெறுகிறது.