என் மலர்
நீங்கள் தேடியது "செய்த"
- கடன் தொல்லையால் தூக்கில் தொங்கினார்
- 12 வயதில் ஒரு மகனும் 7வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
கன்னியாகுமரி:
தக்கலை அருகே உள்ள மருந்துகோட்டை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கற்பகம் (வயது 33). இவர்கள் காதல் திருமணம் செய்துள்ளனர். 12 வயதில் ஒரு மகனும் 7வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இவர்கள் கொரோனா காலத்தில் சுய உதவி குழுக்க ளிடம் கடன் வாங்கியதால் கட்ட முடியாமல் தவித்துள்ளனர். இதனால் கணவன்- மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை மணிகண்டன் வீட்டிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் கடைக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் இருந்த கற்பகம், தனது குழந்தைகளை வீட்டிற்கு வெளியே அனுப்பி விட்டு மின்விசிறியில் சேலையில் தூக்கில் தொங்கினார். வெகுநேரம் ஆகியும் தாயார் வெளியே வராததால் இளைய மகள் அழ ஆரம்பி த்தாள். உடனே அருகில் உள்ளவர்கள் கற்பகத்தின் வீட்டுக்கு சென்று கதவை தட்டிய போது திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது கற்பகம் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கற்பகம் உடலை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து கற்பகம், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது சம்மந்தமாக மணிக ண்டன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
- 12 மதுபாட்டில்கள், 10 பண்டல் புகையிலை பாக்கெட் இருந்ததை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே கல்லடி மாமூடு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையில மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் குலசேகரம் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். நேற்று மாலை அதிரடியாக கல்லடி மாமூடு பகுதியை சேர்ந்த ராஜேஸ் (வயது 40) என்பவர் புகையில விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
உடனே போலீசார் அவரின் வீட்டை சோதனை செய்த போது 12 மதுபாட்டில்கள், 10 பண்டல் புகையிலை பாக்கெட் இருந்ததை பறிமுதல் செய்தனர். அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.
அவருக்கு எங்கியிருந்து புகையிலை பாக்கெட் வருகிறது எந்த பகுதியில் விற்பனை செய்து வந்தார் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தாரா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
- நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
- காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இதனால் காலை, மாலை நேரங்களில் வடசேரி மற்றும் அண்ணா பஸ் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்படும். பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் விபத்துக்கள் நடக்க வாய்ப்புள்ளதாகவும் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டுக்கு புகார்கள் சென்றது.
ஏற்கனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ராமன் புதூர் பகுதியில் பஸ்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இந்த நிலையில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையிலான போலீசார் கேப் ரோடு பகுதியில் நேற்று மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து கோட்டார் நோக்கி வந்த பஸ்களில், மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்தனர். உடனடியாக அந்த பஸ்களை போக்கு வரத்து பிரிவு போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.
படியில் பயணம் நொடியில் மரணம். எனவே மாணவர்கள் கவனமாக பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும். பெற்றோர்கள் உங்களை படிப்பதற்காக கஷ்டப்பட்டு பள்ளிக்கு அனுப்பி வைக்கி றார்கள். நீங்கள் பஸ்களில் வீட்டிற்கு செல்லும் போதும் பள்ளிக்கு வரும்போதும் படிக்கட்டில் பயணம் செய்யாமல் பஸ்சுக்குள் அமர்ந்து பயணம் செய்வது நல்லதாகும் என்று அறிவு ரைகளை கூறினார்கள்.
ஒரு சில பஸ்களில் கூட்டம் அதிகமாக இரு ந்ததையடுத்து மாணவர்களை அந்த பஸ்சிலிருந்து இறக்கி பின்னால் வந்த பஸ்களில் போலீசார் அனுப்பி வைத்தனர்.
- 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார்.
- இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு.
கன்னியாகுமரி:
திருவட்டார் அருகே நீங்காரவிளை, முளகுமூடு, பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 27). இவர் சினேகா (25) என்ற பெண்ணை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தி வந்தார்.
இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் உண்டு. வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது மது அருந்தி விட்டு வந்து மனைவி சினேகாவிடம் தகராறு செய்வது வழக்கம்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மது குடித்துவிட்டு வந்து மனைவி சினேகாவை அடித்து கொடுமை படுத்தி உள்ளார். அவர் தனது 3 பிள்ளைகளையும் அழைத் துக் கொண்டு தன் தந்தை வீட்டுக்கு சென்றார். மனைவி தன்னை விட்டு சென்றதை எண்ணி மன வேதனையில் சுரேஷ் இருந்து வந்தார். சம்பவத் தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறி கம்பியில் தூக்கில் தொங்கி னார்.
