search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "General Examination"

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவடைந்தது சமூக அறிவியல் தேர்வை மாணவர்கள் உற்சாகமாக எழுதினர்.
    சேலம் :

    தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி.,  பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடக்கவில்லை.

    நடப்பு  ஆண்டு கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்த நிலையில்,  எஸ்.எஸ்.எல்.சி.,  பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள்  நடத்தப்பட்டுள்ளன. இதில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்கியது.

    சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள  182    மையங்களிலும், நாமக்கல் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட  மையங்களிலும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்றது.

    தேர்வு முடிவடைந்தது இம்மையங்களில் அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதிப்பள்ளிகளை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் உற்சாகமாக தேர்வுகள் எழுதினர்.
     
    கடைசி நாளான இன்று (30-ந்தேதி) திங்கட்கிழமை  சமூக அறிவியல் பாடம் தேர்வு நடைபெற்றது. காலை  10.15 மணிக்கு தொடங்கி மதியம் 1.15 மணிக்கு தேர்வு முடிவடைந்தது. 

    வாழ்த்துக்கள்... தேர்வு  நிறைவடைந்ததை அடுத்து தேர்வு மையங்களில் இருந்து வெளியே வந்த மாணவ-மாணவிகள் தங்கள் வகுப்பில்  பயின்றவர்களை சந்தித்து,   ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்.

    மேலும் புகைப்படம் எடுத்தும்,  சீருடைகளில் மாறி மாறி மை தெளித்தும், செல்போன் நம்பர் பரிமாறிக்கொண்டும்   மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர்.
    ×