என் மலர்
நீங்கள் தேடியது "மஞ்சள் நீராட்டு விழா"
- மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
- மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியுடன் தைப்பூச தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.
ஊத்துக்குளி :
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவில் தைப்பூசதிருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களாக காலை மற்றும் மாலை நேரத்தில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 4-ந் தேதி காலை சாமி திருவீதி உலா நிகழ்ச்சியும் மாலை 4 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 5-ந் தேதி கீழ் தேரோட்டம் நடைபெற்றது. 6-ந் தேதி பரிவேட்டை நிகழ்ச்சியும் 7-ந் தேதி இரவு கோவிலுக்கு முன்புறம் அமைந்துள்ள நவீன தெப்பத்தில் சாமி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணம், மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மகா தரிசனம், சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று மஞ்சள் நீராட்டு விழா நிகழ்ச்சியுடன் தைப்பூச தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைந்தது.
- பக்தர்கள் ஒருவர் மீது மற்றொருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள்.
- கம்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும்.
ஈரோடு:
ஈரோட்டில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. இந்த கோவிலிலும், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் ஆகிய வகையறா கோவில்க–ளிலும் நடப்பட்ட கம்பத்துக்கு தினமும் பக்தர்கள் புனித நீரூற்றி வழிபட்டு வருகின்றனர். குண்டம் விழா, தேர் திருவிழா போன்றவை நடந்து முடிந்து விட்டன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கும் விழாவும், மஞ்சள் நீராட்டு விழாவும் இன்று (சனிக்கிழமை) மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. 3 கோவில்களிலும் நடப்பட்ட கம்பங்கள் பிடுங்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்படுகிறது.
இதில் பக்தர்கள் ஒருவர் மீது மற்றொருவர் மஞ்சள் நீரை ஊற்றி மகிழ்வார்கள். 3 கோவில்களிலிருந்து பிடுங்கப்படும் கம்பங்கள் மணிக்கூண்டு பகுதிக்கு எடுத்து வரப்படும்.
அங்கிருந்து ஈரோடு மாநகரின் முக்கிய சாலைகளில் கம்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படும். அப்போது பக்தர்கள் வழி நெடுங்கும் நின்று கம்பங்கள் மீது உப்பு, மிளகு வீசுவார்கள்.
அதன் பிறகு கம்பங்கள் காளிங்கராயன் வாய்க்காலில் விடப்படும். இதையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்படும் கம்பம், பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு சென்று 3 கோவில் கம்பங்களும் ஒன்று சேர்ந்து ஈஸ்வரன் கோவில் வீதி,
காமராஜ் வீதி, மீனாட்சிசுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் சாலை, சுவஸ்திக் கார்னர், சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோவில்,
நேதாஜி சாலை, மணிக்கூண்டு, பெரியார் வீதி, மரப்பாலம், மண்டபம் வீதி, கச்சேரி வீதி, ஆர்.கே.வி., சாலை, நகர போலீஸ் நிலையம், அக்ரஹாரம் வீதி வழியாக காரை வாய்க்காலில் கம்பம் விடப்படுகிறது.
இச்சாலை பகுதியில் வாகன ஓட்டிகள் வராமல், ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதேநேரம் இன்று மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
சேலம், திருச்செங்கோடு, நாமக்கலில் இருந்து வரும் வாகனங்கள், பள்ளிபாளையம் வழியாக காவிரி சாலை, கே.என்.கே. சாலை, மூலப்பட்டறை வழியாக திருநகர் காலனி, வ.உ.சி. பூங்கா பின்புறம் பயணிகளை இறக்கிவிட்டு, காவிரி சாலை வழியாக செல்ல வேண்டும்.
கோபி, சத்தி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், லோட்டஸ் ேஷாரூம் அருகே பயணிகளை இறக்கிவிட்டு, வீரபத்திர 2-ம் வீதி வழியாக வ.உ.சி. தெற்கு வாயில் வழியாக திரும்பி வீரபத்திர முதல் வீதி வழியாக சத்தி சாலையை அடைய வேண்டும்.
பவானி, அந்தியூர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள், அசோசியேசன் பெட்ரோல் பங்க் அருகே பயணிகளை இறக்கிவிட்டு திரும்பி செல்ல வேண்டும்.
திருச்செங்கோடு, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் இருந்து ஈரோடு வழியாக கோவை செல்லும் கனரக வாகனங்கள், காவிரி சாலை, திருநகர் காலனி, அசோசியேசன் பெட்ரோல் பங்க், வீரபத்திர வீதி, வீரப்பன்சத்திரம், கனிராவுத்தர் குளம், சித்தோடு வழியாக செல்ல வேண்டும்.
