என் மலர்
நீங்கள் தேடியது "Monkey pox"
- பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது.
- இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு வரக்கூடும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தற்போது பல நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்திவிடும்.
குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் தடுப்புகள் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.
இந்தியாவிலும் குரங்கு அம்மை பாதிப்பு வரக்கூடும் என்பதால், பல்வேறு மாநிலங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரில் எம்பாக்ஸ் கிளேட் 2 நோய்த் தொற்றினால் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் இந்த வாரம் பதிவான ஒரு எம்பாக்ஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியது.
பல்வேறு நாடுகளிலும் குரங்கு அம்மையின் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வருவதால் இது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
- குரங்கம்மை பொதுமக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
- குரங்கம்மை நோய் எப்படி பரவும்?
'மங்கி பாக்ஸ்' எனப்படும் குரங்கம்மை நோய் உலகளவில் வேகமாக பரவி, பொதுமக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
விமானத்தில் பயணிப்பவர்கள் மூலம் ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு எளிதாக ஊடுருவி விடுவதால் விமான நிலையங்களில் கண்காணிப்பும், கடும் பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.
இந்த நோய் பற்றியும், அதன் தன்மை குறித்தும், அது ஏற்படுத்தும் அச்சுறுத்தல்கள், மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.

ஒருவருக்கு குரங்கம்மை நோய் எப்படி பரவும்?
முக்கியமாக விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. அதேவேளையில் ஒரு மனிதனிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுவதும் சாத்தியம். குறிப்பாக பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மற்றொருவருக்கு நெருங்கிய தொடர்பு மூலமாகவும், சுவாசத் துளிகள் மூலமாகவும் பரவக்கூடும்.
விலங்குகளின் மூலம் பரவுவதை பொறுத்தவரை குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ள விலங்குடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலமாகவும், அந்நோய் பாதிப்புக்குள்ளான விலங்குகளின் இறைச்சியை உண்பதன் மூலமாகவும் பரவும்.
மனிதர்களை பொறுத்தவரை குரங்கம்மை பாதிக்கப்பட்டவருடன் உடல் ரீதியாக நெருங்கிய தொடர்பில் இருப்பது, அவர்களின் உடைகள், படுக்கை அறை, துண்டு போன்றவற்றை உபயோகிப்பது மூலம் பரவும்.
உமிழ்நீர், சுவாச துளிகள் (தும்மல், இருமல்) மூலமும், கருவில் வளரும் குழந்தைக்கு தாயின் நஞ்சுக்கொடி மூலமும் எளிதில் பரவக்கூடும்.

குரங்கம்மை நோய்க்கு தடுப்பூசி உள்ளதா?
சின்னம்மை ஒழிப்பு திட்டத்தின்போது பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகளை இந்த நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள பயன்படுத்தலாம். இருப்பினும், 1980-ம் ஆண்டுக்கு உலக அளவில் சின்னம்மை ஒழிக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததை தொடர்ந்து இந்தியாவில் தடுப்பூசி எதுவும் தயாரிக்கப்படவில்லை.
ஜென்னோஸ்டம் என்ற பெயருடைய தடுப்பூசியை குரங்கு அம்மை, சின்னம்மை நோய்க்கு பயன்படுத்த அமெரிக்கா உரிமம் பெற்றுள்ளது.
குழந்தைகளுக்கு இந்த நோய் எளிதில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விழிப்புணர்வுடன் தற்காப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியமானது.

குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன?
காய்ச்சல், முகம், கைகள், கால்கள், கண்கள், வாய் அல்லது பிறப்புறுப்புகளில் கொப்புளங்களுடன் கூடிய கடுமையான தோல் வெடிப்பு மற்றும் நிணநீர் கணுக்களில் வீக்கம் ஆகியவை முக்கியமான அறிகுறிகள்.
காய்ச்சல் ஏற்பட்ட முதல் 3 நாட்களுக்குள் சொறி உணர்வு ஏற்படலாம். முதலில் வாய், நாக்கு பகுதியில் புண்கள் தோன்றும். பின்பு முகத்தில் சொறி உணர்வு தோன்றி 24 மணி நேரத்திற்குள் கைகள், கால்கள் என உடலில் மற்ற பகுதிகளுக்கு பரவி கொப்புளங்களாக மாறும்.
4, 5-வது நாளில், கொப்புளங்கள் பெரிதாகிவிடும். 2-வது வார முடிவில், அவை உலர்ந்து விடும். இதனுடன் தொடர்புடைய மற்ற சில அறிகுறிகள்: ஆஸ்தீனியா (கடுமையான உடல் பலவீனம்), தலைவலி, தசை வலி, உடல் வலி, முதுகுவலி, தொண்டை புண், இருமல், வியர்வை, உடல் குளிர்ச்சி.
சின்னம்மை போன்றது தானா?
குரங்கம்மையும் சின்னம்மையை போன்றே போக்ஸ்விரிடே குடும்பத்தை சேர்ந்தது. நோய் அறிகுறிகளும் கிட்டத்தட்ட சின்னம்மை போலவே இருக்கும். ஆனால் கூடுதலாக நிணநீர் அழற்சியையும் (நிணநீர் கணுக்களில் வீக்கம்) ஏற்படுத்தும்.
சின்னம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு இந்த அறிகுறி ஏற்படாது. அத்துடன் சின்னம்மையுடன் ஒப்பிடும்போது இறப்புக்கு வழிவகுக்கும் அச்சுறுத்தலையும் குரங்கம்மை நோய் கொண்டிருக்கிறது.
மறுபுறம் சின்னம்மையை பொறுத்தவரை விரிசெல்லா-ஜோஸ்வர் வைரஸ் மூலம் ஏற்படுகிறது. இருப்பினும் சின்னம்மை, குரங்கம்மை இவை இரண்டும் சுவாசம் மற்றும் தோல் தொடர்பு மூலம் பரவுகின்றன.

குரங்கம்மை என்றால் என்ன?
இது வைரஸ் ஜூனோடிக் நோயாகும். அதாவது விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்தொற்று.
இந்தியாவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா?
கேரளாவில் மார்ச் மாதத்தில் முதல் நோய்த்தொற்று பதிவானது. சுமார் 30 பேர் இந்த நோய் தொற்று அறிகுறிகளுக்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும் குரங்கம்மை வைரஸ் தொற்று அதிகரிப்பதற்கான அபாயம் குறைவாக இருப்பதாகவும், பீதி அடைய தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.
குரங்கம்மையை எவ்வாறு தடுப்பது?
* அறிகுறிகள் தென்பட்டால் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும். உடனே மருத்துவரை அணுகவும்.
* நோய் பாதிப்புக்குள்ளான அல்லது சந்தேகிக்கப்படும் நபருடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.
* நோயாளியுடன் தொடர்பில் இருக்கும் படுக்கை, பாத்திரங்கள் போன்ற எந்தவொரு பொருளையும் தொடுவதை தவிர்க்கவும்.
* கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* பாதிக்கப்பட்ட நபரின் கொப்புளத்தைத் தொடுவதை தவிர்க்கவும்.
முதல் நோய்த்தொற்று எப்போது உறுதிபடுத்தப்பட்டது?
1970-ம் ஆண்டு காங்கோ நாட்டில் ஒரு குழந்தை இந்த நோய் பாதிப்புக்குள்ளாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் அந்த குழந்தைக்கு பெரியம்மை தொற்று இருப்பதாகவே சந்தேகிக்கப்பட்டது.
தொடர் பரிசோதனையின் முடிவில் குரங்கம்மை தொற்றுக்கு ஆளாகி இருப்பது உறுதிபடுத்தப்பட்டது. குரங்குகளை தவிர அணில், அந்நாட்டை சேர்ந்த ஒரு வகை எலி, டார்மிஸ் போன்ற விலங்குகள் மூலமும் இந்த வைரஸ் தொற்று பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய் கொடியதா?
குரங்கு அம்மை அறிகுறிகள் சில வாரங்களுக்குள் தானாகவே மறைந்துவிடும். ஆனால் சிலருக்கு இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகளான நிமோனியா, மூளை அழற்சி, கண் நோய்த்தொற்றுகள் (பார்வை இழப்புக்கு வழிவகுக்கக்கூடும்) மற்றும் மரணம் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். எனவே ஆரம்ப நிலையிலேயே முறையான சிகிச்சைகளை மேற்கொள்வது அவசியமானது.
குரங்குகளால் இந்த நோய் பரவுகிறதா?
1958-ம் ஆண்டு, சிங்கப்பூரில் இருந்து டென்மார்க் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பப்பட்ட குரங்குகள் நோய் பாதிப்புக்குள்ளாகி, இந்த நோய் பரவியது. எனவே `குரங்கம்மை' என்று அழைக்கப்படுகிறது.
- உடலில் இருந்து திரவ மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது.
- முன்தினம் வளைகுடா நாட்டில் இருந்து கேரள திரும்பிய அந்த நபர்,காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
திருவனந்தபுரம்:
மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது கேரள மாநில மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் அங்கு குரங்கம்மை அறிகுறியுடன் வாலிபர் ஒருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நேற்று முன்தினம் வளைகுடா நாட்டில் இருந்து கேரள திரும்பிய அந்த நபர்,காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் அம்மை நோய் போன்று கையில் தழுப்புகள் இருந்ததால் அவர் சிகிச்சை பெற மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகள் இருந்ததை டாக்டர்கள் பார்த்தனர். இதனால் அவரது உடலில் இருந்து திரவ மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. பரிசோதனை முடிவில் தான் அந்த நபருக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு உள்ளதா? என்பது உறுதியாக தெரியவரும்.
- கேரளாவில் இருந்து வாகனங்களில் வரக்கூடியவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- தமிழக எல்லை பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகிறோம்.
களியக்காவிளை:
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பரவியுள்ளது. இதனால் அங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை கேரள மாநில சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது.
கேரளாவில் நிபா வைரஸ் மற்றும் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டிருப்பதையடுத்து, மாநில எல்லையில் உள்ள மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கன்னியாகுமரி, தென்காசி, நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் தமிழக சுகாதாரத் துறையினர் கண்காணிப்பை தொடங்கியுள்ளனர்.
குமரி மாவட்டத்தை பொருத்தவரை கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் வரக்கூடியவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் களியக்காவிளை சோதனை சாவடியில் பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வவிநாயகம், குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் காய்ச்சல் பரிசோதனை பணி உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர்.
அது தொடர்பாக குமரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மீனாட்சியிடம் கேட்டறிந்தனர். பின்பு பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு துறை இயக்குனர் செல்வவிநாயகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