இதை பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் பார்த்து சினேகாவுக்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்து உடனே திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சினேகா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
- ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒர்கிங் சென்டர் கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
- உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறை ஊராட்சி மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், மாங்கோடு மற்றும் புலியூர் சாலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணி களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பில் ரூ.10.40 லட்சம் மதிப்பில் மறு சீரமைக்கப்பட்டு வரும் கட்டிட பணிகளை பார்வை யிட்டேன். பணிகளை விரைந்து முடித்து குடியி ருப்பு பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மணியங்குழியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணியும் ஆய்வு செய்யப்பட் டது.அதனைத்தொடர்ந்து மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுய உதவி குழு கட்டிட பணி களை ஆய்வு மேற்கொண்ட தோடு பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒர்கிங் சென்டர் கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
கட்டுமான பணிகளின் தரத்தினை உறுதி செய்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட மாங்கோடு ஊராட்சி பகுதியில் பிர தான் மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.69 கோடி மதிப்பில் வெள்ளாடிச்சிப்பாறை-ஓடவள்ளி முதல் நெட்டா வரை 2,400 மீட்டர் நீளத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள தார் சாலையை பார்வை யிட்டேன். சாலை யின் தரம் ஆய்வு செய்யப் பட்டது. மேலும், புலி யூர்ச்சாலை ஊராட்சி யில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டி டத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலு வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
உலகப்புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நவராத்திரி திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இந்த திருவிழா 24-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகள், சிறப்பு வழிபாடு கள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், வாகன பவனி, சப்பர ஊர்வலம், நாதஸ்வர கச்சேரி, பாட்டு கச்சேரி, பரதநாட்டியம், சமய உரை போன்ற பல் வேறு நிகழ்ச்சிகள் நடக்கின் றன.
10-ம் திருவிழாவான 24-ந்தேதி அம்மன் பாணா சுரனை வதம் செய்து அழிக்கும் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. 1-ம் திருவிழாவான நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலையில் அம்மன் கொலு மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி நாகர்கோ வில் அருகே உள்ள இருளப்பபுரம் பிரசன்ன பார்வதி பசுபதீஸ்வரர் கோவில் பெண் சிவனடியார்கள் கன்னியா குமரி பகவதி அம்மன் கோவிலில் உழவாரப்பணி யில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள்அம்மன் கொலு விருக்கும் கொலுமண்டபம், 24 மணி நேரமும் அணையா விளக்கு எரிந்துகொண்டி ருக்கும் வாடா விளக்கு மண்டபம், கொடிமர பிரகாரம், மூலஸ்தான கருவறை முன்பு உள்ள மண்டபம், உள்பிரகாரம், வெளி பிரகாரம் மற்றும் அனைத்து சன்னதி பகுதி களிலும் இந்த உழவாரப்பணி நடந்தது. சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் சிவனடி யார்கள் கோவில் முழுவதும் தண்ணீர் மூலம் கழுவி சுத்தம் செய்தனர். இந்த உழவாரப்பணி நடந்ததை தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் வளாகம் முழுவதும் புதுப் பொலிவுடன் காட்சி அளிக்கிறது.
- வருகிற 21-ந்தேதி நடக்கிறது
- லம் விடப்பட உள்ள வாகனங்கள் 19-ந்தேதி முதல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படும்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 42 வாகனங்கள் ஏலம் 21-ந்தேதி காலை 11 மணிக்கு நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கிறது. ஏலம் விடப்பட உள்ள வாகனங்கள் 19-ந்தேதி முதல் ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்தி வைக்கப்படும். இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் ஏலம் நடைபெறும் நாள் அன்று காலை 8 மணிக்கு ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ரசீது பெற வேண்டும். ஒரு வாகனத்தை ஏலம் எடுத்த பிறகு மற்றொரு வாகனத்தை ஏலம் எடுக்க வேண்டும் என்றால் மீண்டும் ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தி ஏலத்தில் கலந்துகொள்ளலாம்.
நுழைவு கட்டணம் ரூ.10 செலுத்த வேண்டும். ஏலம் எடுக்கப்பட்ட வாகனத்துக்கு ஏல தொகையுடன் சேர்த்து 18 சதவீத ஜி.எஸ்.டி.யை ஒரு வாரத்துக்குள் செலுத்தி எடுத்துக்கொள்ளலாம். ரூ.5 ஆயிரம் முன்பணம் செலுத்தியவர்கள் வாகனத்தை ஏலம் எடுக்கவில்லை என்றால் முன்பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை (நாகர்கோவில்) 04652-220377, தக்கலை-04651-271198, துணை போலீஸ் சூப்பிரண்டை 04651-224833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.