கோவை, திருப்பூரில் இருந்து வரும் வாகனங்கள், பெருந்துறை வழியாக பெருந்துறை சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா வலது புறம் திரும்பி பயணிகளை இறக்கிவிட்டு பெருந்துறை சாலையில் செல்ல வேண்டும்.
தாராபுரம், காங்கேயம், கொடுமுடி, கரூர், திண்டுக்கல் மார்க்கமாக வரும் வாகனங்கள் ஊர்வலம் புறப்பட்டு மணிக்கூண்டில் இருந்து ஈஸ்வரன் கோவில் சாலைக்கு திரும்பும் வரை, காளை மாட்டு சிலை, ெரயில்வே ஸ்டேஷன் சாலை, ஈ.வி.என்.சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, வாசுகி வீதி வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும்.
ஊர்வலம் காமராஜ் வீதி அடைந்ததும், காளை மாட்டு சிலையில் இருந்து பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும்.
கோவையில் இருந்து ஈரோடு வழியாக திருச்செங்கோடு, சேலம், நாமக்கல் வழியாக செல்லும் கனரக வாகனங்கள், பெருந்துறை சாலை, வீரப்பன்பாளையம் பிரிவு வழியாக,
வில்லரசம்பட்டி நால் ரோடு சென்று, கனிராவுத்தர் குளம், வீரப்பன்சத்திரம், 16-ம் எண் சாலை வழியாக பள்ளிபாளையம் வழியாக செல்ல வேண்டும். அல்லது ரிங்ரோடு வழியாக கொக்கராயன்பேட்டை வழியாக செல்ல வேண்டும்.
இதர இலகு ரக வாகன ஓட்டுனர்கள் கம்பம் வரும் வழிகளை தவிர்த்து மற்ற வழிகளை பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- விசேஷ நிகழ்ச்சிகளில் எவ்வளவு பெரிய மொய் பணம் கிடைத்தாலும் தாய்மாமன் சீருக்கே முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது.
- சீர்வரிசையை திண்டுக்கல்-பழனி சாலையில் மேளதாளங்கள், தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் கொண்டு வந்தனர்.
திண்டுக்கல்:
திருமணம், காதணி விழா, புனித நீராட்டு விழா உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளில் தாய்மாமன் சீர் கொடுப்பது என்பது தென் மாவட்டங்களில் பாரம்பரிய முறைப்படி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாகரிகம் வளர்ந்த காலத்திலும் இதுபோன்ற சீர்கொடுக்கும் முறை பழமை மாறாமல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
விசேஷ நிகழ்ச்சிகளில் எவ்வளவு பெரிய மொய் பணம் கிடைத்தாலும் தாய்மாமன் சீருக்கே முதல் மரியாதை கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த தேனீர் கடை உரிமையாளர் ஜெயபால் தனது மகள் ரம்யாவுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்தினார்.
தனியார் மண்டபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் ரம்யாவின் தாய்மாமன் பெருமாள் மற்றும் அவரது தம்பிகள் தனது அக்கா மகளுக்கு செய்ய வேண்டிய சீர்வரிசைகளான பட்டுச்சேலை, தங்க நகை, பழங்கள், அரிசி மூட்டை, ஆடு, பலசரக்கு சாமான்கள், பித்தளை, சில்வர் பாத்திரங்கள், பூமாலை, கேக் வகைகள், இனிப்பு உள்ளிட்ட பொருட்களை 15 மாட்டு வண்டிகளில் வைத்து ஊர்வலமாக திண்டுக்கல்-பழனி சாலையில் மேளதாளங்கள், தாரை தப்பட்டை முழங்க வாண வேடிக்கையுடன் கொண்டு வந்தனர்.
இதனை திருமண மண்டபத்துக்கு வந்திருந்த உறவினர்களும், பொதுமக்களும் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். தாய்மாமன்களுக்கு செய்ய வேண்டிய மரியாதையை கொடுத்து சீர்வரிசையை ரம்யாவின் பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
- கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணமும் நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி கதித்தமலை வெற்றி வேலாயுதசாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 18-ந்தேதி தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். 26-ந்தேதி கீழ் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இன்று 29-ந் தேதி திருவிழாவின் முக்கிய நிகழ்வாக காலை 7 மணிக்கு கதித்தமலை ஆண்டவருக்கு மகா அபிஷேகம் அதனைத் தொடர்ந்து மகா தீபாராதனையும், கதித்தமலை ஆண்டவர் சாமி ரத ஆரோகணமும் நடைபெற்றது.
பின்னர் காலை 10 மணிக்கு மேல் மலைதேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு மகா தரிசனம், சுப்பிரமணியசாமி வள்ளி தெய்வானையுடன் புஷ்ப பல்லக்கில் சாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு ஊத்துக்குளி நகரம் களை கட்டியுள்ளது. நாளை 30-ந்தேதி மஞ்சள் நீராட்டு விழாவுடன் தைப்பூச தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவடைகிறது.