களியக்காவிளை சோதனைச்சாவடியில் குரங்கம்மை மற்றும் நிபா வைரஸ் பாதிப்பு ஆகிய இரண்டு காரணங்களுக்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. நிபா வைரசை பொருத்தமட்டில் பழம் தின்னி வவ்வால்கள் மூலமாக பரவ வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு வந்து விட்டால் மற்றவர்களுக்கும் பரவுகிறது.
குரங்கம்மையை பொருத்தமட்டில் ஆப்பிரிக்கன் நாடுகளில் உள்ளது. பெரியவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கம்மை நோய்பாதிப்பை ஆய்வு செய்ய சென்னை கிண்டியில் ஆய்வகம் உள்ளது. நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகள் புனேக்கு அனுப்பி வைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை. தமிழக எல்லை பகுதிகளில் சோதனை மேற்கொண்டு வருகிறோம். அதுமட்டு மின்றி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? எங்கிருந்து சிகிச்சைக்கு வந்துள்ளார்கள்? என்பது குறித்த விவரங்களை கண்காணித்து வருகிறோம்.
பொதுமக்களுக்கு தங்களது பாதிப்பு இருந்தால் உடனடியாக அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உடனடியாக சோதனை செய்து கொள்ள வேண்டும். நமக்கு மருந்து மாத்திரைகள் அனைத்தும் போதுமான அளவு உள்ளது. குரங்கம்மையை பொருத்த மட்டில் 4 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா 10 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நிபா வைரசுக்கு சிகிச்சையளிக்க அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் தனியாக வார்டு தயார் செய்யப்பட்டுள்ளது. ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வதுடன் அவரது குடும்பத்தினரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் நல்ல விழிப்புணர்வு உள்ளது. பொதுமக்களே காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று வருகிறார்கள். சோதனை சாவடியில் கடந்த மூன்று நாட்களில் பார்க்கும் போது 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் காய்ச்சல் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
காய்ச்சல் இருந்தால் யாரும் பயணம் செய்யக் கூடாது என்று விழிப்புணர்வு மக்களிடம் உள்ளது. எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் 3 ஷிப்டுகளாக போலீசார், சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.