என் மலர்
நீங்கள் தேடியது "டெம்போ"
- மதுராபிரிஜியா ஓட்டி வந்த தண்ணீர் டேங்க் ஏற்றி வந்த டெம்போ பன்னீர்செல்வம் மீது மோதியது
- சிகிச்சை பலனின்றி பன்னீர் செல்வம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி :
தென்தாமரைகுளம் அருகே உள்ள முகிலன்குடியிருப்பை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 70). இவர் அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 24-ந்தேதி பன்னீர் செல்வம் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரியில் இருந்து மணக்குடி சாலையில் முகிலன்குடியிருப்பு முத்தாரம்மன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் கீழமணக்குடி அருகே உள்ள ஒரு தும்பும் மில்லில் வேலை பார்த்து வரும் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மதுராபிரிஜியா ஓட்டி வந்த தண்ணீர் டேங்க் ஏற்றி வந்த டெம்போ பன்னீர்செல்வம் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக பன்னீர் செல்வத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பன்னீர் செல்வம் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மூத்த மகள் அகிலா தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நள்ளிரவு 12 மணிக்கு தூத்துக்குடி நோக்கி புறப்பட்டு சென்றது.
- கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்று ரோட்டோரமாக இருந்த மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் உள்ள ஒரு மீன் கம்பெனியில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்று நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தூத்துக்குடி நோக்கி புறப்பட்டு சென்றது.
இந்த டெம்போவில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கணவன்-மனைவியான ராஜீவ் (வயது 31), டிஜினா (28) ஆகியோரும் அங்குள்ள ஒரு மீன் கம்பெனியில் வேலை செய்வதற்காக சென்றனர். இந்த டெம்போ அஞ்சுகிராமம் அருகே 4 வழிச்சாலையில் செல்லும் போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சென்று ரோட்டோரமாக இருந்த மரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் அந்த டெம்போவில் இருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த டிஜினா (28) என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இந்த விபத்தில் அவரது கணவர் ராஜீவ் மற்றும் டிரைவர் ஆகிய 2 பேரும் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலகம் மற்றும் நிலைய சிறப்பு அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் விரைந்து சென்று சுமார் 2 மணி நேரம் போராடி அந்த டெம்போவில் படுகாயத்துடன் இருந்த டிஜினாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மஞ்சத்தோப்பு பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- ராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கொல்லங்கோடு :
கொல்லங்கோடு போலீஸ் இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) அருள்பிர காஷ், சப்-இன்ஸ் பெக்டர் ஹரிகுமாரன் நாயர் மற்றும் போலீசார் கிராத்தூர் பகுதியில் கடந்த 7-ந்தேதி ரோந்து சென்றனர்.
அப்போது கிராத்து ரை அடுத்த கரியறவிளை பகுதியில் ஒரு மினி டெம்போவில் கேரளாவுக்கு செம்மண் கடத்திக் கொண்டு வருவதை பார்த்து டெம்போவை தடுத்து நிறுத்தி னர். அப்போது திடீரென்று ஓட்டுநர் டெம்போவை நிறுத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து போலீசார் டெம்போவை பறிமுதல் செய்து டிரைவரை தேடி வந்தனர். மஞ்சத்தோப்பு பகுதியை சேர்ந்த ராஜன் என்பது தெரியவந்தது. இவர் கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மஞ்சத்தோப்பு பகுதியில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கொல்லங் கோடு போலீஸ் இனெ்ஸ் பெக்டர் தாமஸ் மற்றும் போலீசார் விரைந்து சென்று தலைமறைவாக இருந்த ராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சிகிச்சையில் இருந்த பாட்டியும் சாவு
- குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜவகர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
கன்னியாகுமரி,நவ.20-
கொட்டாரம் ராமர் கோவில் பின்புறம் உள்ள பகுதியை சேர்ந்தவர் ஜவகர் (வயது 31). இவர் தண்ணீர் கேன் போடும் டெம்போவில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவரது பாட்டி புஷ்பம் (75) உடல்நிலை பாதிக்கப்பட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை உடன் இருந்து கவனித்து வந்த ஜவகர், பாட்டி இறந்து விடுவாரோ என்ற மன வருத்தத்தில் இருந்து வந்தார்.
இதனால் மனம் உடைந்த அவர் நேற்று மாலை தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன் பேரில் கன்னியா குமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜவகர் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அதன் பிறகு உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இதற்கிடையில் பாட்டி புஷ்பமும் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக இறந்து விட்டார். பேரனை தொடர்ந்து பாட்டியும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.